Wednesday 26 December 2012

இது நியாயமான கோரிக்கை.




தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, தமிழகத்தில் அமைந்துள்ள நெய்வேலி அனல்மின் நிலையம், கூடங்குளம் கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்ற மத்திய அரசின் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தற்காலிகமாக தமிழகத்திற்கே தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஏற்கனவே வை.கோ, இராமதாஸ், தா. பாண்டியன் போன்ற தலைவர்களும் இதே வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். 

மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும், அதற்காக உச்சநீதி மன்ற்த்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வழங்க மின்வழிப் பாதை இல்லை என்றும் அதனால்தான் தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க முடியவில்லை என்றும் காரணம் கூறி வருகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது முதல்வரின் கோரிக்கை முழு நியாயமுடையதாகிறது.

பிற மாநிலங்களிலிருந்து மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் தர மின்வழிப்பாதை இல்லை எனும்போது தமிழகத்திலேயே இருக்கும் மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தருவது பிரச்னைக்கு சரியான தீர்வுதானே. 

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து தி.மு.க. சமீபத்தில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.தமிழகத்தில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல,  தி.மு.க. வசமிருக்கும் 18 எம்.பி.க்களும் கூட தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். என்வே தி.மு.க.தலைவர் கருணாநிதியும் மத்திய அரசை இதே கோரிக்கைக்காக வலியுறுத்த வேண்டும். தி.மு.க.வின் ஆதரவில்தான் மத்திய அரசே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையின் தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க மத்திய அரசிடமிருந்து கூடுதல் மின்சாரம் பெற கருணாநிதியோ அல்லது தி.மு.க. எம்.பி.க்களோ இதுவரை எந்த முயற்சியும் மேற்கொண்டதில்லை; வெறும் வேண்டுகோள் கூட விடுத்ததில்லை..

என்வே, கருணாநிதியும் தமிழகத்திலிருக்கும் மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்குமாறு பிரதமரை வலியுறுத்த வேண்டும் .வெறும் அறிக்கையோடு நின்று விடாமல் தன் ஆதரவில் செயல்படும் அரசை அனைத்து முறைகளையும் பயன்படுத்தி நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையேல் இப்போது மக்களவையில் தி.மு.க.விற்கு இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையான 18 அடுத்த  தேர்தலில் 0 ஆக மாறிவிடும். 



