Thursday 29 August 2013

தமிழிலக்கியங்களில் திறமை பெற்ற கருணாநிதி



சோனியா காந்தியை 'மக்களின் பசிப்பிணி தீர்த்த மணிமேகலை' என்று பாராட்டியிருக்கிறார் கருணாநிதி.

காங்கிரஸ் கட்சியினர் கூட அவரை இப்படிப் பாராட்டிப் பேசியதில்லை.அந்த அளவிற்கு கருணாநிதி சோனியாவின் தாள் பணிந்திருக்கிறார்; சோனியாவின் அருள் பெற்று கருணாநிதி நலமாயிருக்கட்டும்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்திருக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கிலோ ரூ3 விலையில் அரிசி வழங்கப்படும். ஆனால், தமிழகத்தில் இப்போது அனைத்து மக்களுக்கும் எவ்வித விலையுமில்லாமல் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது; அதுமட்டுமல்லாமல், 'அம்மா உணவகம்' திட்டத்தின் மூலம் தரமான காலைச் சிற்றுண்டியும் மதிய உணவும் மிக மிக மலிவான விலையில் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை விட தமிழக அரசின் இந்த திட்டங்களே சிறப்பானது என்பதை கட்சி பேதம் கடந்து அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

இது ஒருபுறமிருக்கட்டும்.

கருணாநிதி திடீரென்று இப்படி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை சாக்காக வைத்து, சோனியா தலையில் டன் கணக்கில் ஐஸ் வைத்து அவர் தாள் பணிய நினைப்பது ஏன் ..?

சொக்கத் தங்கம் .. சொக்கத் தங்கம் என்று சோனியாவைப் புகழ்ந்து அதன் மூலம் மத்திய அரசில் பணம் கொழிக்கும் இலாக்காக்களை தன் கட்சிக்கு வாங்கிக் கொண்டு, 2ஜி ஊழலில் தன் மகள் கனிமொழி மூலமும் பேரன் தயாநிதி மாறன் மூலமும் ஆயிரக் கணக்கான கோடிகள் பலன் பெற்றவர் கருணாநிதி. இன்று பசிப்பிணி தீர்த்த மணிமேகலை என்று அவரைப் புகழ்ந்து அதன் மூலம் தயாநிதியையும் கனிமொழியையும் 2ஜி ஊழல் வழக்குகளிலிருந்து விடுவிக்க நினைக்கிறார்.  

விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு ராகுல் வாழ்த்துச் சொன்னது கருணாநிதிக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தே.மு.தி..வுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், 2ஜி ஊழலில் நியாயமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிடும் என்ற அச்ச உணர்வின் காரணமாகவும் மீண்டும் சோனியாவுடன் கூட்டணிக்கு இல்லை.. இல்லை.. சோனியாவின் தாள் பணியத் தயாராகி விட்டார் கருணாநிதி. இதுதான் சோனியா காந்தி மணிமேகலை அவதாரமானதின் பின்னணி ஆகும்.

அவர் சோனியாவை புகழ வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மணிமேகலை என்ற பெயரைத் தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு பின்னணி காரணமிருக்கிறது. தமிழிலக்கியத்தில் வரும்  ணிமேகலை தனக்குக் கிடைத்த அள்ள அள்ளக் குறையாமல்
உணவு வழங்கும் அட்சய பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு உணவளித்தவர். கருணாநிதிக்கு என்று ஒரு சிறப்பியல்பு உண்டு. அவருக்கு எல்லாமே அவரது குடும்பம்தான். அவரது குடும்பத்தினரின் வளர்ச்சியைத்தான் மக்களின் வளர்ச்சியாக நினைப்பார்; அவரது குடும்பத்தினரின் மகிழ்ச்சியைத்தான் மக்களின் மகிழ்ச்சியாகக் கருதுவார். அந்த அடிப்படையில்தான் அவர் சோனியாவை ' மக்களின் பசிப்பிணி தீர்த்த மணிமேகலை' என்று பாராட்டியிருக்கிறார்.

