Sunday 3 January 2016

கடும் பதிலடியே தேவையான நடவடிக்கை.


பஞ்சாப் பதன்கோட் விமான தளத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலை நமது பாதுகாப்பு படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து   முறியடித்து தேசத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அம்மாவீரர்களின் தியாகத்தை தேசம் போற்றுகிறது.
பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்களே இந்த தாக்குதலுக்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்தியில் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய தாக்குதல்களுக்கும்  நமது இராணுவத்தினர் கடுமையான பதிலடி கொடுத்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் சென்ற பிரதமர் மோடி எவ்வித முன்னேற்பாடோ முன்னறிவிப்போ இன்றி பாகிஸ்தானுக்குச் சென்று நவாஸ் செரீப்பை சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தானின் இராணுவமும் அதன் உளவு ஸ்தாபனமான .எஸ்.. யும் இருக்கக்கூடும் என்பது தெளிவு. பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடல்ல; அங்கே அதன் இராணுவமும் உளவு ஸ்தாபனமும் பிரதமருக்கு கட்டுப்படாமல் பல நேரங்களில் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பேருந்து விட்டபோது அந்நாட்டு இராணுவம் கார்கிலில் ஊடூருவல் நடத்தியது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தானில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜெய்ஷ்- -முகமது, லஷ்கர்--தோய்பா போன்ற இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத இயக்கங்கள் எல்லாம் . எஸ்..மற்றும் பாகிஸ்தானின் ஆதரவில் இயங்கிக் கொண்டிருப்பவையே. இந்த தாக்குதலிலும் மேலே கூறிய இயக்கங்களே பின்னணியில் இருக்கும். பாகிஸ்தானின் ஆதரவிலான இத்தகைய பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க அரசு தன்னுடைய நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் .
இந்த மதவெறி பிடித்த பயங்கரவாத அமைப்புக்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாம் நினைத்தால் அது வெறும் கனவாகவே இருக்கும். எனவே இந்த பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்களை ஒழித்துக்கட்டும் இரகசிய நடவடிக்கைகளில் நமது உளவு ஸ்தாபனம் ஈடுபடுத்தப்பட வேண்டும். இரு நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மட்டுமே மீற வேண்டும் .. நம் பதிலடி மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில்லை; இதுபோன்ற சமயங்களில் நமது இராணுவத்தினரும் உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் இராணுவத்தினரை கொன்று குவிக்கலாம்.
இந்தியாவை சீர்குலைக்க நினைப்பவர்கள் உலகின்  எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை இரகசிய நடவடிக்கைகளின் மூலம் தீர்த்துக்கட்டப்பட வேண்டும். ஒரு இந்திய வீரர் உயிரிழந்தாலும் பல பயங்கரவாதிகளும் அவர்களுக்குத் துணைபோகும் பாகிஸ்தான் படைவீரர்களும் கொல்லப்படுவார்கள் என்பது உறுதியாக்கப்பட வேண்டும்.