Sunday 23 December 2012

கருணாநிதியின் குறைந்தபட்ச செயல்திட்டம்





             பா.ஜ.க்.வோடு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே
கூட்டு சேர்ந்ததாகவும் அதன் உண்மையான முகம் தெரிந்தவுடன் கூட்டணியை
விட்டு வெளியேறிவிட்டதாகவும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
           ரூ 1,76,000 கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஊழலில்
தொடர்புடைய தனது மகள் கனிமொழியையும் பேரன் தயாநிதி மாறனையும்
வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக கருணாநிதி எத்தனையோ காரியங்களை செய்து
கொண்டிருக்கிறார்.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில்
முதலில் ஐ.மு.கூ. அரசுக்கு எதிராக எந்தக் கட்சி தீர்மானம் கொண்டு
வந்தாலும் ஆதரிப்போம் என்று கூறிய கருணாநிதி பின்பு தலைகீழ்
பல்டியடித்து, கோடிக்கணக்கான வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில்
அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததும் கூட தன் குடும்பத்தினரை 2ஜி
வழக்கிலிருந்து காப்பாற்றத்தான். ஆனால், பா.ஜ.க.வரக்கூடாது
என்பதற்காகத்தான் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஒரு பொய்யை சிறிது கூட
வெட்கமில்லாமல் சொல்கிறார்.
            அயோத்தியில் சிறிய அளவில் இராமருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது
1992ல்; இதற்குப் பிறகுதான் ( 1999 )கருணாநிதி பா.ஜ.க.வோடு கூட்டே
வைத்தார்.அயோத்தியிலிருக்கும் இராமர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு,
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்கள் சொந்த ஊரான குஜராத் திரும்பிக்
கொண்டிருந்த சுமார் 60 ஹிந்துக்கள் கோத்ரா என்ற இடத்தில் உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக் பெரும் வன்முறைக் கலவரங்கள்
நிகழ்ந்த ஆண்டு 2002. அப்போதும் கருணாநிதி பா.ஜ.க. கூட்டணியில்
ஒட்டிக்கொண்டுதான் இருந்தாரே தவிர வெளியேறவில்லை. .
என்வே குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கும் கருணாநிதி பாஜ.க. கூட்டணியை
விட்டு வெளியேறியதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
           ஆனால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு ஏன் 2004ல் கருணாநிதி
வெளியேறினார் ..? அதற்கு 2 காரணங்களிருக்கின்றன.
           1)முரசொலி மாறன் இறந்த பிறகு தனது குடும்பத்திலிருந்து
ஒருவருக்கு ( கனிமொழி அல்லது தயாநிதி மாறனுக்கு ) மத்திய அரசில் பதவி
வழங்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டார். ஆனால் வாஜ்பாய் அதற்கு
மறுத்துவிட்டார்.
           2)ஐ.மு.கூ. ஆட்சியின்போது, மத்திய அமைச்சர்களாயிருக்கும்
தி.மு.க.வினர் எவ்வளவு ஊழல் செய்தாலும் அது ஆயிரக்கணக்கான
கோடிகளாயிருந்தாலும் பிரதமர் மன்மோகன்சிங்கும் சோனியாவும் மௌனமாய்
வேடிக்கை பார்த்துக் கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்க
அனுமதிக்கின்றனர். ஆனால், பா.ஜ.க.ஆட்சியின்போது, வாஜ்பாய் அவர்கள்
தி.மு.க. அமைச்சர்கள் ஊழல் செய்ய அனுமதிக்கவில்லை.
           இவ்விரண்டு காரணங்களுக்காகத்தான் கருணாநிதி அப்போது
பா.ஜ.க.கூட்டணியை விட்டு வெளியேறினார்.
ஆனால், இப்போது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை பா.ஜ.க.மீறியது அது இது
என்று மக்கள் காதுகளில் பூ சுற்றுகிறார்.
          ஆனால், ஒரு விசயம் உண்மைதான். கருணாநிதியின் அரசியலுக்கு ஒரு
குறைந்தபட்ச பொதுத் திட்டம் உண்டு. கருணாநிதிக்கு தான், தனது மகன்கள்,
மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள் கொள்ளுப்பேத்திகள்
மற்றும் பிற உறவினர்கள் அனைவரும் மத்திய மற்றும் மாநில அரசுகளில்
பதவிகளில் இருக்க வேண்டும்; அந்தப் பதவிகளைப் பயன்படுத்தி கோடி கோடியாய்
சம்பாதித்து பெரும் வள்த்தோடு தனது குடும்பம் இருக்க வேண்டும்.
இந்தப் பொதுத் திட்டத்தை வாஜ்பாய் அரசு மீறியதால்தான் 2004ல்கருணாநிதி
பா.ஜ.க.கூட்டணியை விட்டு வெளியேறினார். இந்தப் பொதுத் திட்டத்தை சோனியா
காந்தி ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் அவர் ஐ.மு.கூ.கூட்டணியில்
இருக்கிறார். எப்போதாவாது சோனியா இந்தப் பொதுத் திட்டத்தை மீறினால்
அவ்வளவுதான் கருணாநிதி அப்போது ஐ. மு.கூ. வை விட்டும் வெளியேறுவார்..

Friday 21 December 2012

நரேந்திர மோடி - வெற்றி மகத்தானது.


நரேந்திர மோடி - வெற்றி மகத்தானது.

