Monday 6 February 2012

எங்கப்பன் குதிருக்குள் இல்லை


தி.மு..வைச் சார்ந்த .ராசா மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கிய 122   2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்ற காரணத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் சூறையாடப்பட்ட நாட்டின் மதிப்பு மிக்க செல்வம் மீட்கப்பட்டிருக்கிறது.
இந்த மெகா ஊழல் அம்பலத்திற்கு வந்த 2008 லிருந்தே காங்கிரஸ் அப்படி எந்த ஊழலும் நடக்கவில்லை; நாட்டிற்கு ஒரு பைசா கூட நஷ்டம் ஏற்படவில்லை என்று கூறி ஊழலை மூடி மறைக்க அனைத்து வழிகளிலும் முயற்சித்து வந்தது. பிரபல வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் பெருமுயற்சி எடுத்து  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின் நீதிமன்றத்தின் கடுமையான கண்காணிப்பினால் ஊழல் முழுமையாக அம்பலமானது. இதற்கிடையே பா..., கம்யூனிஸ்ட்கள், .தி.மு.. போன்ற கட்சிகளும் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையாகப் போராடினார்கள். .ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட பலர் ஊழலில் தொடர்புடைய காரணத்தினால்  சிறைக்குச் சென்றனர். இப்போது இறுதியாக உச்ச நீதிமன்றம் ஊழலுக்கு காரணமான, ராசாவால் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது.
இதுவரை எவ்வித ஊழலும் நடக்கவில்லை என்று கூறிவந்த காங்கிரஸ் இப்போது ஊழல் நடந்திருப்பதை ஒப்புக் கொண்டு ஆனால் ரூ 1,76,349 கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்பட காரணமாயிருந்த இந்த மெகா ஊழலுக்கு தி.மு.. வைச் சார்ந்த ராசா மட்டுமே பொறுப்பு.. அப்போதைய நிதியமைச்சர் .சிதம்பரமோ பிரதமரோ எவ்வகையிலும் பொறுப்பல்ல என்று கூற ஆரம்பித்திருக்கிறது. 2ஜி லைசென்ஸ்கள் ஏல முறையில் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர், நிதி அமைச்சர், தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு முறை ஆணையம் கூறிய அறிவுரைகளை ஒதுக்கித் தள்ளி ராசா தன்னிச்சையாக செயல்பட்டார். எனவே ராசாவே இந்த ஊழலின் சூத்ரதாரி, முழு முதற்காரணம் என்று கூற ஆரம்பித்திருக்கிறது. 2ஜி ஊழலில் சிதம்பரத்தையும் சி.பி.. விசாரிக்க வேண்டும் என்ற  சுப்பிரமணிய சாமியின் மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருக்கிறது.
இந்த நிலையில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.பிரதமரின் அறிவுரைகளை மீறி ராசா செயல்பட்டார் என்றால் நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வகையில் செயல்பட்ட ராசாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிரதமரோ சிதம்பரமோ ஏன் முயற்சிக்கவில்லை .. ?தனது அமைச்சரவையில் மிகப்பெரும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் கூட பிரதமர் ஏன் ராசா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .. ? அதோடு அவ்வப்போது ராசாவுக்கு நற்சான்றிதழும் கொடுத்து அவரைப் பாதுகாக்க முற்பட்டாரே .. அது ஏன் .. ? இவ்வளவு பெரிய மெகா ஊழலுக்கு ராசா காரணமாயிருந்த பின்பும் கூட 2009ல் .மு.கூ. மீண்டும் ஆட்சியமைத்த போது அதே தொலைத்தொடர்புத் துறையை ராசாவுக்கு பிரதமர் மீண்டும் ஏன் வழங்கினார் .. ?
எனவே, 2ஜி மெகா ஊழலில் பிரதமருக்கோ சிதம்பரத்திற்கோ தொடர்பில்லை என்ற காங்கிரசின் கூற்று சரியென்று  வைத்துக் கொண்டால் கூட, நாட்டுக்கு ரூ1,76,379 கோடி இழப்பு ஏற்பட இருவரும் அனுமத்தித்தார்கள்; நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ; பெரும் ஊழல் நடைபெறுவதை அனுமதித்தார்கள் என்பது மட்டும் நிச்சயமான உண்மை. பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் அறிவுரைகளையும் மீறி ராசா செயல்பட்டார் என்று கூறுவதன் மூலம் காங்கிரசும் இதை ஒப்புக்கொள்கிறது.