Thursday 1 June 2017

வைர விழா நினைவுகள்



' டாக்டர் 'பட்டம் அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதும் அதில் சிக்கி  உதயகுமார் என்ற மாணவன் உயிரிழந்ததும் வரலாறு; இறந்த உதயகுமாரின் தந்தையை மிரட்டி அவன் தனது மகனே இல்லை என்று கூற வைத்தது 'டாக்டர்' பட்டம் பெற்றவரின் தனி சாதனையாக இன்னமும் நிலைத்து நிற்கிறது.
கோதுமை பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஊழல் என பல லஞ்ச ஊழல் விவகாரங்கள் வெளிவந்து தமிழகத்தில் ஊழலுக்கு ஆரம்பத்தை உருவாக்கித் தந்த சாதனையாளர்; 'விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்' என மேன்மைதாங்கிய நீதிபதி சர்க்காரியா அவர்களாலேயே பாரட்டப்பட்ட பெருமைக்குரியவர்.
'கூவத்தை மணக்க வைப்போம்' என முழங்கி பல இலட்சங்களை ( அந்தக் கால மதிப்பில்) சுருட்டிய வரலாறும் உண்டு. ஆனால், கூவம் என்னவோ மணக்கவில்லை.
தமிழகமெங்கும் தொழிலாளர் சங்கங்களில் திமுக வின் ஆதிக்கத்தை திணிப்பதற்காக தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர்கள் மீது பெரும் வன்முறை ஏவிவிடப்பட்டது. தொழிற்சங்க தலைவர்களான R.குசேலர், V.P. சிந்தன் போன்றோர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வன்முறைக் கலாச்சாரம் தமிழகமெங்கும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. காவல் நிலையங்கள் திமுக ரௌடிகளின் குண்டர்களின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்ட பெருமையும் நிகழ்ந்தது.
தனது ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டினார்கள் என்பதற்காக 'அலை ஓசை' , 'துக்ளக்' போன்ற பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவி அலுவகத்தைச் சூறையாடி பத்திரிக்கை ஊழியர்கள் தோலுரிக்கப்பட்டனர்.. குடும்பத்தகராறுக்காக 'தினகரன்' பத்திரிக்கை அலுவலகத்தை தீக்கிரையாக்கி பத்திரிக்கை ஊழியர்கள் 3 பேரை உயிரோடு எரித்துக் கொன்ற சாதனையும் நடந்தது. இதில் குற்றவாளிகள் ஒருவர் கூட தண்டனை பெறாத வகையில் ஆட்சி ஆதிகாரத்தை  பயன்படுத்தி கொலையாளிகளை சுதந்திரமாக உலாவ விட்ட அதிர்ச்சி சம்பவத்தையும் உலகம் கண்டது.
பெருந்தலைவர் காமராஜர், திருமதி இந்திரா காந்தி,திருமிகு ஜெயலலிதா உட்பட பல அரசியல் தலைவர்களை எல்லாம் அநாகரீகமாக கழிசடை வார்த்தைகளால் விவர்சித்து, தமிழகத்தில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியவர்.
சட்டமன்றத்தில் தனது அரசு செயல்பாடுகளை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் அனந்தநாயகி அவர்களுக்கு  சொல்லவே வாய் கூசும் இரண்டு பொருள் தரும் வார்த்தைகளால் பதிலளித்தது...இந்திரா காந்திக்கு விதவைத் திருமணம் செய்து வைக்கத் தயார் என்றது...மதுரையில் கட்சி குண்டர்களின் மூலம் அவரைக் கொல்ல முயற்சித்ததது..சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா அவர்களின் புடவையைப் பிடித்து  இழுத்ததோடு, அவரை கடுமையாக தாக்கவும் செய்தது என எத்தனை அற்புத சாதனைகள்.. 
2006-11 காலகட்டத்தில், தமிழகமெங்கும் அப்பாவி மக்களின் நிலங்களை முறைகேடாக அபகரித்து, குடும்பத்தினர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு உரிமையாக்கிக் கொடுத்த அளப்பரிய சாதனையாளர்.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் கனிமொழி ராசா மூலம் ரூ 1,76,000 கோடிகள் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தி, பல்லாயிரம் கோடிகள் தன் குடும்பம் சம்பாதிக்க வகை செய்த சாதனையை உலகமே வியந்து நோக்கியது. 