சோனியா காந்தி கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர்களின் பதவிப் பிணிகளைத் தீர்த்தவர்; அவர்களது பணப்பிணிகளைத் தீர்த்தவர்
அதனால்தான் அவரை மணிமேகலை என்று பாராட்டியிருக்கிறார் கருணாநிதி. என்ன இருந்தாலும் தமிழிலக்கியங்களைப் படித்தவர் அல்லவா ....

Thursday 8 August 2013

இந்திய வீரர்கள் படுகொலை

எல்லையில் பூஞ்ச் பகுதியில் இந்தியப் படைவீரர்கள் 5 பேர் பாகிஸ்தான் காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்திய இராணுவம் ஏன் இன்னும் பதிலடி கொடுக்காமல் அமைதி காக்கிறது ..?

5 பேர்களுக்குப் பதிலாக குறைந்த பட்சம் 50 பாகிஸ்தான் காட்டுமிராண்டிகளாவது கொல்லப்பட வேண்டும்.

மத்திய அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறதா இராணுவம் ..?

இந்தியாவை இப்போது ஆள்கிற அரசின் அதிகார மையத்தில் இருப்பவர்கள் இது போன்ற படுகொலைகளுக்கெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.

இதையெல்லாம் அவர்கள் ஒரு சாதாரண சம்பவமாகத்தான் நினைப்பார்கள்.

எனவே இவர்களிடமிருந்து எந்த உத்தரவையும் எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் செய்தது செய்யப் போவது எல்லாம் இரண்டு விதமான காரியங்கள் மட்டுமே.

ஒன்று;

" நாங்கள் பொறுமையாய் இருப்பதால் எங்களை கோழைகள் என்று நினைத்து விடக்கூடாது "
" இப்படிப்பட்ட படுகொலைகளால் எங்களைப் பணிய வைத்து விடமுடியாது "
" இந்தியா பாகிஸ்தான் உறவை யாராலும் சீர்குலைத்து விடமுடியாது "

இப்படிப்பட்ட காகித அம்புகளை ஏவுவார்கள்.

இரண்டு;

இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தானின் பிரதமரையோ அதிபரையோ சந்தித்து விருந்துண்டு அளாவளாவி மகிழ்வார்கள்.

அதுமட்டுமல்ல, 

" பாகிஸ்தானிய படைவீரர்களால் கொல்லப்பட இந்திய வீரர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நாட்டின் அமைதிக்காகவும் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு இந்திய வீரரும் இது போன்ற தியாகங்கள் செய்யத் தயாராயிருக்க வேண்டும் "

இது தேர்தல் காலம்; அதனால் இன்னும் ஒருபடி மேலே போய் மேலே சொன்னபடி கூட சொன்னாலும் சொல்வார்கள்.



இவர்கள் தேசத்தையும் மக்களையும் காப்பாற்றும் தகுதியற்றவர்கள். இந்தியாவின் வல்லமையையும் கௌரவத்தையும் காக்க இயலாதவர்கள்.

அதனால்,

இந்தியாவைக் காக்கும் உயர்ந்த பணியில் தங்கள் வாழ்வையே தியாகம் செய்யும் நாட்டின் முதல் குடிமக்களான படை வீரர்களே..

வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருந்து பாகிஸ்தான் காட்டுமிராண்டிகளைக் கொன்று குவியுங்கள்.

இனியும் இதுபோல் நடக்காதிருக்க எச்சரிக்கையுடனிருங்கள்.

இந்த அரச நம்பி எந்தப் பயனும் விளையப் போவதில்லை.

தேசத்தைக் காப்பதோடு உங்களையும் காத்துக் கொள்ளுங்கள்

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால்,

அரசின் உத்தரவிற்காக எல்லாம் காத்திருக்காதீர்கள்;

கடுமையான பதிலடி கொடுங்கள்.
இந்திய வீரர் ஒருவரின் உயிர் போனால், எண்ண இயலாத அளவிற்கு பாகிஸ்தானிய காட்டுமிராண்டிகளைக் கொன்றொழியுங்கள்.

125 கோடி இந்தியர்களும் உங்கள் பின் நிற்கிறார்கள்; நிற்பார்கள்.