Wednesday 24 June 2015

எதற்கு இந்த மானியம்..?

டெல்லி பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுடைய உணவகத்தில் அனைத்து உணவுகளும் மிகக் குறைவான விலையில் வழங்கப்படுகின்றன. இங்கே ஆட்டுக்கறி வறுவல் - ரூ.20, கோழிக்கறி வறுவல்-ரூ.29, அவிச்ச முட்டை, மசாலா தோசை - ரூ.6. இப்படி பல உணவுப் பொருட்களும் 
மிகவும் மலிவாக நமது எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகின்றன


அரசு மானியம் வழங்குவதால் இது சாத்தியமாகிறது. இப்படி மலிவான விலையில் நமது எம்.பி.க்களுக்கு உணவு வழங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ 60 கோடிக்கும் மேல் அரசு மானியம் வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் வி..பி. க்கள் எனப்படுகிற 
எம்.எல்..க்கள், எம்.பி.க்கள்,அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் அனைவருமே
சாதாரண மக்களுக்கு இல்லாத பல விஷேச சலுகைகளைப் பெற்றவர்களாயிருக்கின்றனர். அதிலும் சாதாரண மக்களின் வரிப்பணத்திலேயே அவர்கள் 
இந்தச் சலுகைகளை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உண்ணும் உணவுகளுக்குக் கூட மக்களின் பணத்தில் இத்தகைய சலுகை வழங்கப்பட வேண்டுமா..?
எதற்காக இவ்வளவு குறைந்த விலையில் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன..?நமது மக்களின் பிரதிநிதிகள் என்ன ஏழைகளா..? அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா..?

நமது எம்.பி.க்களில் பெரும்பாலோனோர் கோடிஸ்வரர்கள். ஒரு சிலர் வேண்டுமானால் இலட்சாதிபதிகளாக இருக்கலாம். இவர்கள் அலவன்ஸ்கள் உட்பட மாத சம்பளமாக சுமார் ரூ 1,50,000 பெறுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் உணவை சாதாரண மக்கள் வாங்கிச் 
சாப்பிடுகிற அதே விலையில் வாங்கிச் சாப்பிட முடியாதா..? அல்லது அப்படிச் செய்தால் 
அவர்களது கௌரவம் குறைந்து விடுகிறதா..?

நமது மக்கள் பிரதிநிதிகள் சாப்பிடுகிற சாப்பாட்டிற்கு கூட அவர்களுக்கு வாக்களித்த மக்கள்தான் பணம் தர வேண்டுமா..?

இது எந்த வகையிலான வி..பி. கலாச்சாரம்..?


இந்நிலை நீடிக்கக் கூடாது.எம்.பி.க்களுக்கு அளிக்கப்படுகிற இத்தகைய உணவு மானியத்தை மத்திய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த மானியத்தை இரத்து செய்ய அரசை வலியுறுத்த வேண்டும்.

எம்.பி.க்களும் எம்.எல்..க்களும் மக்களின் பிரதிநிதிகள்தான்; எஜமானர்கள் அல்லர்.

No comments:

Post a Comment