Saturday 25 June 2016

இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

NSG நாடுகளின் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்பை சீனாவின் எதிர்ப்பால் இந்தியா இழந்துவிட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் உட்பட அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் சீனா முட்டுக்கட்டை போட்ட ஒரே காரணத்தினால், இந்தியா NSG அமைப்பில் உறுப்பினராவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.  

ஆசியா பகுதியில் இந்தியாவின் பெருகிவரும் வளர்ச்சியையும் வலிமையையும் பொறுத்துக் கொள்ள முடியாததால் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு சீனாஇந்தியாவிற்கு முடுக்கட்டை போட்டிருக்கிறது. NSG அமைப்பில் சேர அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் 48 நாடுகளும் ஒருமனதாக இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாத நிலையிலும்கூட  சீனா தவிர்த்த மற்ற 47 நாடுகளும் இந்தியாவை இவ்வமைப்பில் சேர்த்துக் கொள்ள இணக்கம் தெரிவித்திருந்ததன. அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோளே விடுத்திருந்தது. இவையெல்லாம் உலக அரங்குகளில் இந்தியாவின் பெருகிவரும் செல்வாக்கை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி அவர்களின் இடையறாத கடும் உழைப்பு நாட்டுக்கு இத்தகையதோர் செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாதது.

இந்நிலையில் NSG அமைப்பில் இந்தியா இணைய முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியும் கெஜ்ரிவாலும் மோடியை குற்றம் சாட்டியிருப்பதை அற்பத்தனமான அரசியலின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மோடி பிரதமரானதிலிருந்தே உள்நாட்டில் தேசத்தை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் வெளிநாடுகளில் தேசத்தின் பெருமையை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் விளைவாக உலகத்தின் பெரும் நாடுகளோடு இணைத்துப் பேசுமளவிற்கு நாட்டின் நிலைமை உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய சீனா இந்தியாவை முடக்க பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வருகிறது. NSG அமைப்பில் இந்தியாவை இணைய விடாமல் தடுத்திருப்பது இந்த முயற்சியின் ஒரு பகுதியே.

ஆனால், இதுபோன்ற தடைகளையும் தகர்த்த்து முன்னேறும் நிலை விரைவில் ஏற்படும். கடந்த காலத்தில் உலகளாவிய அளவிலான இமாலய ஊழல்களுக்கு இந்தியா புகழ் பெற்றிருந்தது. இந்த இழிநிலைகள் மாறி சிறிது சிறிதாக பலமும் புகழும் பெற்ற நாடாக இந்தியா மாறிவருகிறது.


இது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்