Sunday 29 April 2012


 இது என்ன மாற்றம் ..?
ஏனிந்த மாற்றம் .. ?

கருணாநிதி மீண்டும் இலங்கைத் தமிழர்களை காக்க வந்த அவதார முகமூடியை அணிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

தனி ஈழமே தீர்வு என்கிறார்; டெஸோ மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்கிறார்; தமிழர் நலனுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அளிக்கத் தயார் என்கிறார்; இன்னும் என்னென்வோ அள்ளி விடுகிறார்.

பொதுவாக கருணாநிதியைப் பற்றி ஒரு கருத்து சொல்வார்கள். அவர் எதிர்க்கட்சியிலிருந்தால் தமிழ் மக்கள் நலனுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பார்; ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால் தம் மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படுவார். இக்கருத்து முற்றிலும் உண்மை என்பதை அச்சுப் பிசகாமல் நிருபித்து வருகிறார் கருணாநிதி.


.மு.கூ.முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது ( 2004 - 2009 )மக்களவையில் காங்கிரசுக்கு 200க்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தனர்; தி.மு.. வின் ஆதரவின்றி ஆட்சி நீடிக்காது என்கிற நிலையிருந்தது. இந்த சமயத்தில்தான் ( 2009ல் )இலங்கையில் எல்.டி.டி.. க்கு எதிராக இறுதிக்கட்ட போர் என்ற பெயரில் தமிழின அழிப்பு வேலையை ஆரம்பித்திருந்தது ராஜபக்க்ஷே அரசு.ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். .மு.கூ. அரசின் ஆதரவுடனும் மறைமுக உதவிகளுடனும்தான் தமிழர்களுக்கெதிரான் இந்த யுத்தம் நடத்தப்பட்டது
'போர் நிறுத்தம் வேண்டும் .. அதிகாரப்பரவலுக்கான பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட வேண்டும்'  என தமிழகம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்த தமிழர்கள் ஒட்டு மொத்தமாய் குரல் எழுப்பிய வேளையில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கருணாநிதி தனது ஆதரவுடன் மத்தியில் ஆட்சியிலிருந்த பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் தகுந்த முறையில் நிர்ப்பந்தங்கள் கொடுத்திருந்தால் போரின் வேகம் குறைந்திருக்கும். .இலங்கையில் போர் நிறுத்தப்படாவிட்டால் மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளில் கருணாநிதி இறங்கியிருந்தால் பதறிப்போய் சோனியா காந்தி இலங்கையை போர் நிறுத்தம் செய்ய வைத்திருப்பார். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். ஏனெனில், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் யுத்தம் சோனியா தலைமையிலான .மு.கூ. அரசின் உதவியுடன் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது .


ஆனால், 4 மணி நேர உண்ணாவிரதம் தனது கட்சி எம்.பி.க்களிடம் இராஜினாமாக் கடிதங்களை வாங்கி அதை சபாநாயகருக்கு அனுப்பாமல் தானே வைத்துக் கொண்டது என கோமாளிக்கூத்துக்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் கருணாநிதி. தனது மற்றும் தனது குடும்பத்தினர்களும்  பதவிகளில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்த இந்த தமிழினத் துரோகச் செயலால் .மு.கூ.அரசு தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு ராஜபக்க்ஷே அரசுக்கு மேலும் மேலும் மறைமுகமாக போருக்கான உதவிகளையும் செய்து வந்தது.
அப்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ( 2009 மே மாதம் ) மத்தியில் மீண்டும் காங்கிரஸே ஆட்சிக்கு வருவதற்கான வகையில் முடிவுகள் வர ஆரம்பித்த நிலையில் தன்னைத் தட்டிக் கேட்க யாருமில்லை என்று துணிச்சல் பெற்ற இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகள் உச்சகட்டத்தை அடைந்தன. முள்ளி வாய்க்கால் படுகொலையில் ஒரே நாளில் சுமார் 40000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், கருணாநிதி அப்போது தனது குடும்பத்தோடு டெல்லிக்குச் சென்று தனது மகன், மகள், பேரன் பேத்திகளுக்கு பணம் சம்பாதிக்க வசதியான மத்திய அரசின் இலாக்காக்களைப் பெறுவதற்காக சோனியாவோடு பேரம் நடத்திக் கொண்டிருந்தார்


இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது; இங்கே கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு பணம் கொழிக்கும் இலாக்காக்களை பெறுவதில் வெற்றி பெற்றார். இலங்கைத் தமிழர்கள் அழிந்தனர்; இங்கே கருணாநிதி தானும் தன் குடும்பத்தார் அனைவரும் மத்தியிலும் மாநிலத்திலும் பதவிகளுடனும் கோடி கோடியாய் பணத்தையும் குவித்துக் கொண்டு சந்தோஷமாயிருந்தார்.

ஆனால்,எந்த வினைக்கும் எதிர்வினை உண்டல்லவா .. ?

காலங்கள் ஓடின; 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி படுமோசமான தோல்வியைச் சந்தித்தார். எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு..விற்கு கிடைக்கவில்லை. கருணாநிதி முதல்வர் பதவியை இழந்ததாலும்  உலக மகா ரூ 1,70,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்தினரின் தொடர்பு அம்பலத்திற்கு வந்ததாலும் கருணாநிதியை சோனியா காந்தி ஏன் மன்மோகன் சிங் கூட இப்போது மதிப்பதில்லை.
இப்போது கருணாநிதிக்கு தமிழர்களின் நலன் பற்றிய நினைவு வந்திருக்கிறது.


தனது மற்றும் தனது குடும்பத்தினர்களின் பதவிகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதிக்கு அந்தப் பதவிகள் பறி போனபின் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இந்த நாளில் தமிழர் பாசம் மீண்டும் பொங்கி வருகிறது. 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவரால் எப்படி இப்படி எல்லாம் வேஷம் போட்டு ஏமாற்ற முடிகிறது என்று தமிழர்கள் வேதனையோடு பார்க்கின்றனர்.

தமிழினத்திற்கு அவர் செய்த துரோகம் காலத்தால் மறக்கக் கூடியதா .. ?
சரித்திரம் உள்ளவரை கருணாநிதியின் இந்த துரோகக் கதையை ஒவ்வொரு தமிழனும் நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பான்.

Thursday 12 April 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.





நாம் தமிழர்;
நம் புத்தாண்டு இது.

தமிழ் உலகின்
உயர்ந்த மொழி;
தமிழர் உலகின்
சிறந்த இனம்.

நாம் உயர்ந்து நிற்க
கரம் இணைந்து நிற்போம்.
தமிழ் மொழி காக்க
தமிழராய் நாம் வாழ்வோம்.

நடந்தவைகளில்
பாடம் கற்போம்;
நடப்பவைகளில்
கவனம் கொள்வோம்.

எழும் சூரியனாய்
ஒளி கூட்டி,
சீறும் கடலாய்
ஆர்ப்பரித்து
என்றும் தமிழ்
உயர்ந்திருக்க
தமிழின்  நிழலில் 
தஞ்சம் கொண்டு,
தமிழோடு இணைந்து
வாழ்வில் உயர்வோம்.

உலகம் வாழ் தமிழர்கள்
எல்லா வளமும் பெற்று
குறைவிலா நலம் பெற்று
உயர்ந்து வாழ்க.
ஒளி பெற்று வாழ்க.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
புகழோடும் புன்னகையோடும்
புவி மீதில் சிறந்து வாழ்க.