Sunday 29 July 2012

ஜனாதிபதி தேர்தல் - 2012




திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுவிட்டார்.

இனிநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சில தகவல்களைப் பார்ப்போம்.

மொத்த வாக்குகள் - 4896.இவற்றின் மதிப்பு ; 10,98,882.
பதிவான வாக்குகள்; 4659. இவற்றில் செல்லாத வாக்குகள்; 81.
15 பாராளுமன்ற உறுப்பினர்களும் 66 சட்டமன்ற உறுப்பினர்களும் செல்லாத வாக்கு அளித்திருக்கிறார்கள். இவற்றின் மதிப்பு; 18,221.
நாட்டின் நிர்வாகத்தை நடத்துகிற எம்.பி.க்களும் எம்.எல்..க்களுமே செல்லாத வாக்குகள் அளிக்கிறார்கள் என்பது ஒரு வெட்கக்கேடான விஷயம்



இதில் பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகள் - 3095.இதன் மதிப்பு 7,13,763 சுமார் 69.3% ; பி.ஏ.சங்மா பெற்ற வாக்குகள் - 1483. இதன் மதிப்பு 3,15,987 சுமார் 30.15%.

 இனி மாநிலங்கள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

1)ஆந்திரா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 294; பிரணாப் முகர்ஜி - 182; பி.ஏ.சங்மா - 3; செல்லாதது - 5. 
2)அருணாச்சல்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 54; பி.ஏ.சங்மா - 2; செல்லாதது - 3. 
3)அஸ்ஸாம்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 126; பிரணாப் முகர்ஜி - 110; பி.ஏ.சங்மா - 13; செல்லாதது - 2. 
4) பீஹார்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 243; பிரணாப் முகர்ஜி - 146; பி.ஏ.சங்மா - 90; செல்லாதது - 3. 
5) சத்திஸ்கர்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 90; பிரணாப் முகர்ஜி - 39; பி.ஏ.சங்மா - 50; செல்லாதது - 1. 
6)கோவா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 40; பிரணாப் முகர்ஜி - 9; பி.ஏ.சங்மா - 31. 
7) குஜராத்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 182; பிரணாப் முகர்ஜி - 59; பி.ஏ.சங்மா -123. 
8) ஹரியானா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 90; பிரணாப் முகர்ஜி - 53; பி.ஏ.சங்மா - 29; செல்லாதது - 8. 
9) ஹிமாச்சல்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 68; பிரணாப் முகர்ஜி - 23; பி.ஏ.சங்மா - 44; செல்லாதது - 1. 
10) ஜம்மு - காஷ்மீர்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 67; பிரணாப் முகர்ஜி - 68; பி.ஏ.சங்மா - 15; செல்லாதது -1
11) ஜார்க்கண்ட்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 81; பிரணாப் முகர்ஜி - 60; பி.ஏ.சங்மா - 20. 
12) கர்நாடகா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 224; பிரணாப் முகர்ஜி - 117; பி.ஏ.சங்மா -103; செல்லாதது - 3. 
13)கேரளா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 140; பிரணாப் முகர்ஜி - 124; பி.ஏ.சங்மா - 0. 
14) .பி.; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 230; பிரணாப் முகர்ஜி - 73; பி.ஏ.சங்மா -156; செல்லாதது - 4. 
15) மகாராஷ்ட்ரா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 288; பிரணாப் முகர்ஜி -225; பி.ஏ.சங்மா -47; செல்லாதது - 2. 
16) மணிப்பூர்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 58; பி.ஏ.சங்மா - 1; செல்லாதது - 1. 
17) மேகாலயா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 34; பி.ஏ.சங்மா -23; செல்லாதது - 2. 
18) மிசோராம்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 40; பிரணாப் முகர்ஜி - 32; பி.ஏ.சங்மா -7; செல்லாதது - 1. 
19) நாகாலாந்து; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 58; பி.ஏ.சங்மா - 0; செல்லாதது -2. 
20) ஒடிசா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 147; பிரணாப் முகர்ஜி - 26; பி.ஏ.சங்மா - 115. 
21) பஞ்சாப்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 117; பிரணாப் முகர்ஜி - 44; பி.ஏ.சங்மா - 70; செல்லாதது - 2. 
22)ராஜஸ்தான்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 200; பிரணாப் முகர்ஜி - 113; பி.ஏ.சங்மா -85.
23)சிக்கிம்;எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 32; பிரணாப் முகர்ஜி - 28; பி.ஏ.சங்மா - 1; செல்லாதது - 2. 
24)தமிழ்நாடு; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 234; பிரணாப் முகர்ஜி - 45; பி.ஏ.சங்மா - 148; செல்லாதது - 4. 
25)திரிபுரா; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 56; பி.ஏ.சங்மா - 1. 
26)உத்தரகாண்ட்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 70; பிரணாப் முகர்ஜி - 39; பி.ஏ.சங்மா - 30. 
27).பி.; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 403; பிரணாப் முகர்ஜி - 351; பி.ஏ.சங்மா - 46. 
28)மே.வங்கம்; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 294; பிரணாப் முகர்ஜி - 275; பி.ஏ.சங்மா - 23; செல்லாதது - 4. 

