Friday 2 October 2015

மக்கள் புத்திசாலிகள்

          சில வருடங்களுக்கு முன்பு, ஆதிசங்கர் என்ற தி.மு.. எம்.பி. நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்ததைப் பார்த்த கருணாநிதி, "என்ன .. நெற்றியில் அடிபட்டு விட்டதா.. இரத்தம் வருகிறதே.." என்று கிண்டல் செய்து அந்த குங்குமப் பொட்டை அழிக்க வைத்தார்.( ஆனால், அவரது கட்சியிலிருக்கும் இஸ்லாமியர்கள் தலையில் மதச் சின்னமான குல்லா அணிந்திருந்தால் என்ன தலையில் அடிபட்டு விட்டதா என்று கேட்கமாட்டார். )
         கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின்போது ஸ்டாலின் தனது ஃபேஸ் புக், ட்விட்டர் பக்கங்களில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்; மறுநாள் கருணாநிதி, "ஹிந்துப் பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது; அது தி.மு..வின் கொள்கைகளுக்கு எதிரானது" என்று கூற உடனே ஸ்டாலின் 
"விநாயகர் சதுர்த்திக்கு நான் வாழ்த்து தெரிவிக்கவில்லை.. எனது 
ஃபேஸ் புக், ட்விட்டர் பக்கங்ளை நிர்வகிப்பவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள் என்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கூறி அந்த வாழ்த்துச் செய்தியை தனது பக்கத்திலிருந்து அழித்தார். ( உலக சரித்திரத்திலேயே மக்களுக்கு தெரிவித்த ஒரு வாழ்த்தை திரும்பப் பெறுவதாகக் கூறிய ஒருவர் ஸ்டாலினாகத்தான் இருக்க முடியும் )
           ஆனால், அதே கருணாநிதியும் ஸ்டாலினும் சிறிது கூட 
வெட்கமே இல்லாமல் ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸூக்கும், பக்ரீத்துக்கும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அது தி.மு..வின் கொள்கைகளுக்கு உகந்த விஷயமாம். இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்; கருணாநிதி ஸ்டாலின் போன்றவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்களோ, நாத்திகம் பேசும் பகுத்தறிவுவாதிகளோ அல்லர்; அவர்கள் ஹிந்து விரோதிகள். ( ஆனால், தமிழகத்திலிருக்கும் பல ஹிந்துக்கள் சிறிது 
 கூட சுயமரியாதையே இல்லாமல் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் ஆதரித்துக் கொண்டிருப்பதோடு அவரது குடும்பம் மேலும் கோடி கோடியாய் சம்பாதிக்க தங்கள் உழைப்பையும் வாழ்க்கையையும் வீணடித்துக் கொண்டிருப்பது பெரிதும் 
 வருத்தத்திற்குரிய விஷயம். அத்தகையவர்கள் விழிப்படைந்து உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.  )
          இப்போது 'நமக்கு நாமே' என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்து, ஊர் ஊராக, தெருத் தெருவாக கோமாளிக் கூத்துக்களை நடத்திக் கொண்டுவரும் ஸ்டாலின், கோயிலுக்கெல்லாம் சென்று "கடவுளே.. எங்கள் குடும்பத்தினரை மீண்டும் பதவிகளில் அமர்த்த வழி செய்" என்று வேண்டிக் கொள்கிறார்.அதோடு ஆர். எஸ்.எஸ்
 தலைவர்கள்,மற்றும் ஹிந்து அமைப்புக்களின் தலைவர்களையெல்லாம் சந்தித்து தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டி வணங்கி கேட்டுக் கொண்டு வருகிறார்.
          கடந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்ததற்கே எதிர்ப்பு தெரிவித்து அது கட்சிக் கொள்கைக்கு விரோதமானது என்று கோபப்பட்டு அதை நீக்க வைத்த கருணாநிதி, ஸ்டாலினின் இந்தச் செயல்களை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். காரணம்..நமக்கெல்லாம் தெரியும் ..இன்னும் சில மாதங்களில் தேர்தல் வருகிறது. இந்த வேடமெல்லாம் தேர்தல் முடியும் வரைதான். இந்த நாடகமெல்லாம், ஏமாற்று வேலைகள் எல்லாம் 2016 மே மாத  தேர்தலுக்காகத்தான் அரங்கேற்றப்படுகிறது. ஆனால், மக்கள் புத்திசாலிகள். இதுபோன்ற வேஷதாரிகளை தேர்தலில் முற்றிலும் நிராகரிப்பார்கள்.