Sunday 24 July 2016

மதவெறியின் காட்டுமிராண்டித்தனங்கள்.




23/7/2016ல் ஆப்கானிஸ்தான் காபூலில் தங்கள் பகுதியில் மின்வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ஹஸாரா என்னும் சிறுபான்மையின மக்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்..
22/7/2016 அன்று ஜெர்மனியின் ஒரு வணிக வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி அப்பாவி மக்கள் கூட்டத்தின் மீது சரமாரியாகச் சுட்டதில் 15 பேருக்கும் மேல் பலியாகியிருக்கின்றனர். அதேபோல 11/6/2016 அன்று ஜெர்மனியில் ஓடும் இரயிலில் ஒரு இஸ்லாமிய மத வெறியன் இரயிலில் பயணம் செய்தவர்கள் மீது கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 5 அப்பாவிகள் பலத்த காயமடைந்தனர்.
14/7/2016 அன்று ஃப்ரான்ஸின் தேசிய தின விழாவில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தின் மீது ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்று பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 90 பேரை கொன்று குவித்திருக்கிறான்..
2/1/2016 அன்று பங்களாதேஷ் ஒரு உணவு விடுதியில் நுழைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், அங்கிருந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து சுமார் 22 பேர் வரை கழுத்தை அறுத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்று குவித்திருக்கின்றனர்.
கடந்த 3 வாரங்களில் உலக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் மதவெறி பிடித்த இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்குள்ளனவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவிகள் ஆவர். எவ்விதக் காரணமுமின்றி இவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்று காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை மற்றும் வன்முறைக்  கலவரங்களுக்கும் பாகிஸ்தானின் தூண்டுதலினால், இஸ்லாமிய  பயங்கரவாதிகளால் மத அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்களே காரணமாயிருக்கின்றனர். பயங்கரவாதத்திற்கு மதமில்லை  என்ற வார்த்தைகள் அர்த்தமிழந்து கொண்டிருக்கின்றன.. இதை தங்களது சாகசச் செயல் என்று அவர்கள் நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது.
உலகின் எந்தப் பகுதியிலும் தங்களால் நுழைந்து பிற மதத்தினர்களை கொன்று குவிக்கும் சக்தி தங்களுக்கு உண்டு என்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் நினைத்துக் கொள்வது இதே சக்தி பிறமதத்தினர்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிட்டதன் விளைவே. துப்பாக்கி ஏந்திய பிற மதத்தினர்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர்களாக வாழும் பகுதிகளுக்குள் சென்று நூற்றுக் கணக்கில் அப்பாவி முஸ்லீம்களை  கொன்று குவிக்க முடியாதா..?ஆயுதம் ஏந்திய தனி ஒருவன் நினைத்தால் கூட முடியும். இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்,  இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்று உலக மக்கள் நினைக்குமளவிற்கு ஒரு பயங்கர சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் என்றாலே அண்டை வீட்டுக்காரர்கள் சந்தேகக் கண்னுடனும் வெறுப்புடனும்  பார்க்கும் சூழ்நிலையை இந்த பயங்கரவாதிகள் உருவாக்கி விட்டிருக்கிறார்கள்.

இந்தப் பயங்கரவாதத்தால் உலக நாடுகள் அனைத்துமே பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றால் அது மிகையாக இருக்க முடியாது. மதவெறியால் மூளைச்சலவை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களும் சிறுவர்களும் உலகின் ஆபத்தாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு போராடும் காலகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Saturday 16 July 2016

துணை நிற்போம்

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் உதவியுடன் இஸ்லாமிய மத பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்த பர்ஹன் வாணி என்பவன் பாதுகாப்பு படையினர்களால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டான். 


 அவன் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லெறிதல், காவல் நிலையங்களைத் தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட மதவெறி பிடித்த கலவரக்காரர்கள்  மீது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையில் சுமார் 40 பேர் வரை உயிழந்திருக்கின்றனர்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவான இக்கலவரக்கார்களை ஒடுக்குவதில் எவ்வித சுணக்கமோ கட்டுப்பாடோ காட்டாமல் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  
ஹிஸ்புல் முஜாகீதினின் புதிய தலைவனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் இவர்களின் ஆதரவளர்கள் கடுமையாக நசுக்கப்பட வேண்டும்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது; இருக்கிறது; இனியும் இருக்கும். இதை மாற்ற யாராலும் முடியாது.

இந்த மதவெறி பிடித்த பயங்கரவாதியின் மரணத்தை பாகிஸ்தான் துக்க தினமாக அனுஷ்டிக்க முடிவெடுத்திருக்கிறது. இதிலிருந்தே காஷ்மீரில் நடைபெறுகின்ற பிரிவினைவாதப் போராட்டங்கள், பயங்கரவாதச் சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் பாகிஸ்தானே என்பது தெளிவாக நிரூபணமாகிறது. 


பாகிஸ்தானில் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் மதவெறி பிடித்த பயங்கரவாதிகளால் கொல்லப்படுகின்றனர். பெனாசீர் புட்டோ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்; நவாஸ் ஷெரிஃப் கூட இன்னும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் பயங்கரவாதிகளால் கொல்லப்படலாம். மத பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. காஷ்மீர் கலவரங்களும் பாகிஸ்தானின் கைவண்ணமே.


