Monday 25 June 2012

இந்திய ஜனாதிபதி தேர்தல்



இந்தியாவின் 14வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை 19 அன்று நடைபெறவிருக்கிறது.

ஜனாதிபதி பாராளுமன்றத்தின் 2 அவைகளையும் சார்ந்த உறுப்பினர்களாலும் நாட்டிலுள்ள 28 மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் டில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களாலும்  ஒற்றை மாற்று ஓட்டு முறையில் தேர்ந்தேடுக்கப்படுகிறார். பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலுமுள்ள நியமன உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.



நமது நாட்டின் ஜனாதிபதி முப்படைகளின் தலைவராவார்அவர் நாட்டின் முதற்குடிமகன் என்று அழைக்கப்படுகிறார்ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கிறார்ஜனாதிபதிக்கு குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களைத் தவிர்த்துப் பார்த்தோமேயானால் அதிகாரங்கள் ஏதும் கிடையாதுமக்களவைக்கு நடைபெறும் பொது தேர்தலின் போது எந்தக் கட்சிக்கும் அல்லது தேர்தலுக்கு முந்தைய எந்தக் கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் ஜனாதிபதி முக்கிய பங்காற்ற முடியும்மற்றபடி ஜனாதிபதி பதவி என்பது ஒரு அலங்காரப் பதவியே.
எனினும் அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கென்று சில அதிகாரங்களை வரையறுத்திருக்கிறதுமக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைப்பது.
பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பது.
பார்லிமெண்ட் கூட்டத் தொடரைக் கூட்டுவது மற்றும் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் உரையாற்றுவதுபோன்றவை இவரது பணிகள் ; ஆனால்இதில் எதிலுமே அவர் தன் விருப்பம் போல்  செயல்பட முடியாது..
பார்லிமெண்டில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகும்.பிரதமரின் அறிவுரைப்படி மாநில கவர்னர்கள்சுப்ரீம் கோர்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதிகள்மத்திய அரசின் தலைமை வழக்கற்ஞர்தலைமைத் தேர்தல் ஆணையர்அயல்நாடுகளுக்கு தூதர்கள் ஆகியோரை நியமிக்கிறார்.நெருக்கடி நிலை பிரகடனம் செய்யமக்களவையைக் கலைக்கமாநில அரசுகளைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டுகுற்றவாளிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பதற்கும்தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையைக் குறைக்கவும் கூட ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டுஇவற்றையெல்லாம் பார்க்கும்போது ஜனாதிபதிக்கு எண்ணற்ற அதிகாரங்கள் இருப்பது போல தோன்றலாம்ஆனால்உண்மையில் இவையனைத்தும் மத்திய அரசிடம் ( பிரதமரிடம் ) உள்ள அதிகாரங்கள்இதில் ஜனாதிபதியின் அதிகாரம் கையெழுத்திடுவது மட்டுமே

ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானல், அவருக்கு கீழ்க்கண்ட தகுதிகளை இந்திய அரசியல் சட்டம் நிர்ணயித்திருக்கிறது.
1) அவர் இந்தியக் குடிமகனாயிருக்க வேண்டும்
2) 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
3) ஊதியம் பெறும் மத்திய மாநில அரசுப் பணிகளில் இருக்கக் கூடாது.
4) மக்கள் சபை உறுப்பினராவதற்குரிய தகுதி பெற்றிருக்க வேண்டும்.

துணை ஜனாதிபதி, பிரதமர். மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் முதலியோர் கூட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் . ஆனால், அதற்கு தாங்கள் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்.ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.


பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள ஓட்டின் மதிப்பு 708 ஆகும். இது எப்படி கணக்கிடப்படுகிறது .. ?
நாட்டிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி சட்டமன்ற உற்ப்பினர்களின் மொத்த ஓட்டு மதிப்பை மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையான 776 ( மக்களவை 543+ இராஜ்யசபா 233 )ஆல் வகுத்தால் வருவதுதான் இந்த 708. நாட்டிலுள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 ஆகும். இவர்களது ஓட்டு மதிப்பு 5,49,474. இதை மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையான 776 ஆல் வகுப்பதால் கிடைக்கும் 708 தான் ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பாகும். இதனடிப்படையில் மொத்த எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 776*708= 5,49,408 ஆகும்
இனி சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.
 
சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அம்மாநில மக்கள் தொகை இவற்றின் அடிப்படையில் மாறுபடுகிறது.

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து வரும் ஈவை 1000ஆல் வகுப்பதன் மூலம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக இந்த முறையில் கணக்கீடு செய்யப்படுகிறது.


உதாரணமாக .பி. யின் மக்கள் தொகை 8,38,49,905.அம்மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 403. எனவே .பி. யின் ஒரு எம்.எல்..வின் வாக்கு மதிப்பு

83849905/403*1000 =208 ஆகும்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை - 4,11,99,168. எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 234.எனவே தமிழ எம்.எல்.. ஒருவரது ஓட்டு மதிப்பு ;

41199168/234*1000 = 176 ஆகும்.

சிக்கிம் மாநிலத்தின் மக்கள் தொகை - 2,09,843. எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 32.என்வே சிக்கிமிலுள்ள ஒரு எம்.எல்..வின் ஓட்டுமதிப்பு வெறும் 7 ஆகும் .

209843/32*1000 = 7.

இந்த அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பை இனி பார்ப்போம்.



1)ஆந்திரா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 294; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 148; மொத்த ஓட்டு மதிப்பு- 43512.
2)அருணாச்சல்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 60; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 8; மொத்த ஓட்டு மதிப்பு- 480.
3)அஸ்ஸாம்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 126; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 116; மொத்த ஓட்டு மதிப்பு- 14616.
4) பீஹார்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 243; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 173; மொத்த ஓட்டு மதிப்பு- 42039.
5) சத்திஸ்கர்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 90; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 129; மொத்த ஓட்டு மதிப்பு- 11610.
6)கோவா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 40; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 20; மொத்த ஓட்டு மதிப்பு- 800;
7) குஜராத்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 182; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 147; மொத்த ஓட்டு மதிப்பு- 26754;
8) ஹரியானா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 90; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 112; மொத்த ஓட்டு மதிப்பு- 10080.
9) ஹிமாச்சல்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 68; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 51; மொத்த ஓட்டு மதிப்பு- 3468.
10) காஷ்மீர்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 67; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 72; மொத்த ஓட்டு மதிப்பு- 6264.
11) ஜார்க்கண்ட்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 81; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 176; மொத்த ஓட்டு மதிப்பு- 14256.
12) கர்நாடகா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 224; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 131; மொத்த ஓட்டு மதிப்பு- 29344.
13)கேரளா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 140; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 152; மொத்த ஓட்டு மதிப்பு- 21280.
14) .பி.; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 230; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 131; மொத்த ஓட்டு மதிப்பு- 30130.
15) மகாராஷ்ட்ரா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 288; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 175; மொத்த ஓட்டு மதிப்பு- 50400.
16) மணிப்பூர்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 60; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 18; மொத்த ஓட்டு மதிப்பு- 1080.
17) மேகாலயா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 60; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 17; மொத்த ஓட்டு மதிப்பு- 1020.
18) மிசோராம்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 40; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 8; மொத்த ஓட்டு மதிப்பு- 320.
19) நாகாலாந்து; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 60; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 9; மொத்த ஓட்டு மதிப்பு- 540.
20) ஒடிசா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 147; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 149; மொத்த ஓட்டு மதிப்பு- 21903.
21) பஞ்சாப்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 117; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 116; மொத்த ஓட்டு மதிப்பு- 13572.
22)ராஜஸ்தான்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 200; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 129; மொத்த ஓட்டு மதிப்பு- 25800.
23)சிக்கிம்;எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 32; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 7; மொத்த ஓட்டு மதிப்பு- 224.
24)தமிழ்நாடு; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 234; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 176; மொத்த ஓட்டு மதிப்பு- 41184.
25)திரிபுரா; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 60; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 26; மொத்த ஓட்டு மதிப்பு- 1560.
26)உத்தரகாண்ட்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 70; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 64; மொத்த ஓட்டு மதிப்பு- 4480.
27).பி.; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 403; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 208; மொத்த ஓட்டு மதிப்பு- 83824.
28)மே.வங்கம்; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 294; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 151; மொத்த ஓட்டு மதிப்பு- 44394.
ஊனியன் பிரதேசங்கள்;
டில்லி; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 70; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 58; மொத்த ஓட்டு மதிப்பு- 4060.
பாண்டிச்சேரி; எம்.எல்..க்களின் எண்ணிக்கை - 30; ஒரு எம் எல் . ஓட்டு மதிப்பு - 16; மொத்த ஓட்டு மதிப்பு- 480.