கலைஞர் தொலைக்காட்சி சேனல்கள் துவக்க 2ஜி ஊழலில் தன் மகள் மூலம் சுமார் 230 கோடி மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை தன்னுடமையாக்கிக்கொண்டவர்.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ் சினிமா உலகத்தையே தன் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்த வல்லமை மிக்கவர்.
பேரன்களான KD சகோதரர்கள் BSNL கேபிள்களை முறைகேடாக தங்களுக்கு உரிமையான சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தி ரூ 750 கோடி அளவில் மக்கள் பணத்தைச் சுருட்ட துணையிருந்தார்,
ஏர்செல் - மாக்சிஸ் முறைகேட்டின் மூலம் தனதுபேரன்களான KD சகோதரர்கள் சுமார் 650 கோடி ( மக்கள் பணத்திலிருந்து )சம்பாதிக்க துணையிருந்தார்.
தனது குடும்பத்தினர்களின் ( குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை )விளம்பரத்திற்காகவும் தனது மகள் கனிமொழியின் கவிதைகளை அரங்கேற்றவும் செம்மொழி தமிழ் மாநாடு என்ற பெயரில் தன் குடும்ப புகழ்பாடும் மாநாட்டை சுமார் 450 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நடத்திக்காட்டிய பெரும் புத்திசாலி.
தானும் தனது குடும்பத்தினர்களும் பதவிகளில் நீடிக்க வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட உறுதுணையாயிருந்து வரலாற்றுச் சாதனை படைத்தவர்,
காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைகளில் தமிழகத்தின் நலனை விற்று தனது குடும்ப நலனைப் பாதுகாத்துக் கொண்டவர்.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, சில இலட்சங்களாக இருந்த தங்கள் குடும்பச் சொத்துக்களின் மதிப்பை பல இலட்சம் கோடிகளாக உயர்த்திக் கொண்ட சிறந்த குடும்பத்தலைவர்.
தனது கட்சியின் மாவட்டச் செயலாளர் தா.கிருஷ்ணன் குறிப்பிட்ட சிலரால் படுகொலை செய்யப்பட்டபோது கட்சியில் இதுபோல் நடப்பது வழக்கமாகனதுதான் என்று கூறிய பரந்த மனப்பான்மைக்கு உரியவர்.
திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் தனிக்கட்சி கண்டபோது, அவர் சார்ந்த கேரள மக்களும் அவர்களது கடைகளும் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்த உண்மை. பிராமணர்களை,  பார்ப்பான் வந்தேறிகள் என்று வசைபாடி அவர்கள் மீது பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட ஆதரவாய் இருந்ததும் உண்மைதானே.
தனித் தமிழ்நாடு, தனிக்கொடி என்று முழங்கியதோடு தன்னை தமிழகத்து முஜிபீர் ரஹ்மான் என்று அழைக்க வைத்து பெருமைப்பட்டுக் கொண்ட கடந்த காலமும் மறக்கக் கூடியதா..?
'ஹிந்து என்றால் திருடன்' என்ற யாருக்குமே தெரிந்திராத விளக்கத்தைச் சொன்ன மதச்சார்பற்றவாதியை மறக்கவில்லையே..
கிறித்துவ முஸ்லீம்களுக்கு சார்பாகச் செயல்படுவதும் அவர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவதும் ஹிந்துக்களையும் ஹிந்து மதத்தையும் இழிவுபடுத்துவதும்தான் மதச்சார்பின்மை என்ற புது நியதியை உருவாக்கியவர்.
நான் ஒரு குல்லா போடாத முஸ்லீம் என்று பெரும் புளகாங்கிதத்துடன் தன்னை அழைத்துக் கொண்டவர்.
திராவிட முன்னேற்றக் கழகம் என அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சியை  கருணாநிதி குடும்ப முன்னேற்றக் கழகமாக மாற்றிக்காட்டியது சாதாரண சாதனையா..?
கட்சியை மட்டுமா.. ஆட்சியையும் தனது குடும்ப ஆட்சியாக மாற்றிய சாதனையும் நிகழ்ந்தேறியது.
பெரும் கடலிலிருந்து சிறு குடத்தில் அள்ளியவை மட்டுமே இங்கு எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி எத்தனை..எத்தனை..எத்தனை...எத்தனை நிகழ்வுகள்....மறக்க முடியுமா வைர விழா சாதனைகள்…?