Sunday 20 January 2013

மக்களுக்கு வந்த சோதனை.





மத்திய .மு.கூ. அரசு டீசல் விலையின் மீது அபரிமிதமான உயர்வை அறிவித்திருக்கிறது. லிட்டருக்கு 50 பைசா என மாதந்தோறும் விலை உயரப்போகிறது. இதுமட்டுமல்லாமல், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக டீசல் வாங்கும் மாநில அரசுகளின் பேருந்து போக்குவரத்து நிறுவனங்கள், ரெயில்வே, இராணுவம் போன்றவற்றிற்கு வழங்கப்படும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ 12 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு பெரும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அத்யாவசியப் பொருட்களான அரிசி, காய்கறிகள், மற்றும் பிற உணவுப் பொருடகள் உடபட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும்.
                                                          
மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டிருப்பதால் அனைத்து மாநில அரசுகளும் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியத்தையும் உண்டாக்கியிருக்கிறது மத்திய அரசு. இந்தக்கட்டண உயர்வினால், தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருடத்திற்கு ரூ 1200 கோடிக்கு மேல் கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பரில்தான் டீசல் விலை ரூ5 க்கு மேல் உயர்த்தப்பட்டது. இப்போது மேலும் இப்படி ஒரு அதிகபட்ச விலை உயர்வு மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பார்கள்.ஆனால், இந்தக் கட்டண உயர்வால் மக்களின் வருமானத்திற்கு பல பக்கங்களிலிருந்தும் அடி விழப் போகிறது.
.மு.கூ. அரசின் அகராதியில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் என்றால், சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான மானியங்களை இரத்து செய்வது மற்றும் எல்லாப் பொருட்களின் விலைகளையும் உயர்த்துவது என்பதுதான் பொருள் போலிருக்கிறது.
நமது நாட்டில் ஊழல்களின் மதிப்பு இலட்சக்கணக்கான கோடிகளாய் உயர்கிறதுஅனைத்து விலைவாசிகளும் நமது விஞ்ஞானிகள் விண்ணில் ஏவும் ராக்கெட்டுகளின் வேகத்தில் உயர்கிறது; பெரும் பணக்காரர்களின் வருமானம் அந்த விலைவாசிகளைக் காட்டிலும் மின்னல் வேகத்தில் உயர்கிறது.ஆனால், சாதரண மக்களின் வருமானம் மட்டும் நத்தையின் வேகத்தைக் காட்டிலும் மெதுவாகத்தான் ஏறுகிறது. இவர்களது வருமானத்தைப் பெருக்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள்தான் இப்போதைய உடனடி தேவையாகும். இதற்கான நடவடிக்கைகளே உண்மையான பொருளாதாரச் சீர்திருத்தமாக அமையும்.  .


Tuesday 15 January 2013

பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 2 இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் காட்டுமிராண்டி படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் நாடு முழுக்க பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. பல்வேறு தரப்பு மக்களும் இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர்; பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கைகளும் விடப்பட்டிருக்கின்றன.   ஆனால், இதுபோன்ற கண்டனங்களாலும் எச்சரிக்கைகளாலும் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை.
கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானுடன் நல்லுறவு நிலவ வேண்டும் என்பதற்காக இந்திய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதும் கூட  இருதரப்பிலும் சுமூக உறவு மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இந்தியாவின் இத்தகைய நல்லுறவு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மதிப்பதேயில்லை.இந்த முறை மட்டுமல்ல இதற்கு முன்பும் பல தடவைகளிலும் இந்தியாவின் சமரச முயற்சிகளுக்குப் பதிலாக பாகிஸ்தான்  நாட்டுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதையும், எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் தொடுப்பதையுமே பதில் நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகிறது.  
எனவே பாகிஸ்தானுக்கு எதிராக தக்க பதிலடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்திய வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டாலும் குறைந்தது 10 பாகிஸ்தான் படையினராவது கொல்லப்பட வேண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கட்டும் மறுபுறம் வரம்பு மீறும் காட்டுமிராண்டி பாகிஸ்தான் படையினர்களையும் எல்லைக்குள் ஊடுருவ முயலும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளையும் நீதி, நியாயம்,கருணை எதுவும் பார்க்காமல் இந்திய இராணுவத்தினர் கொன்ற்  ஒழிக்க தகுந்த உத்தரவுகள் இடப்பட வேண்டும் இப்போது கூட தலை துண்டிக்கப்பட்ட இந்திய வீரர்க்கு பதிலடியாக எத்தனை முடியுமோ அத்தனை பாகிஸ்தான் படையினரை கொல்ல உத்தரவிட வேண்டும்.
ஒவ்வொரு இந்திய வீரரின் உயிரும் விலைமதிப்பற்றவை. பாகிஸ்தானுடன் நல்லுறவு தேவைதான். ஆனால், அது ஒருதரப்பாயிருக்க முடியாது. பாகிஸ்தானோடு அமைதி நீடிக்க வேண்டும் என்பதற்காக நமது வீரர்கள் பலியாவதற்கு ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் பகட்ட வேண்டியது உடனடி அவசியம்.