Tuesday 29 May 2012


மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய .மு.கூ. அரசு பெட்ரோல் விலையைக் கடுமையாக உயர்த்தியிருப்பதைக் கண்டித்து போராட்டும் நடத்துகிறார் கருணாநிதி. இது கபட அரசியலின் உச்சக்கட்டம். விலையை உயர்த்தியிருப்பது காங்கிரஸ் அரசு அல்ல; தி.மு..வும் அங்கம் வகிக்கும் .மு.கூ.அரசு. .மு.கூ. அமைச்சரவையில் அங்கம் வகிக்காமல் வெளியிலிருந்து ஆதரித்து வந்தால் விலையேற்றத்திற்கு தி.மு..வை நாம் குற்றம் சுமத்தத் தேவையில்லை; ஆனால், .மு.கூ. அமைச்சரவையில் தனது எம்.பி.க்களை அமைச்சர்களாக வைத்துக் கொண்டு அதனால் கிடைக்கிற வசதிகளையும் பலன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிற கருணாநிதி அதே அரசு செய்திருக்கிற விலைவாசி உயர்வுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போன்று நடிப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. எனவே இந்த விலையேற்றத்திற்கு தி.மு..வும் காரணம்தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.
அவர் வேறொன்றும் கூறுகிறார். மத்திய அரசு எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துமாம். தமிழக அரசு வரியைக் குறைத்து அதன் விலையக் குறைக்க வேண்டுமாம். நன்றாகத்தான் இருக்கிறது அவர் சொல்லுகிற கதை. உண்மையில் கச்சா எண்ணெய் விலை உலக மார்க்கெட்டில் இப்போது 93 டாலராக குறைந்திருக்கிறது.ஒரு கால கட்டத்தில் இது 145 டாலர் என்ற அளவில் கூட இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 55 என்ற அளவில்தான் இருந்தது. ஆனால், .மு.கூ. அரசின் தவறாகத் திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிவடைந்து வருகிறது. அதன் காரணமாகவே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூபாயின் மதிப்பு சரிவடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசு பெட்ரோல் விலை உயர்வின் மூலம் பெரும் சுமையை மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறது
பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்க அரசு ரூ 80000 கோடி அளவில் மானியம் வழங்குகிறது. மத்திய அரசுக்கிருக்கும் நிதி நெருக்கடியால் அரசு இந்த மானியத்தின் அளவை குறைக்க நினைக்கிறது. அரசுக்கு வருமானம் ஏன் குறைகிறது .. ? இந்த நிதி நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இந்த அரசில் தொடர்ந்து நடக்கிற மெகா மெகா ஊழல்களால் அரசுக்கு ஏற்படுகிற வருமான இழப்பும் இதற்கு ஒரு காரணமாகும். இந்த அரசில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் இலட்சம் கோடி என்ற அளவில்தான் ஊழல்கள் நடக்கின்றன.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ 1,76,000 கோடி( இது 90% தி.மு.க. ஊழல் ), நிலக்கர் சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் ரூ 10,50,000 கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாக் மத்திய அரசின் கணக்கு தணிக்கை அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். இவைகள் ஒரு பானை சோற்றுக்கு பதமாக அமைந்த சில சோற்றுப் பருக்கைகள் ஆகும்.
இப்படி வரலாறு காணாத ஊழல்களாலும் தவறான நிர்வாக நடவடிக்கைகளாலும் ஏற்பட்ட இழப்புகள் விலை உயர்வுகளாக சாதாரண ஏழை நடுத்தர மக்களை தாக்குகின்றன.
ஆனால், இவற்றையெல்லாம் கண்டிக்க வக்கில்லாத கருணாநிதி பெட்ரோல் விலையில் மாநில அரசு தனது வரியை குறைத்துக் கொள்ளக் கோருகிறார்.இதன் மூலம் தமிழக அரசை திவாலாக்க வழி தேடுகிறார். தமிழக அரசு வரிகளைக் குறைத்தால் அதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடு கட்ட  பிற அத்யாவசியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் அதைக் கூறியே மக்களிடம் பிரச்சாரம் செய்து தான் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; குடும்ப சகிதமாய் தமிழகத்தை சுருட்டலாம் என்பதுதான் கருணாநிதியின் திட்டம்
ஆனால், இதெல்லாம் இனி நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மக்கள் விழிப்போடிருக்கிறார்கள்; விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



              

Saturday 5 May 2012


கோடை விடுமுறை தேவையா .. ?



            நீதிமன்றங்கள் கோடை கால  விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கின்றன. இந்த நடைமுறை தேவைதானா .. ?  நாட்டில் நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கியிருக்கின்றன. நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்பார்கள்.ஆனால், நமது நாட்டில் நீதி எப்போதுமே தாமதமாகத்தான் கிடைக்கிறது. அதிலும் சாதாரண தாமதம் அல்ல; ஒரு வழக்கு முடிய 15 வருடங்கள் 20 வருடங்கள் என பல வருடங்கள் ஆகின்றன.
          2008 நவம்பரில் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகத் தங்கள் கண்களால் பார்த்தார்கள். அதில் முகமது கசாப் என்பவன் இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்துவதைப் பலரும் பார்தனர்.இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இந்தக் கசாப் குற்றவாளிதான் என்பதை 3 வருடங்களுக்கு மேல் கடந்த பின்னும் நீதி மன்றங்கள் இன்னும் இறுதியாக முடிவு செய்தபாடில்லை. தேசத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிலும் உலகமே கண்ணால் கண்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கவே நிதிமன்றங்கள் பல வருடங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் நமது நாட்டின் நீதி பரிபாலன முறை அமைந்திருக்கிறது.
          இந்நிலையில் கோடை காலத்தில் நீதிமன்றங்களுக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவது தேவையானதுதானா .. ?
          கோடை காலத்தில் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்..க்கள், ..எஸ். .பி.எஸ்.கள், விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள் தொழிலாளிகள், முதலாளிகள், வியாபாரிகள் என அனைவருமே தங்கள் பணிகளை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதில் நீதிமன்றங்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு .. ?
          பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீதிபதிகள் வெள்ளையர்களாக இருந்தனர். இந்தியாவில் கோடை காலத்தில் நிலவும் வெப்பமான சூழ்நிலை அவர்களுக்கு ஒத்துவராததால் இந்த கோடை கால விடுமுறை வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
இப்போது நீதிபதிகள் நம்மவர்கள்; நமது நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். இப்போது கூட இந்தக் கோடை கால விடுமுறைப் பழக்கம் தேவைதானா .. ?
         இதை மதிப்பு வாய்ந்த நீதிபதிகளே முடிவு செய்தால் நல்லது.