Wednesday 28 January 2015

ஒபாமா விஜயமும் இடதுசாரிகள் போராட்டமும்.

         அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவிற்கு வருவதைக் கண்டித்து,நாட்டின் பல இடங்களில் பல்வேறு இடதுசாரி அமைப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு 'போஸ்டர்'கள் ஒட்டியிருக்கின்றனர்; போராட்டமும்  நடத்தியிருக்கின்றனர்.
        
       சீனா இந்தியாவிற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான .கி.மீ.நிலப்பரப்பை ஆக்ரமிப்பு செய்து தன்வசம் வைத்துக் கொண்டிருக்கிறது; அதோடு அருணாச்சலப் பிரதேச மாநிலத்தையும் தனக்குரியது என்று கூறி அடாவடித்தனம் செய்து வருகிறது;இந்திய எல்லைக்குள் சீனப்படைகள் அடிக்கடி ஊடுருவலையும் நடத்திவருகின்றன .இவை மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பம் உட்பட பல்வேறு நவீன ஆயுதங்களையும் அளித்து அந்நாட்டை இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவி விட்டு வருகிறது சீனா.

       அதேபோல பாகிஸ்தானும் இந்தியாவிற்கு சொந்தமான ஜம்மு காஷ்மீரில் ஒரு பகுதியை ஆக்ரமித்து வைத்திருப்பதோடு மத பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, காஷ்மீரில் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும் ஊடுருவ வைத்து அப்பாவி இந்திய மக்களுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியா மீது மறைமுகப் போரையே நடத்தி வருகின்றது பாகிஸ்தான். 

      ஆனால், இவ்விரு நாடுகளுக்கும் எதிராக இந்த இடதுசாரிகளும் கம்யூனிஸ்ட்களும் ஒரு முறை கூட கன்டனம் தெரிவித்ததில்லை; இவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும்  நடத்தியதில்லை.சீன அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போதும் அவரது வருகையை எதிர்த்து நாட்டின் எந்த முலையிலும் ஒரு சிறு ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதில்லை. இந்திய எல்லைக்குள் சீனாவின் ஊடுருவல்களை எதிர்த்து சிறு முணுமுணுப்பு கூட காட்டியதில்லை இந்த இடதுசாரிகள்.

       நம் நாட்டிற்கு எதிராக செயல்படும் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு எதிராக போராட முன்வராத இக்கட்சிகள் அமெரிக்கா என்றாலே அலறித் துடித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன; இவர்களது இப்போராட்டங்கள் இந்தியாவின் நலனை அடிப்படையாகக் கொண்டதில்லை என்பதே உண்மை.

Saturday 10 January 2015

வேஷம்.. இது ஏமாற்ற போடும் வேஷம்




பா... அரசு வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு செயல்படவேண்டும்; மதச்சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமாக நடக்கக் கூடாது என்று தி.மு.. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மதச்சார்பின்மை பற்றி யார் யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

கருணாநிதி ரம்ஜானுக்கு நோன்பு திறப்பு நாளில் குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பார்;கிறித்துவர்களின் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வார்; முஸ்லீம் கிறித்துவர்களின் பண்டிகை தினங்களில் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிப்பார்.    
ஆனால், ஹிந்து மத விழாக்களில் மட்டும் அவர் கலந்து கொள்வதில்லை;அதுமட்டுமல்ல ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து கூட சொல்லமாட்டார்; இப்போது மட்டுமல்ல..அவர் முதலமைச்சராக இருந்த போதும் கூட ஹிந்து மதத்தின் மீது மட்டும் விஷத்தைக் கக்கும் ஒரு ஹிந்து விரோதியாகத்தான் அவர் விளங்கினார்.இப்படிப்பட்டவர் எல்லாம் மத்தசார்பின்மை பற்றி பேசுவதும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக நடந்து கொள்ள வே ண்டும் என்று பிரதமர் மோடிக்கு அறிவுரை கூற முற்படுவதும் வடிகட்டிய, கடைந்தெடுத்த ஏமாற்று வேலை; 

பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மதத்தினரிடமும் சமமான அணுகுமுறையை மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதோடு ஊழல் என்பதே இல்லாத சிறப்பான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கிவருகிறார். இத்தகைய நேர்மையான,மக்களுக்காக உழைக்கும்   மோடியை, ஊழல்,விஞ்ஞான முறையில் மக்கள் பணத்தை தன் குடும்பத்திற்கு மாற்றிக் கொள்ளுதல்,மற்றும்  குடும்பத்திற்காகவே அரசியல்,ஆட்சி என்ற கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுபவர்கள் எல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் விமர்சிக்க முற்படுவது அநாகரிகமானது; அருவறுப்பானது.