Friday 12 May 2017

பொய் வேடதாரிகள்


தில்லி சட்டமன்றத்தில் கெஜ்ரிவாலின் உத்தரவுப்படி அவரது கட்சியைச் சார்ந்த M.L.A. ஒருவர் ஒரு 'டம்மி 'EVM ல்  (  Electronic Voting Machine )மதர் போர்டை மாற்றி EVM ல் தில்லுமுல்லுகள் செய்யமுடியும் என்று செய்துகாட்டியிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் AAP.  M.L.A.  பயன்படுத்தியது தேர்தல் கமிஷனால் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் EVM அல்ல; அது அவரது கட்சியே உருவாக்கிய டம்மி EVM ஆகும்.
 
இவர்கள் ஏன் திடீரென்று இப்போது EVM மீது குற்றம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்..? கெஜ்ரிவால் போன்றவர்கள் கீழ்த்தரமான மோசடியான அரசியல் களங்களை உருவாக்குகிறார்கள்; தங்கள் தோல்விகளையும் வீழ்ச்சிகளையும் மறைக்க ஜனநாயக நடைமுறைகளின் மீதே மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

தில்லியில் 2015 சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவாலின் கட்சி 70 ல் 67 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றபோது மத்தியில் மோடிதான் பிரதமராக இருந்தார்; அப்போது மட்டும் EVM  சரியாக வேலை செய்ததாக கெஜ்ரிவால் எப்படி நம்புகிறார்..?
இவரது நெருங்கிய அரசியல் சகாவும் மோடியின் கடும் எதிர்ப்பாளருமான மம்தா பானர்ஜியின் திரினமுள் காங்கிரஸ் இப்போதும் கூட மே.வங்கத்தில் நிகழ்ந்த அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. மம்தா அத்தொகுதிகளில் EVM ல் தில்லுமுல்லுகள் செய்துதான் வெற்றி பெற்றார் என்று கூறூகிறாரா கெஜ்ரிவால்..?
பஞ்சாபில் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பா... அகாலிதள் கூட்டணி தோல்வியடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது; அங்கே கெஜ்ரிவாலின் கட்சி 2ஆம் இடத்தைப் பெற்றது; பா...கூட்டணி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது; பஞ்சாபில் EVM ல் தில்லுமுல்லுகள் நடக்கவில்லையா..?
கோவா, மணிப்பூர் மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸும் பா...வும் ஒரளவு சம  இடங்களையே கைப்பற்றின. இம்மாநிலங்களில் பா.. .வுக்கு ஏன் அறுதிப் பெரும்பான்மை கிட்டவில்லை..? இம்மாநிலங்களில் EVM ல் தில்லுமுல்லுகள் நடக்கவில்லையா..?

.பி. யில் பா... பெற்ற பெருவெற்றியைக் கண்டு அதிர்ந்துபோய்தான் மனநிலை தவறியவர்போல கெஜ்ரிவால் EVM மீது  இப்படி கல்லெறிந்துகொண்டிருக்கிறார்.
மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றிபெற முடியும். தான் வெற்றி பெற்றால் அதை மக்களின் தீர்ப்பு என்று பறைசாற்றிக் கொள்வதும் பா... வெற்றி பெற்றால் அதை EVMல் நிகழ்ந்த தில்லுமுல்லுகளின் விளைவு என்று குற்றம்காட்ட முற்படுவதும் கோமாளித்தனத்தின் உச்சகட்டமே.

நாம் வேறொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்கொள்ளும் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய மக்கள் மனநிலை அறியும் கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை அப்படியே பிரதிபலிப்பதில்லை என்றாலும் பெரும்பாலான தருணங்களில் தேர்தல் முடிவுகளை ஒட்டியே அமைகின்றன. 2 மாதங்களுக்கு முன்பு  நிகழ்ந்த .பி. உட்பட 5 மாநிலத்தேர்தல்களின்போதும், கடந்த மாதம் நிகழ்ந்த தில்லி மாநகராட்சித் தேர்தல்களிலும் பெரும்பாலான தொலைக்காட்சிகள் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகள் பா... விற்கு சாதகமாகவே இருந்தன. தேர்தல் முடிவுகளும் அதையே பிரதிபலித்தன; அப்படியானால், .
தொலைக்காட்சிகளும் கூட பா... விற்கு ஆதரவாக தில்லுமுல்லுகள் செய்தன என்று கூறப்போகிறாரா கெஜ்ரிவால்..?

ஊழலுக்கு எதிராக என்ற போர்வைக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்த கெஜ்ரிவால், கடந்த 2 வருடங்களாக ஊழல்களும் கோமாளித்தனங்களும் நிறைந்த ஒரு ஆட்சியை தில்லியில் நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால், அவர் மீது மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். அதனால் அவரது கட்சி பல இடங்களிலும் தோல்வியைத் தழுவி வருகிறது; சமீபத்தில் நிகழ்ந்த தில்லி மாநகராட்சித் தேர்தல்களில் அவரது கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. கடப்பாரையை விழுங்கிவிட்டு, ஜீரணத்திற்கு சுக்கு காப்பி அறுந்தியவன் போல தனக்கு எதிராக பெருகிவரும் மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் திசைதிருப்ப EVM மீது குற்றம்சாட்டி க்கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால்.
கண்மூடித்தனமான மோடி எதிர்ப்புக் கொள்கை கெஜ்ரிவாலின் அரசியல் அழிவுக்காலத்தை அருகில் கொண்டுவந்துவிட்டது; விரைவில் நடக்கவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி அடையப்போகும் பெரும் தோல்வி அந்த அழிவை முழுமையாக்கிவிடும்.