Monday 8 September 2014

வெள்ளமும் உள்ளமும்




காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
 

பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி விமானத்தின் மூலம் உடனடியாகப் பார்வையிட்டு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தியிருப்பதோடு, ரூ 1000 கோடி நிதியும் ஒதுக்கியிருக்கிறார்.
 

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து ஆயிரக்கணக்கானோரைக் காப்பாற்றி வருகின்றனர்.

ஆனால், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மத அடிப்படையிலான பிரிவினைவாதிகளும் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினரும் அம்மக்களைக் காப்பாற்ற எவ்வித நடவடிகைகளிலும் ஈடுபடவில்லை; அவர்களுக்கு நிதி உதவி உட்பட எவ்வித உதவிகளையும் செய்யவில்லை.

இந்திய இராணுவம்தான் அவர்களைக் காப்பாற்றி எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறது.

காஷ்மீரிகள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மதவெறியர்களும் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் இது.


மத பயங்கரவாதம் அழிவைத்தான் கொடுக்கும் வாழ்வைக் கொடுக்காது; மத வெறியர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். இந்தியாவை நேசியுங்கள்; இந்தியராய் வாழுங்கள்.

Monday 1 September 2014

மக்கள் பதிலடி தருவார்கள்



கருணாநிதி முஸ்லிம், கிறிஸ்துவர்களின் புனித நாட்களானபக்ரீத், ரம்ஜான், ஈஸ்டர், கிறிஸ்துமஸ் போன்றவைகளுக்கு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார்; ஆனால், ஹிந்துக்களுக்குரிய விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது கூட இதே முறையைத்தான் கடைப்பிடித்து வந்தார்.  
ஆனால், விநாயகர் சதுர்த்தி அன்று, மு..ஸ்டாலின் தனது 'டுவிட்டர்'சமூக வலைத்தள பக்கத்தில் மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்து தெரிவித்திருந்தார். இது அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், 3 நாட்களுக்குப் பிறகு, "விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது ஸ்டாலினின் கருத்து அல்ல; அது அவருக்கு உடன்பாடானது அல்ல; ஸ்டாலினின் 'டுவிட்டர்' பக்கத்தை நிர்வகிப்பவர்கள் தவறுதலாக வாழ்த்து தெரிவித்து விட்டார்கள்" என்கிற ரீதியில் தி.மு..தலைமை விளக்கம் கொடுத்திருக்கிறது. 

ஒருவர் மற்றவர்க்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது என்பது ஒரு நல்ல மரபு; அந்த அடிப்படையிலேயே அனைத்து மதத்தினரின் புனித தினங்கள் அன்றும் அரசியல் தலைவர்களும் ஆட்சியிலிருப்பவர்களும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதை தங்கள் வழக்கமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால்,விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு,பின்பு ஏதோ செய்யக் கூடாத ஒரு பெரிய பாவச்செயலை செய்து விட்டது போல 'ஸ்டாலினுக்கத் தெரியாமல் வாழ்த்து சொல்லப்பட்டு விட்டது; ஸ்டாலினுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை' என்று தி.மு.க. ( கருணாநிதி ) விளக்கமளித்திருக்கிறது.இது மிகவும் மட்டமான அநாகரீகச் செயல் என்பதோடல்லாது இதன் மூலம் ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் கடுமையாக இழிவுபடுத்தியிருக்கின்றனர் கருணாநிதியும் ஸ்டாலினும்.
மதச்சார்பு என்றால் குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு ஆதரவாயிருப்பது; 'மதச்சார்பற்ற' என்றால் எந்த மதத்தினரின் சார்பாகவும் செயல்படாமல் அனைத்து மதத்தினரையும் சமாக நடத்துவது. ஆனால், கருணாநிதியும் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவிப்பது என்ற சாதாரண விஷயத்தில் கூட ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் இழிவுபடுத்துகிறார்கள் என்றால் இவர்கள் மதச்சார்பற்றவர்கள் அல்லர்; மதச்சார்பற்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கும் முழுமையான ஹிந்து விரோதிகள் என்பது நிச்சயமான உண்மையாகிறது.
பகுத்தறிவு என்ற பெயரில் கிறிஸ்துவ முஸ்லீகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு ஹிந்துக்களை இழிவுபடுத்த நினைக்கும் இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு தி.மு..வை புறக்கணிப்பது என்ற செயலின் மூலம் ஹிந்துக்கள் பதிலடி தருவார்கள்; தர வேண்டும்.
அறிஞர் அண்ணாவால் ஒரு பெரும் இயக்கமாக உருவாக்கப்பட்ட தி.மு..வை தேர்தல்களில் போட்டியிடவே அச்சப்படும் அளவிற்கு ஒரு உதிரிக்கட்சியாக மாற்றியிருக்கும் பெருமை கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்குண்டு.இந்நிலையில் இதுபோன்ற ஹிந்து விரோதச்செயல்கள் மூலம் அதன் இறுதி அத்யாயம் எழுதப்படும் என்பதை வருகின்ற தேர்தல்களில் மக்கள் உறுதி செய்வார்கள்.