Saturday 28 May 2011

கட்சிகளின் அங்கீகாரம்


ஒரு கட்சி தேர்தல் கமிஷனால் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் அக்கட்சி கீழ்க்கண்ட 4 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1)
கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 6% வாக்குகளும் 1 தொகுதியில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும்.
2 )
வாக்கு சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருக்க வேண்டுமானால் 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
3 )
கடைசியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகளும் 2 தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும்.
4 )
வாக்கு சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருக்க வேண்டுமானால் 8 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் அக்கட்சி குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும்..

Tuesday 24 May 2011

கடிதம் சொல்லும் சேதி

          கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த வாரம் தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.தனது கடந்த கால அரசியலை எல்லாம் அதில் நினைவு கூர்ந்திருக்கிறார். தி.மு.க.வின் தோல்வி பற்றிக் குறிப்பிடும் அவர் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்தது தோல்விக்கு ஒரு காரணம் என்கிற ரீதியில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிடுவது காங்கிரசைத்தான். காங்கிரஸ் 63 தொகுதி கேட்டு கொடுத்த நெருக்கடிக்கு பணியமாட்டோம் என்று வீரமாய் கர்ஜித்த கலைஞ்ர் அடுத்த சில நாட்களிலேயே அழகிரியை டெல்லிக்கு அனுப்பி காங்கிரசிற்கு பணிந்தது ஏன் .. ? கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மம்தா காங்கிரசை பணிய வைத்தார்; ஆனால், கர்ணாநிதி காங்கிரசுக்கு பணிந்தார். அது ஏன் .. ? காங்கிரசைக் கண்டு தி.மு.க. ஏன் பயப்படுகிறது .. ? தி.மு.க.வின் மடியில் 2ஜி ஊழல் என்ற கனமிருப்பதால்தான்தானே தி.மு.க.காங்கிரசிடம் சரணடைந்தது.
          காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுத்தது தி.மு.க.கூட்டணியின் தோல்விக்கு எப்படி காரணமாகும் .. ? தேர்தலில் தி.மு.க.வும் காங்கிரசும் உள்ளடி வேலைகள் செய்து ஒருவரை ஒருவர் கவிழ்த்துக் கொண்டார்கள் என்றால் தி.மு.க.வும் தானே தோல்விக்கு காரணம். திமு.க.வின் மற்ற கூட்டணிக் கட்சிகளான கொ.மு.க. ( 0 இடம் ), விடுதலைச் சிறுத்தைகள் ( 0 இடம் ), பா.ம.க.( 3 இடங்கள் )போன்றவைகள் படுதோல்வியை சந்தித்திருக்கின்றன்வே .. இதற்கு என்ன காரணம் ?
          தேர்தல் கமிஷன் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட நிலையை எடுத்த்தும் தி.மு.க.வின் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார் கலைஞ்ர். அப்படியானால் தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளுக்குட்பட்டு செயல்பட்ட அ.தி.மு.க. மட்டும் எப்படி வெற்றி பெற்றது .. ?தேர்தல் கமிஷன் தேர்தலில் பணபலத்தை ஒடுக்கத்தானே முற்பட்டது. அதுதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணமென்றால் தி.மு.க. இதுவரை பெற்ற வெற்றிகளெல்லாம் பணபலத்தால் பெற்ற வெற்றிகளே தவிர மக்கள் ஆதரவால் அல்ல என்று அர்த்தமா ..? 2006க்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் 2009 பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க.,ஓட்டுக்கு ரூ 1000 2000 என்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றது என்று கலைஞ்ர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா.?
          கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ரூ 1,76,379 கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய 2ஜி மெகா ஊழல், கருணாநிதியின் குடும்ப அரசியல், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைத்துத் துறைகளிலும் நுழைந்து கொண்டு அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் குவித்தது, முறைகேடான ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சித்தது , அவர்களது வன்முறை அரசியல் போன்றவைகள்தான் தி.மு.க. வின் படுதோல்விக்கான உண்மையான காரணங்கள். ஆனால், கருணாநிதி எதை எதையோ கூறி திசை திருப்ப முற்படுகிறார்.
          கலைஞர் டி.வி.யில் கனிமொழி வெறும் பங்குதாரர்தான். 2ஜி ஊழல் பணத்திலிருந்து 214 கோடி ரூபாய் கலைஞர் டி.வி.க்கு வந்ததில் கனிமொழிக்கு என்ன பொறுப்பிருக்க முடியும் என்றும் கலைஞர் கேட்டிருக்கிறார். 2ஜி ஊழல் பணத்திலிருந்து ரூ 1000, 2000 அல்ல 214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியிருக்கிறது. அந்த டி.வி.யின் ரிமையாளருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க முடியாது. கலைஞர் டி.வி.யின் உரிமையாளர் யார் ..? கனிமொழி
இல்லையென்றால் 60% பங்கு வைத்திருக்கிற தயாளு அம்மாளா ..? அப்படியானால்
தயாளு குற்றவாளியா ..?சாதாரணமாக யாராவது நிலமோ வீடோ வாங்கினால் பல்வேறு
காரணங்களுக்காக தங்கள் மனைவி, மகன் அல்லது மகள் பெயர்களில் வாங்குவார்கள்
; இந்த கதையும் அப்படித்தான் என்றால் கலைஞர் டி.வி.யின் உரிமையாளர்
கருணாநிதிதானா..? அவரும் இல்லையென்றால் அதன் உரிமையாளர்தான் யார் ..?
அந்த 214 கோடி ரூபாய்க்கு தானாக இறக்கை முளைத்து பறந்து வந்து கலைஞர்
டி.வி. அலுவலகத்தில் வந்து புகுந்து கொண்டதா..?
எப்படியோ முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி படு ஜரூராக நடக்கிறது. . ஆனால், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
.