யூனியன் பிரதேசங்கள்;
டில்லி; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 70; பிரணாப் முகர்ஜி - 42; பி.ஏ.சங்மா - 3; செல்லாதது - 5. 
பாண்டிச்சேரி; எம்.எல்..க்களின்எண்ணிக்கை - 30; பிரணாப் முகர்ஜி - 23; பி.ஏ.சங்மா -5. 


இனி கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தேதியையும் போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்களையும் காண்போம்.

1952 மே 2;
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 5,07,400 
;கே.டி.ஷா - 827 
வித்தியாசம் - 4,15,573.

1957 மே 6;
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 4,59,698 
என்.என்.தாஸ் - 2000 
வித்தியாசம் - 4,57,698.

1962 மே7;
டாக்டர் இராதாகிருஷ்ணன் - 5,53,067 .
ஹரிராம் - 6341 .
வித்தியாசம் - 5,46,726

1967 மே 6.
ஜாகிர் ஹூசேன் - 4,71,244 .
சுப்பா ராவ் - 3,63,971 .
வித்தியாசம் - 1,07,273.

1969 ஆகஸ்ட் 16.
வி.வி.கிரி - 4,01,515 .
சஞ்சீவி ரெட்டி - 3,13,548 .
வித்தியாசம் - 87,967.

1974 ஆகஸ்ட் 17.
ஃபக்ருதீன் அலி அஹமது - 7,65,587 .
சாதுரி - 1,89,196 .
வித்தியாசம் - 5,76,391.

1977 ஆகஸ்ட் 6.
சஞ்சீவ ரெட்டி போட்டியின்றித் தேர்வு.

1982 ஜுலை 12.
கியானி ஜெயில் சிங் - 7,54,113 .
எச்.ஆர்.கன்னா - 2,82,685 .
வித்தியாசம் - 4,71,428.

1987 ஜூலை 13.
ஆர். வெங்கட்ராமன் - 7,40,148 .
வி.ஆர்.கிருஷ்ண ஐயர் - 2,81,550 .
வித்தியாசம் - 4,58,598.

1992 ஜூலை 13.
சங்கர் தயாள் சர்மா - 6,75,804 .
ஜி.ஜி.ஸ்வெல் - 3,46,485 .
வித்தியாசம் - 3,29,319.

1997 ஜூலை 14.
கே.ஆர். நாராயணன் - 9,56,290 .
டி.என்.சேஷன் - 50,631 ..
வித்தியாசம் - 9,05,659.

2002 ஜூலை 15.
அப்துல் கலாம் - 9,22,884 .
லட்சுமி சேகல் - 1,07,366 .
வித்தியாசம் - 8,15,518.

2007 ஜூலை 19.
பிரதிபா பாட்டீல் - 6,38,116 .
பைரான்சிங் செகாவத் - 3,31,306 .
வித்தியாசம் - 3,06,810.

2012 ஜூலை 19.
பிரணாப் முகர்ஜி - 7,13,763 .
பி..சங்மா - 3,15,987 .
வித்தியாசம் - 3,97,776..             
              

Monday 16 July 2012

இது நியாயமா ... ?


விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீண்டும் நீட்டித்திருக்கிறது மத்திய .மு.கூ. அரசு.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஹூரியத் கான்ஃப்ரன்ஸ் என்ற அமைப்பு மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரித்து பாகிஸ்தானோடு இணைப்பதையே தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. அதன் தலைவர்களாய் இருப்பவர்கள் பாகிஸ்தானின் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பல்வேறு அமைச்சர்க்ளோடும் உயர்நிலை அதிகாரிகளோடும் மத்திய அரசைப் புறக்கணித்துவிட்டு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கலவரங்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி காஷ்மீர் மற்றும் நாட்டின் ப்ல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஆயுதம் ஏந்திய கைக்கூலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஹூரியத் அமைப்பின் மீது .மு.கூ. அரசு தடை ஏதும் விதிக்கவில்லை.ஆனால், இலங்கையில் எவ்வித உரிமைகளுமின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காக்ப் போராடும் விடுதலைப் புலிகள் மீது இங்கே தடை விதித்திருக்கிறது 

2009 மே- ஜூன் மாதங்களில் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையில் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.இதற்கு .மு.கூ. அரசு இராணுவ உதவி உட்பட பல்வேறு உதவிகளை மறைமுகமாகச் செய்து உடந்தையாக இருந்தது. இப்போது அங்கே எஞ்சியிருக்கிற சில இலட்சம் தமிழர்களும் உண்ண உணவின்றி வீடு வாசல்களை இழந்து கொட்டடிகளில் அனாதைகளாய் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை அரசு இவர்கள் மீதும் இராணுவத்தை ஏவிவிட்டு பல்வேறு அடக்குமுறைகளிலும் அராஜகங்களிலு ஈடுபட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மீது .மு.கூ. அரசு வித்தித்திருக்கும் தடை இவற்றை நியாயப்படுத்த மட்டுமே உதவும். இதன்மூலம் இலங்கையில் அல்லலுறும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு .மு.கூ.அரசு மிகப்பெரும் துரோகம் இழைத்திருக்கிறது.

ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்பதற்காக இலங்கையில் தமிழர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கில் சோனியா காந்தியின் தலைமையில் இயங்கும் .மு.கூ. அரசு முடிவு செய்துவிட்டதோ என்ற ஐயம் எழுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

.மு.கூ. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சியான தி.மு.. போன்ற கட்சிகள் ஒருபுறம் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டெஸோ மாநாடு கூட்டுகிறோம் என்று வேஷம் போடுகிறார்கள். மறுபுறம் தமிழினத்தை நசுக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிற .மு.கூ. அரசிற்கு பல்லக்கு தூக்கித் திரிகிறார்கள். தங்கள் குடும்பத்தினர்கள் வளமாக வாழ வேண்டும்,மத்திய அரசில் நல்ல பதவிகளைப் பெற்று பணபலத்தோடு விளங்க வேண்டும், தங்கள் குடும்பத்தினர் தங்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுபட வேண்டும் போன்ற காரணங்களுக்காக இத்தகைய இரட்டை வேட நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். .மு.கூ. அரசைத் தாங்கிப் பிடிக்க இத்தகைய கபட வேடதாரிகள் தயாராயிருப்பதால்தான் .மு.கூ.தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் மிகவும் துணிச்சலுடன் ஈடுபடுகிறது.   

இலங்கையில் நடப்பது பயங்கரவாதமல்ல; அது உரிமைகளுக்கான போராட்டம். சிலர் காஷ்மீர்ப் பிரச்னையையும் இலங்கைத் தமிழர் பிரச்னையையும் தொடர்புபடுத்துகிறார்கள்.

காஷ்மீரில் வாழும் மக்களுக்கு அனைத்து உரிமைகளுமுண்டு. இந்தியாவில் வாழும் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு, மராத்தியர்களுக்கு, ஒடிஸா மற்றும் வங்காளி மக்களுக்கு, அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநில மக்களுக்கு, குஜராத்திகளுக்கு, ஹிந்தி பேசும் மக்களுக்கு, பஞ்சாபில் வாழும் சீக்கியர்களுக்கு என்னென்ன உரிமைகளும் அதிகாரங்களும் இருக்கிறதோ அவையனைத்தும் காஷ்மீரில் வாழும் மக்களுக்கும் உண்டு. சொல்லப்போனால், அரசியல் சட்டம் 370வது பிரிவின் மூலம் காஷ்மீர் மக்கள் பிற மாநில மக்களை விட கூடுதலான அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள்.அவர்கள் நாட்டின் மத்திய அரசில் அமைச்சர்களாகலாம்; மாநில ஆளுநர்களாகலாம்; ஜனாதிபதியாகலாம்; பிரதமராகவும் ஆகலாம். அங்கு நடக்கிற போராட்டம் உரிமைகளுக்கான போரட்டம் அல்ல; அது பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் மதம் சார்ந்த போராட்டம்;சுயநலம் சார்ந்த சில குழுக்களால் நடத்தப்படுகிற மதவெறியிலான போராட்டம்.

ஆனால், இலங்கையில் ஒரே நாட்டுக்குடி மக்களாய் இருந்தபோதிலும் சிங்கள மக்களுக்கு இருக்கின்ற உரிமைகளும் அதிகாரங்களும் தமிழர்களுக்கில்லை. அவர்கள் அங்கே இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படுகின்றனர். அதனால்தான் அங்கே போராட்டங்கள் வெடித்தன. பின்பு அது ஆயுதம் தாங்கிய போரட்டமாக மாறியது. உரிமைகளுக்காக நடத்தப்படுகிற போராட்டங்கள் மீது எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் தடைகள் விதிக்கப்பட்டாலும் அவை ஒயாது. அது ஒருநாள் வென்றே தீரும்.

.மு.கூ. அரசு நமது நாட்டை மீண்டும் மத அடிப்படையில் பிளக்க நினைக்கும் தீய சக்திகள் மீது தடை விதித்து அவைகளை நசுக்கி எறியாமல் அவைகளை ஆதரிக்கிறது. அண்டை நாடான இலங்கையில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் தமிழர்களுக்கு ஆதரவான இயக்கத்தின் மீது இந்தியாவில் தடைவிதிக்கிறது.

இதைவிட கோமாளிக் கூத்து வேறு ஏதேனும் இருக்கமுடியுமா .. ? காங்கிரஸுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று மக்கள் முடிவெடுக்கும்போதுதான் இதுபோன்ற தமிழர் விரோதச் செயல்கள் முடிவுக்கு வரும்.