  
மொத்தம் - 4120 எம்.எல்..க்கள்.
மொத்த ஓட்டு மதிப்பு - 5,49,474.
அரசியல் சட்டப் பிரிவு 52 ( 2 ) ன் படி 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியான மக்கள் தொகையே ஜனாதிபதி தேர்தலில் மாநில எம்.எல்..க்களின் ஓட்டு மதிப்பை கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது.

இனி நாட்டின் முந்தைய ஜனாதிபதிகளையும் அவர்களின் பதவிக்காலத்தையும் அறிந்து கொள்வோம்.

1) டாக்டர் ராஜேந்திர பிரசாத்;  26 ஜனவரி 1950 - 13 மே 1962
2) சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்; 13 மே 1962 - 13 மே 1967.
3) ஜாகீர் ஹூசேன்; 13 மே 1967 - 3 மே 1969.
4 )வி.வி.கிரி; 3 மே 1969 - 20 ஜூலை 1969 ( தற்காலிக ஜனாதிபதி )
5 ) ஜஸ்டிஸ் முகமது இதயத்துல்லா; 20 ஜூலை 1969 - 24 ஆகஸ்ட் 1969. ( தற்காலிக ஜனாதிபதி )
6) வி.வி.கிரி; 24 ஆகஸ்ட் 1969 - 24 ஆகஸ்ட் 1974.
7) பக்ரூதின் அலி அகமது; 24 ஆகஸ்ட் 1974 - 11 பிப்ரவரி 1977.
8 ) பி.டி.ஜட்டி; 11 பிப்ரவரி 1977 - 25 ஜூலை 1977 ( தற்காலிக ஜனாதிபதி )
9) நீலம் சஞ்சீவ ரெட்டி; 25 ஜூலை 1977 - 25 ஜூலை 1982.
10) கியானி ஜெயில் சிங்; 25 ஜூலை 1982 - 25 ஜூலை 1987.
11 ) ஆர்.வெங்கட்ராமன்; 25 ஜூலை 1987 - 25 ஜூலை 1992.
12) டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 25 ஜூலை 1992 - 25 ஜூலை 1997.
13) கே.ஆர். நாராயணன்; 25 ஜூலை 1997 - 25 ஜூலை 2002.
14) டாக்டர் அப்துல் கலாம்; 25 ஜூலை 2002 - 25 ஜூலை 2007.
15) பிரதிபா சிங் பாட்டீல்; 25 ஜூலை 2007 - 25 ஜூலை 2012.



இப்போதைய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி , ஆதரவுக் கட்சிகளால் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டிருக்கிறார். பாரதிய ஜனதா, அகாலி தள், அ.தி.மு.க, பிஜூ ஜனதா தள் போன்ற சில கட்சிகளால் பி.ஏ. ச்ங்மா நிறுத்தப்பட்டிருக்கிறார். 


முடிவை ஜூலை 19 க்குப் பிறகு காண்போம்.