Friday 21 June 2013

சாதனை படைக்கும் குடும்ப பாசம்

சாதனை படைக்கும் குடும்ப பாசம்

கருணாநிதியின் உத்தரவின் பேரில் டி.ஆர். பாலு டில்லி சென்று சோனியா காந்தியை சந்தித்து, ராஜ்ய சபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு கேட்டிருக்கிறார். 3 மாதங்களுக்கு முன்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதாகக் கூறி கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி அறிவித்திருந்தார். இப்போது தன் மகளுக்கு எம்.பி. பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அதே காங்கிரஸிடம் மன்றாடுவது 'தன் குடும்ப நலன்தான் கருணாநிதிக்கு என்றும் முக்கியம் 'என்று பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதாகவே அமைந்திருக்கிறது. 
திருச்சி சிவா, கனிமொழி ஆகிய இருவரின் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்காலம் சமீபத்தில் முடிவுற்றது. சிவா தனது மாணவர் பருவத்திலிருந்தே தி.மு..விற்காக பாடுபட்டு வருபவர். ஆனால்,சிவாவிற்கு சீட்டு கொடுக்காமல் 2ஜி ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தனது மகள் கனிமொழிக்கு கொடுத்திருக்கிறார் கருணாநிதி; இதன் மூலம் தி.மு..வில் தன் குடும்பத்தினருக்குரிய கோட்டா முடிந்த பின்பு எஞ்சியிருக்கும் பதவிகளே மற்றவர்களுக்கு என்பதை கருணாநிதி உறுதியாக அறிவித்திருக்கிறார்.
ராஜ்யசபா தேர்தலில் ஒருவர் வெற்றி பெற 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், தி.மு..விற்கு 23 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதன் கூட்டணிக்கட்சி உறுப்பினரும் யாருமில்லை. இந்நிலையிலும் தனது மகளுக்கு எப்படியாவது எம்.பி. பதவி பெற்றுத் தந்து விட வேண்டும் என்பதற்காக அதி.மு.. தவிர்த்த அனைத்துக் கட்சிகளையும் தாஜா செய்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.
திமு..வோடு உறவு கிடையாது என பா...வின் அன்புமணி இராமதாஸ் அறிவித்த பின்பும் கூட வலியப்போய் கனிமொழியை ஆதரிக்குமாறு பலமுறை கெஞ்சினார் ஸ்டாலின் . ஆனாலும் பலனில்லை;தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து விட்டது பா... மார்க்சிஸ்ட்களிடமும் இதே போல் பேரம் நடத்தப்பட்டது; ஆனால், அக்கட்சி திமு.. வை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உற்தியாக அறிவித்தது.தே.மு.தி..தலைவர் விஜயகாந்திடம் கனிமொழியை ஆதரிக்குமாறு பல வகைகளிலும் பேரம் பேசி பேச்சு நடத்தப்பட்டது. அவர் இந்த ஏமாற்று வேலைக்கெல்லாம் மசிந்து விடாது தன் கட்சி சார்பில் தனி வேட்பாளர் அறிவித்து விட்டார்.  
அதோடு முடியவில்லை;  
ஓட்டியிருந்த எங்களை காங்கிரஸ்தான் வெட்டி விட்டது என்று கடந்த வாரம் கூறியிருந்த கருணாநிதி தன் மகளுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக வெட்டி விட்டவர்களின் காலில் விழ டி.ஆர். பாலுவை அனுப்பி வைத்தார். மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் போன்ற உதிரிக் கட்சிகளிடமும் மக்களவைத் தேர்தலின்போது இடம் ஒதுக்குவது உட்பட பல்வேறு பேரங்களை முடித்து கனிமொழிக்கு ஆதரவு திரட்டியிருக்கிறார் கருணாநிதி.
இதெல்லம் கருணாநிதியின் ராஜதந்திரம் என்று அவரது உடன்பிறப்புகள் வேண்டுமானால் புளகாங்கிதம் அடையலாம். ஆனால், இந்தச் சம்பவங்கள் எல்லாம் கருணாநிதி தி.மு..வை தனது குடும்பத்தினரின் நலனுக்காக இயங்கும் ஒரு அமைப்பாக ஆக்கிவிட்டார் என்ற செய்தியை தமிழக மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.