Thursday 21 March 2013

யாருமில்லை;; யாரும் பிறக்கப் போவதுமில்லை.


தி.மு.. மத்திய அமைச்சரவையிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும்  வெளியேறியிருக்கிறது;. 2009ல் இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகள் தொடர்பான வெளிவரும் செய்திகளும் வீடியோக்களும் தமிழக மக்களிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியிருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் இது காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடும். காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால் தி.மு.. வும் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தாலேயே கருணாநிதி இந்த முடிவை எடுத்திருக்கிறார். 
2009ல் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளுக்கு .மு.கூ. அரசு உடந்தையாய் இருந்ததோடு மறைமுகமாக பல வகைகளிலும் உதவிகளும் செய்து வந்தது. அந்த சமயத்தில் .மு.கூ. அரசை அழுத்தமாய் அடிக்கல்லாய் நின்று தாங்கிப் பிடித்து வந்தவர் கருணாநிதி. எனவே இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு கருணாநிதியும் ஒரு காரணமே.
இன்று .நா. மனித உரிமைக் கமிஷனில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை ஆதரிக்கும் விசயத்திற்காக .மு.கூ. அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் கருணாநிதி 2009ல் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டபோது என் இதுபோன்றதோர் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை ..? அப்போது அவர் இதுபோன்றதொரு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால்  ஆயிரக்கணக்கில் தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்
மேலும், கடந்த வருடமும் இதே போன்றதோர் தீர்மானத்தை அமெரிக்கா மனித உரிமைக் கமிஷனில் கொண்டுவந்தது..மு.கூ.( இந்திய ) அரசு அதில் பல திருத்தங்களைச் செய்து தீர்மானத்தை நீர்த்துப் போக வைத்தது. ஏன் கருணாநிதி அப்போது கூட்டணியை விட்டு வெளியேறவில்லை ..?


இதிலிருந்தே .மு.கூ. அரசுக்கான ஆதரவை தி.மு.. வாபஸ் பெற்றுக் கொண்டிருப்பது இலங்கைத் தமிழர்களுக்காக அல்ல.. வரவிருக்கின்ற மக்களவை தேர்தலுக்காக என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
2009 பிப்ரவரி முதல் மே வரை இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்; இதற்காக கருணாநிதி மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் 4 மணி நேர உண்ணாவிரதம், தனது கட்சி எம்.பி.க்களிடம் இராஜினாமா வாங்கி சபாநாயகருக்கு அனுப்பாமல் தானே வைத்துக் கொண்டது போன்றவைகள்தான்.  
அதற்குப் பிறகு பிரபாகரனின் நோய்வாய்ப்பட்ட வயது முதிர்ந்த தாயார் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியவர் கருணாநிதி.   

தனது மகள் கனிமொழியையும் தனது கட்சி எம்.பி.க்களையும் ராஜபக்க்ஷேவிடம் அனுப்பி வைத்து அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்ததோடு அவரிடமிருந்து பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டவர் கருணாநிதி.

ஆனால், இப்போது 4 வருடங்களுக்குப் பிறகு 2009ல் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்காக 2013ல் .மு.கூ. அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுகிறார் என்றால் இதை கோமாளிக் கூத்து என்பதா..? அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதா ..? மோச்டி வேலை என்பதா ..?
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மக்களை ஏமாற்றுவதில் கருணாநிதியை மிஞ்ச யாருமில்லை; இனி யாரும் பிறக்கப்போவதுமில்லை.