Thursday 26 December 2013

2014ன் பலிகடா விஜயகாந்த்தா..?



தே.மு.திக. நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம் பா... என்பது மதவாதிகள், பிராமணர்கள் கட்சி; அதோடு கூட்டணி வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கூற, விஜயகாந்த்தும் தான் அவரது கருத்தை பரிசீலிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.

எஸ்ரா சற்குணம் கிறித்தவப் பேராயாராக இருந்த போதிலும் உறுப்பினர் அட்டை பெறாத தி.மு.க... உறுப்பினர் என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மை.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டணி சேர எந்தக் கட்சியும் முன்வராத நிலையில் பெறப் போகும் படுதோல்வியை மனதில் கொண்டு, தே.மு.தி.. வைத் தன்னோடு சேர்த்துக் கொள்ள எஸ்ரா மூலம் தூதனுப்பியிருக்கிறார் கருணாநிதி.

அதோடு, விஜயகாந்த் பா... கூட்டணியில் இணைந்தால், நாட்டில் வீசும் மோடிக்கு ஆதரவான பெரும் அலையின் பயனால், திமு..வை விட தே.மு.தி.. அதிக இடங்களைப் பிடித்து விட்டால் தமிழக அரசியலில் தி.மு. 4வது அல்லது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டு விடக்கூடும் என்ற அச்சமும் இதன் பின்னணியில் இருக்கக் கூடும்.

எஸ்ரா சற்குணமும் அந்தப் பணியை திறம்படச் செய்து, விஜயகாந்த்தை தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வ்லியுறுத்தியதன் மூலம்  ஏமாற்றி, தேர்தல் தோறும் தி.மு.. அதி.மு.. என்று மாறி மாறி கூட்டணி வைக்கும் உதிரிக் கட்சிகளின் பட்டியலில் தே.மு.தி.. வையும் இணைக்க முயற்சித்திருக்கிறார்.

அவரது இந்த முயற்சியை விஜயகாந்த்தும் நிறைவேற்றி வைக்கப் போகிறாரா ..?

அப்படியானால் 2014 பாரளுமன்றத் தேர்தலுக்கு தி.மு..விற்கு பலிகடாவாகப் போவது விஜயகாந்த் தானா ..?




Saturday 21 December 2013

தீர்ப்பு திருத்தப்பட வேண்டியதில்லை


ஒரு பாலின உறவு இந்திய தண்டனைச் சட்டம்  377 வது பிரிவின்படி குற்றமே என்று உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு. 

நாட்டில் எத்தனையோ முக்கியப் பிரச்னைகள் எல்லாம் இருக்கும்போது அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒரு சாராரது வக்கிர உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் ஒரு பாலின உறவைச் சட்டபூர்வமாக்க அரசு ஏன் இந்த அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறது ..?

ஒரு பாலின உறவு குற்றமில்லை என்றால், ஒரு பாலினத் திருமணமும் சரியானதுதானே..?அதற்காகவும் சட்டம் இயற்றப் போகிறதா மத்திய அரசு ..?

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் தவறானது; கண்டனத்திற்குரியது.

இந்தியாவில் சுமார் 6%லிருந்து 10% மக்கள் இது போன்ற உறவில் நாட்டமுடையவர்களாயிருக்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு கூறுகிறது.விரைவில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் இத்தகைய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே
ரசு இத்தகைய காரியத்தில் இற்ங்கியிருக்கிறது. 

ஓட்டுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை சமுதாயத்தை சீரழிக்கும்

ஒரு பாலின உறவு என்பது வக்கிரமானது; அநாகரீகமானது. நமது நாட்டின் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் விரோதமானது.
ஒரு பாலினத்தினர் உறவிற்கு தடை விதிப்பது தனி மனிதர் உரிமைக்கு விரோதமானது என்ற வாதம் சரியான ஒன்றல்ல; தனி நபர் அபிலாஷைகள் சமூக நன்மைக்கு முரண்படும்போது, அவை நிராகரிக்கப்படுகின்றன.

உச்ச்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சரியானது; இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய அவசியமல்லாத தீர்ப்பு.