குஜராத்தில் டிசம்பர் 13 மற்றும் 17 தேதிகளில் நிகழ்ந்த தேர்தலில் நரேந்திர மோடி 3 ஆம் முறையாக வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.இந்த வெற்றி குஜராத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய எண்ணற்ற பணிகளுக்கு கிடைத்த மக்களின் அங்கீகாரமாகும். அவர் தேர்தலின்போது எந்த இலவசத்திட்டங்களையும் அறிவிக்கவில்லை; மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களையே அறிவித்தார். காங்கிரஸ் இலவச லேப்டாப் போன்றவற்றை அறிவித்தது. ஆனால், மக்கள் நரேந்திர மோடிக்கே மீண்டும் வெற்றி மாலைச் சூட்டினார்கள்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை வீழ்த்த பல்வேறு முயற்சிகளைக் கையாண்டது. மாநிலத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியைக் குறைத்து மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை முடக்கப்பார்த்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே 2002ல்  நிகழ்ந்த குஜராத் கலவரத்திற்கு மோடிதான் காரணம் என்று காங்கிரஸ் திட்டமிட்டு மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்தது. பணத்திற்கு விலைபோன் சில .பி.எஸ். அதிகாரிகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் பயன்படுத்தி மோடியை குற்றம் சாட்டிவந்தது.அதன்மூலம் முஸ்லீம்கள் மத்தியில் அவர்மீது வெறுப்பை உண்டாக்கி அவரை ஒரு மதவெறியர்போல் சித்தரித்து அரசியல் ஆதாயம் அடைய நினைத்தது. ஆனால், இம்முயற்சியும் பலிக்கவில்லை. மாநிலத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து முன்னேறி அதன் பலனை அனுபவித்த முஸ்லீம்கள் மோடியை ஆதரித்தனர், மத அடிப்படைவாதத்தில் ஊறியவர்கள் மட்டுமே காங்கிரசின் சதிக்குப் பலியாகினர். பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் போன்ற தேசியவாதத்தில் நம்பிக்கையுடைய முஸ்லீகள் மோடியை ஆதரித்து காங்கிரசின் பொய்யை தவிடுபொடியாக்கினர். மோடி அனைத்து கெட்ட நோக்கிலான பிரச்சாரத்தையும் முறியடித்து மீண்டும் வெற்றிவாகை சூடினார்
பா... வின் முன்னாள் முதல்வாரான கேசுபாய்ப் பட்டேலுக்கு ஆசை காட்டி அவரை தனிக்கட்சி துவக்க வைத்து, மறைமுகமாக அவரோடு கூட்டணியும்  வைத்துக் கொண்டு மோடியை வீழ்த்த நினைத்தது காங்கிரஸ்.இதனால் நிகழ்ந்த ஓட்டுப் பிளவைப் பயன்படுத்தி காங்கிரஸ் கடந்த தேர்தலை விட ஒரு சில இடங்கள் கூடுதலாகப் பெற்றாலும் கேசுபாய்க் கட்சி பரிதாபமான படுதோல்வியைச் சந்தித்தது. மோடி அனைத்தையும் கடந்து மக்கள் ஆதரவோடு பெருவெற்றி பெற்றார்.
அவரது வெற்றி,
தேச நலனில் அக்கறையுடையோர் பெருமைப்பட வேண்டிய வெற்றி;
மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்கள் வழிகாட்டியாய்க் கொள்ள வேண்டிய வெற்றி.
தேசியவாதிகளின் வெற்றி.

அவரது வெற்றி
குஜராத்தின் வளர்ச்சிக்கு தொடர்கதையாகும்;
இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னுரை ஆகும்.

வளர்ச்சியடைந்த குஜராத்தின் 6 கோடி மக்கள் மீண்டும் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்;
எங்கும் கோடி கோடியாய் இலட்ச்க்கணக்கான கோடியாய் ஊழல் மலிந்து போய்,வளர்ச்சிக்காக போராடிக் கொண்டிருக்கும் 120 கோடி இந்திய மக்கள் மோடியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
               

Saturday 15 December 2012

போராட்டம் மக்களுக்காக அல்ல; தி.மு.க. நலனுக்காக.


போராட்டம் மக்களுக்காக  அல்ல; தி.மு.. நலனுக்காக.