மதவெறியர்களின் இத்தகைய கொடிய பயங்கரவாதத்தை காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இம்முற்சியில் நம் நாடு வெற்றி பெறும். இப்புனிதப் பணியில் மக்கள் மோடி அரசுக்கு உறுதுணையாயிருக்க வேண்டும்.

Thursday 7 July 2016

மீண்டும் தோல்வி

திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது கருணாநிதி, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிரதமரையும் தேர்தல் கமிஷனையும் குற்றம் சாட்டியிருக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் பிரதமர் மீது குற்றம் சாட்டி வருகிறார். இது முற்றிலும் மடத்தனமானது; அபத்தமானது.

கருணாநிதியின் குடும்பத்தினர் செய்த ஆயிரக்கணக்கான கோடி ஊழல்கள்; நிலப்பறிப்பு மற்றும் பல்வேறு அராஜகங்கள்; இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைக்கு காரணகர்த்தாவாக இருந்தது; கருணாநிதியின் ஹிந்து விரோதக் கொள்கை; குடும்ப ஆட்சி; குடும்ப நலனுக்கே முன்னுரிமை மற்றும் பல்வேறு மக்கள் விரோதச் செயல்பாடுகளால் கருணாநிதி குடும்பத்தினர் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதன் விளைவுதான் திமுக வின் தோல்வி.

திமுக வினர் முதல்வர் ஜெயலலிதா மீது எத்தனை குற்றச்சாட்டுக்களை சுமத்த முற்பட்டாலும் , கடந்த கால திமுக ஆட்சியையும் , கருணாநிதி குடும்பத்தினர், திமுக மாவட்ட வட்டச் செயலாளர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளையும் அராஜகங்களையும், வன்முறைகளையும் நினைத்துப் பார்க்கும் மக்கள் அதற்கு ஜெயலலிதாவின் ஆட்சியே பன்மடங்கு மேலானது என்ற உறுதியான முடிவிற்கு வந்துவிடுகிறார்கள் . அத்தகைய முடிவு நியாயமானதும் கூட.
உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம்.
ஜெயலலிதா மீது திமுக சாட்டியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டு சில கோடிகள் சம்பந்தப்பட்டது. ( இக்குற்றச்சாட்டிலிருந்து கூட அவரை உயர்நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது) இந்த வழக்கு ஜெயலலிதா மீது திமுக வினரால் தொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி, அவரது மகன், மகள், மருமகன், பேரன் பேத்திகள் மீது ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான கோடிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.ஊழல் வழக்குகள் இருக்கின்றன. மேலும் இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள், வழக்குகள் அனைத்தும் அதிமுகவால் தொடுக்கப்பட்டதல்ல; சி.பி.ஐ.யால் தொடுக்கப்பட்டவை என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மத்தியில் திமுக வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அரசு இருந்தபோதுதான் இந்த வழக்குகள் அனைத்தும் தொடுக்கப்பட்டன என்பதே இந்த வழக்குகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றன.
இத்தகைய நிலையில்  திமுகவினர் ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை வைக்கும்போது மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை; அதை ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்கின்றனர். அதன் விளைவுதான் திமுக வின் தோல்வி.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கும். ஆனால், கருணாநிதி குடும்பத்தினர் தேர்தலுக்கு பல மாதங்களுக்கும் முன்பிருந்தே தங்கள் வசமிருக்கும் கோடிகளைப் பயன்படுத்தி மக்களிடம் செல்வாக்குடன் இருக்கும் சில பத்திரிக்கைகளையும் வார இதழ்களையும் விலைக்கு வாங்கி அதன் மூலமும், தங்கள் குடும்ப வசமிருக்கும் கணக்கற்ற தொலைக்காட்சிகள் பத்திரிக்கைகள் மூலமும் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரங்களையும் ஏமாற்று வேலைகளையும் மேற்கொண்டதானாலும், அதிமுகவினர் இப்பொய்ப் பிரச்சாரங்களை சரிவர எதிர்கொள்ளத் தவறியதானாலும்( உதாரணத்திற்கு சென்னைப் பெருமழைப் பிரச்னை ), முஸ்லீம் கிறித்தவர் போன்ற சிறுபான்மையினத்தவர்கள் கருணாநிதியின் பொய்யான மதிமயக்கும் ஏமாற்று வாக்குறுதிகளையும் பேச்சுக்களையும் நம்பி திமுக விற்கு பெருமளவில் ஒட்டுமொத்தமாக வாக்களித்ததாலும்தான் ( உதாரணம்; கன்னியாகுமரி மாட்ட தேர்தல் முடிவுகள் )திமுக 90 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடிந்தது. இல்லையேல் திமுக வின் நிலை மிக மோசமானதாக இருந்திருக்கும் என்பதுதான் நிஜம்.

இந்த உண்மைகளையெல்லாம் மறந்துவிட்டு அல்லது புறக்கணித்து விட்டு தங்களது தோல்விக்கு தொடர்ந்து பிரதமரை குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதன் மூலம் அவர் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். ஆனால், மக்கள் ஏமாறமாட்டார்கள்; கருணாநிதிக்கு மீண்டும் தக்க பாடம் கற்பிக்க வருகிற உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுகவிற்கு தோல்வி அளிப்பார்கள்.