Tuesday 27 November 2012

வழியில் ஏன் பயம் ..?




தி.மு..தலைவர் கருணாநிதி மத்திய அரசிற்கு எப்படி அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு தொடர்பான நிலையில் அவர் அடித்திருக்கும் அந்தர் பல்டி தெள்ளத் தெளிவாக நிருபிக்கிறது.

கடந்த அக்டோபரில்தான் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக மத்திய அரசிற்கு எதிராக பாரளுமன்றத்தில் யார் தீர்மானம் கொண்டுவந்தாலும் ஆதரிப்போம் என்று உறுதியாக அறிவித்தார். இப்போது நவம்பரில் தனது நிலையை தலைகீழாய் மாற்றிக் கொண்டு மத்திய அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறார்.

மத்திய அரசிற்கு எதிராக வாக்களித்தால் ஆட்சி கவிழும்; பா... ஆட்சிக்கு வந்துவிடும்.. அதனால்தான் அரசை ஆதரித்து வாக்களிப்பதாக சாக்கு ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.
அப்படியானல், அக்டோபரில் எதற்கு மத்திய அரசை எதிர்த்து வாக்களிப்போம் என்று சொன்னார் ..? காங்கிரசிடம் எந்த பேரத்தை முடிப்பதற்காக அப்படி மிரட்டினார் ..?

இப்போதய காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் அடுத்து வரும் பாரளுமன்றத் தேர்தலில் பா... ஆட்சிக்கு வந்துவிடும் என்கிறார் கருணாநிதி. இதன்மூலம் இப்போதைய .மு.கூ. ஆட்சி மக்கள் ஆதரவை இழந்து விட்டது என்பதை  அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சில்லறை விவகாரத்தில் அன்னிய முதலீடு என்பது மக்களுக்கு நன்மை தரும் விஷயம் என்றால்,அதன் காரணமாய் ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் மக்கள் ஆதர்வோடு .மு.கூ. தானே ஆட்சிக்கு வரவேண்டும்.ஆனால் கருணாநிதி .மு.கூ. மீண்டும் ஆட்சிக்கு வராது என்கிறார். அப்படியானால் அது மக்கள் விரோதச் செயல்தானே ... அவர் கருத்துப்படியே மக்கள் ந்லனுக்கு விரோதமான ஒரு காரியத்தை செய்ய முற்படுகிற மத்திய அரசை அவர் ஏன் ஆதரிக்க வேண்டும் ..?
அதிலும் கடந்த மாதம் எதிர்த்து வாக்களிப்போம் என்று அறிவித்து விட்டு இப்போது ஆதரித்து வாக்களிப்போம் என்று அந்தர் பல்டி அடிக்க வேண்டிய அவசியமென்ன ..?

இதற்காக காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் இடையே நடந்த பேரம் என்ன ..?
எதற்காக காங்கிரசிடம் கருணாநிதி பணிந்து போனார் ..?

ரூ 1,76,000 கோடி 2ஜி மெகா ஊழலில் தொடர்புடைய கனிமொழி, தயாநிதி மறன் போன்றவர்கள் மீதுள்ள வழக்கை நிர்த்துப்போக வைக்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டதால்தான் கருணாநிதி மத்திய அரசிற்கு பணிந்து போனார் என்ற செய்தி உண்மையாகத்தானே இருக்க முடியும் ..
கருணாநிதி தி.மு..வை தனது குடும்ப உறுப்பினர்களின் நலனைக் காக்கும் ஒரே நோக்கத்திற்க்காக மட்டுமே நடத்தி வருகிறார் என்ற கருத்தை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் அவர் அடித்திருக்கும் பல்டி மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த பல்டிக்கு  கருணாநிதி அளித்திருக்கும் வியாக்கியமான" சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்பதே எங்கள் கொள்கை;ஆனால், ஆட்சி கவிழாமல் இருப்பதற்காக அதை ஆதரிக்கிறோம்" என்ற கருத்திற்கும் "பொதுமக்கள் நலனைக் காப்பது என்பதே எங்கள் கொள்கை; ஆனால், என் மக்கள் நலன்களைக் காப்பது மட்டுமே எண்து செயல்பாடு" என்ற கருத்திற்கும் துளிக்கூட வித்தியாசமில்லை.



Thursday 22 November 2012

பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்.


பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்.

மும்பையில் 2008 நவம்பரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் விரைந்து தூக்கிலிடப்பட்டிருப்பது சரியான நடவடிக்கையாகும். 

இதே போல், 2001 நவம்பரில் நமது பாராளுமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய. உச்ச்நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான அப்சல் குருவின் தூக்கு தண்டனையும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். 

சரியான சட்டங்களும், விரைவான நீதிமன்ற நடவடிக்கைகளும் கடுமையான தண்டனைகளுமே குற்றங்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த உதவும். 

இந்தியாவிற்கெதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால் மட்டுமல்ல, ஈடுபட நினைப்பவர்களும் கூட உயிரோடு இருக்கமுடியாது என்ற செய்தி தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.