Wednesday 18 December 2013

இது தொடரும் கதை



          
          தி.மு.. பொதுக்குழு கூட்டத்தின் இறுதியில் உரையாற்றிய கருணாநிதி நம்பிக்கைத் துரோகம் செய்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, ஜெனிவாவில் நிகழ்ந்த மனித உரிமைக் கமிஷன் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது தொடர்பான விஷயத்தில் கூட இதே போல காங்கிரஸ் உறவைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்
          ஆனால், அடுத்த சில வாரங்களுக்குள்ளேயே தனது மகள் கனிமொழியை ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்குவதற்காக காங்கிரஸ் 'கை'யின் உதவியை நாடினார். சமீபத்தில் நிகழ்ந்த ஏற்காடு இடைத் தேர்தலில் கூட தி.மு.. வேட்பாளரை ஆதரிக்க காங்கிரசிடம் வலியப் போய் ஆதரவு கேட்டார்.ஆனால், மீண்டும்  இப்போது 2ஜி ஊழல் விவகாரத்தில் தனது மகள் கனிமொழியை காங்கிரஸ் காப்பற்றவில்லை என்ற காரணத்தைக் கூறி காங்கிரஸ் உறவைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
           கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் அவரது குடும்பத்தினர்களின் நலனை மையமாக வைத்தே அமைகின்றன என்பதை அவரது இந்தப் பேச்சு தெளிவாகப் புலப்படுத்துகிறது.
           கனிமொழி மீது 2ஜி ஊழல் தொடர்பான சி.பி.. நடவடிக்கைகள் கடந்த சட்டமன்ற்த் தேர்தலுக்கு ( 2011 )முன்பே ஆரம்பித்து விட்டன. ஆனால், இதுவரை கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில்தான் நீடித்து வந்தார். சோனியா காந்தியை சொக்கத் தங்கம் என்றும் பசிப்பிணி தீர்த்த மணிமேகலை என்றும் பலவாறாகப் போற்றிப் பணிந்து வந்தார். ஏனெனில் அப்போது கூட்டணியை முறித்துக் கொண்டால் 2ஜி ஊழல் விஷயத்தில் தனது குடும்பத்தினர் மீதான நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தி விடும் என்ற அச்சம் அவருக்கிருந்தது.
          ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது; விரைவில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நிகழவிருக்கின்றது; டில்லி, இராஜஸ்தான், .பி.,சட்டிஸ்கர் மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தோற்கும் குதிரை என்பதை அவருக்கு உணர்த்தியிருக்கின்றன. எனவே, இதுவரை காங்கிரசின் 'கை'யைபிடித்துக் கொண்டிருந்த  அவர் இப்போது கழுத்தைப் பிடிக்கத் தயாராகி விட்டார்.
                    
                        2004 லும் அப்படித்தான்; 5 வருடங்களாக பா... கூட்டணியில் இருந்து மத்திய அரசில் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முரசொலி மாறன் மறைவிற்குப் பின் அவரது மகனும் தனது பேரனுமான தயாநிதி மாறனுக்கு வாஜ்பாய் மத்திய கேபினட் அமைச்சர் பதவி தர மறுத்து விட்டார் என்ற காரணத்திற்காக சோனியாவுடன் போய் சேர்ந்து கொண்டார்.
          பா...வுடனான இந்தக் கூட்டணி விஷயமாகக் கூட கருணாநிதி தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். வாஜ்பாய் நமது நண்பராக இருந்த காரணத்தால்தான் அப்போது கூட்டணி வைத்துக் கொண்டதாக அவர் பேசியிருக்கிறார். அப்படியானால், 2004 தேர்தலிலும் கூட பா... வாஜ்பாயைத் தானே பிரதமராக அறிவித்தது.. கருணாநிதி ஏன் வாஜ்பாயைப் புறக்கணித்து விட்டு சோனியாவிடம் போய்ச் சேர்ந்து கொண்டார்..?
                      1999 லிருந்து 2003 இறுதி வரை கருணாநிதிக்கு நண்பராய் இருந்த வாஜ்பாய் 2004ல் விரோதியாகி விட்டார்.2004 ஜனவரி முதல் கருணாநிதிக்கு சொக்கத் தங்கமாயிருந்த சோனியா காந்தி இப்போது பித்தளையாகி விட்டார். இந்த மாறுதல்களுக்கு முழுக்க முழுக்க காரணம் கருணாநிதியின் தனது குடும்ப நலன் சார்ந்த அரசியலே. இப்போது பா...வின் பிரதமர் வேட்பாளர் மோடியை விமர்சித்திருக்கும் கருணாநிதிக்கு, 2014 ஜூனில் மோடி பிரதமரான பின் 2ஜி வழக்குகளிலிருந்து கருணாநிதியின் குடும்பத்தினரை காப்பாற்ற உறுதி கொடுத்தால்.,. தன் அமைச்சரவையில் தி.மு.. வைச் சேர்த்துக் கொண்டு, கருணாநிதியின் குடும்பத்தினருக்கு பணம் சம்பாதிக்க வசதியான நல்ல இலாக்காக்களை வழங்கினால் . அதே மோடி கூட சொக்கத் தங்கமாக காட்சியளிப்பார்
          
அவரது இந்த  குடும்ப நலன் சார்ந்த  இது போன்ற அரசியல் தந்திரங்கள் என்றுமே தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.