Thursday 16 June 2011

.. நான் உங்களோடு



நான் உங்களோடு
சேர்ந்து போராடுகிறேன்;
பாதிக்கப்பட்டவர்களுக்கு
துணையாக்..
வாய் பேச குடியாதவர்களுக்கு
வாதாட.
நான் தொடர்ந்து போராடுவேன்..
என் போராட்டங்கள்
ஓயப் போவதில்லை.
என் தாய்நாடு ஊழல்வாதிகளால்
கொள்ளையடிக்கப்படுகிறது;
என் நாட்டின் மக்கள்  
சுயநலவாதிகளால்
சுரண்டப்படுகிறார்கள்.
அநீதிக்கும் தீமைக்கும் எதிரான
சகிப்புத்தன்மை என்பது
பேடித்தனத்தின் வெளிப்பாடு.
என் போராட்டங்கள்
பல வழிகளில்
தொடர்ந்து கொண்டிருக்கும்.
தனிமைப்படுத்தப்பட்டாலும்
தவறாய் சித்தரிக்கப்பட்டாலும்
நாட்டுக்காக,
என் மக்களுக்காக
என் மூச்சின்
கடைசி நிமிடம் வரை
போராட்டம் தொடரும்
உங்களில் ஒருவனாக
உங்களோடு கைகோர்த்து,
என்றென்றும் உங்களுக்காக
போராட்டங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கும்.

Thursday 9 June 2011

நல்ல துவக்கம் சிறப்பான முயற்சி.



          இலங்கையில் தமிழினப் படுகொலையை  நிகழ்த்திய ராஜபக்க்ஷே மீது நடவடிக்கை மேற்கொள்ள .நா.வை வலியுறுத்தவும் பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் இந்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
           மத்திய .மு.கூ. அரசின் பிதாமகரான சோனியா காந்தி கோபித்துக் கொள்வாரோ தனது மற்றும் தனது குடும்பத்தினரின் பதவி சுகங்கள் பறிபோய் விடுமோ என்று அஞ்சி அஞ்சியே இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுக்க மத்திய அரசுக்கு எந்த நிர்ப்பந்தமும் கொடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் முன்னாள் முதல்வர் கருண்நிதி.
          மாபெரும் இனப் படுகொலைக்குப் பின்னும் எஞ்சியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெயிலிலும் மழையிலும் வாடி வதங்கி, உணவு உடைகளின்றி, பல்வேறு நோய்களின் தாக்குதலுக்காளாகி, முட்கம்பி வேலிக்குள் நடைப் பிணமாக நரக வேதனையில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்குரிய உரிமைகளை பெற்றுத்தர உருப்படியான எந்த முயற்சியும் செய்யாமல் மத்திய அரசிற்கு மாதத்திற்கொரு கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தவர் கருணாநிதி.
                இந்த தமிழினப் படுகொலைக்கு காரணமான ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகள் பல்வேறு உலக அரங்குகளில் முயற்சிகள் மேற்கொண்ட போது .மு.கூ. அரசு ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு அவரை பலமுறை காப்பாற்றியது. .மு.கூ. அரசின் இந்த தமிழர் விரோதச் செயல்களை கண்டிக்கும் துணிச்சலின்றி பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக  மௌனமாய் இருந்தவர் கருணாநிதி.
                ஆனால், எந்தப் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அன்று இலங்கைத் தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரோ அந்தப் பதவியை இந்தியத் தமிழர்கள் கருணாநிதியிடமிருந்து பறித்து விட்டனர். அவரது குடும்ப உறுப்பினர்களின் பதவிகளும் 2ஜி ஊழல் புயலில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றன.
                இப்போது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். அதோடு காவிரி ட்ரிபூனல் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். முல்லைப் பெரியாறு, பாலாறு விஷயங்களிலும் தமிழகத்தின் நலனுக்கான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
          இதுவரை கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மத்திய அரசில் நிறைய பதவிகள் அதிலும் வளமான பதவிகள் வேண்டும் என்பதற்காக மட்டுமே தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக குரலை ஓங்கி ஒலித்திருக்கிறது. இப்போது தமிழக நலன் தமிழர் நலன் என்பதற்காகவும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது ஒரு நல்ல விஷயம்;முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாராட்டுக்குரியவர்
                முதல்வர் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையாக அரசியல் மற்றும் சகல அதிகாரங்களும் பெற்று மரியாதையுடனும் சிறப்புடனும் வாழத்  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.