மின்வெட்டை எதிர்த்து தி.மு.. ஆர்ப்பாட்டம் ந்டத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் தி.மு..போட்ட இரட்டை வேடத்தால் அக்கட்சி மீது கடும் அதிருப்தி அடைந்த நிலையில் இருக்கும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே தி.மு.. இப்போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் இப்போது நிலவும் மின்வெட்டு பொதுமக்களை மிகவும் பாதித்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தின் வளர்ச்சி இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திமு.. ஆட்சியின்போது கூட இதே அளவிற்கு கடுமையான மின்வெட்டுதான் நிலவியது. தி.மு.. ஆட்சியின்போது குறைந்த அளவே மின்வெட்டு இருந்தது என்று கருணாநிதி கூறுவது அப்பட்டமான பொய்யாகும். இரண்டு வருடத்திற்கு முந்தைய பாதிப்பை மக்கள் இப்போது மறந்து விட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மின்வெட்டில்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று .தி.மு.. அளித்த வாக்குறுதி நிறைவேறவில்லை. மாநிலம் இன்னும் கடும் மின்வெட்டில் சிக்கித் தவித்துக்கொண்டுதானிருக்கிறது. ஆனால், இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
கடந்த தி.மு.. ஆட்சியில் மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தில் 1000 மெகாவாட் வரை இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் வரை மின்சாரம் தரத் தயாராயிருக்கும் மத்திய .மு.கூ. அரசு தமிழகத்திற்கு மின்சாரம் தர மறுக்கிறது.

மத்தியத் தொகுப்பிலிருக்கும் உபரி மின்சாரத்தை ஆந்திரத்திற்கும் கேரளாவிற்கும் அம்மாநிலங்கள் கேட்காமலேயே வழங்குகிற மத்திய .மு.கூ.அரசு தமிழக அரசு பலமுறை கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் கூட தமிழகத்திற்கு வழங்க மறுக்கிறது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் நீர்மின் நிலைய உற்பத்தி குறைந்திருக்கிறது.

தமிழகத்திற்கு போதுமான நிலக்கரி மத்திய அரசு ஒதுக்காததால் அனல்மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பல காரணங்களால் தமிழக மக்கள் மின்வெட்டிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி கடுமையான பல தடைகளை சந்த்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட தமிழக அரசு மின் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு முயற்சிகளை உற்தியுடனும் உண்மையுடனும் மேற்கொண்டுவருகிறது.சூரிய மின் உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு சலுகைகளை அறிவித்து நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. இதன் பலன் கிடைக்க சில வாரங்கள் ஆகலாம்; சில மாதங்கள் ஆகலாம்
மக்கள் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தி.மு.. மத்திய அரசில் கூட்டணியில் இருக்கிறது;
மத்திய அமைச்சரவையில் கருணாநிதியின் மகன் அழகிரி உட்பட பலர் அமைச்சர்களாயிருக்கின்றனர். தி.மு..விற்கு 18 எம்.பி.க்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தானே. இவர்கள் இதுவரை ஒரு முறையாவது  தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கக் கோரி பிரதமரையோ சோனியாவையோ வலியுற்த்தியதுண்டா ..?தன்னுடைய மகன்களுக்கும் பேரன்களுக்கும் மத்திய அரசில் பணம் சம்பாதிக்க வசதியான இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காக 2 நாட்கள் குடும்பத்தோடு டில்லியில் முகாமிட்டு சோனியாவிடம் கெஞ்சிய கருணாநிதி தமிழக மக்களின் மின்தேவைக்காக ஒருமுறையாவது பிரதமரிடமோ சோனியாவிடமோ வேண்டுகோள் விடுத்திருக்கிறாரா ..?
இல்லை.. இல்லவே இல்லை.
ஏனெனில் தமிழகத்தில் மின்தடை நீங்க வேண்டும் என்பது கருணாநிதியின் நோக்கமல்ல; மின்தடை இன்னும் கடுமையாக வேன்டும் என்பதுதான் அவரது ஆசை. அப்போதுதான் .தி.மு.. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மீண்டும் தி.மு..விற்கு வாக்களிப்பார்கள் என்பது அவரது கணக்கு. அதனால்தான் தி.மு.. அங்கம் வகிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய மின்சாரத்தைக் கூட தர மறுக்கிறது.
என்வே தி.மு.. நடத்தும் போராட்டம் மின்வெட்டு நீங்கி தமிழகம் ஒளி பெற் அல்ல. ஒருபுறம் மறைமுகமாக மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கவிடாமல் செய்து, மறுபுறம் தமிழக அரசைக் குற்றம் சாட்டி தான் அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே கருணாநிதி இந்த நாடகத்தை நடத்துகிறார்.