Tuesday 26 August 2014

நல்ல விளைச்சலைத் தரும்



பீஹார்,கர்நாடகம்,.பி.,பஞ்சாப் மாநிலங்களில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் பா... கூட்டணி 8, காங்கிரஸ் கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன.கட்சிவாரியாகப் பார்த்தால் பா..-7,காங்கிரஸ்-5,லாலு கட்சி-3,நிதீஷ் குமார் கட்சி-2,அகாலி தள்-1 தொகுதிகளில் வென்றிருக்கின்றன.

இது மோடிக்குப் பின்னடைவு என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மோடி அவர்கள் குஜராத் முதல்வராயிருந்து அம்மாநிலத்தில் செய்த சாதனைகள் மக்களை ஈர்த்ததன் மூலமே அவர்மக்களின் 'பிரதமர்’ வேட்பாளர்' ஆனார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கும் வந்திருக்கிறார்.அவரது 3 மாத கால ஆட்சி பல வகைகளிலும் சிறப்புடையதாகவே இருக்கின்றன.வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேர்மை அவரிடம் இருக்கிறது; ஊழலற்ற ஆட்சி அளிக்க வேண்டும் என்ற துடிப்பும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற வெறியும் தேசத்தை பலமும் வளமும் பொருந்தியதாக மாற்ற வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் இருப்பதை அவரது பேச்சும் செயல்களும் நிருபிக்கின்றன. 

சட்டமன்றத்திற்கு மக்கள் வாக்களிக்கும் விதம் வேறாகவும் மக்களவைக்கு வாக்களிக்கும் விதம் வேறாகவும் இருக்கின்றனைது.இது பல முறை நிருபிக்கப்பட்ட உண்மை.

2013 மே மாதத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அடுத்த 11 மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் 9 இடங்களை பட்டுமே பிடிக்க பா... 17 இடங்களைப் பிடித்து பெருவெற்றி பெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் 2012 நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது; அடுத்த 16 மாதங்களில் நிகழ்ந்த மக்களவைத் தேர்தலில் அங்கு பா... மொத்தமுள்ள 4 மக்களைவைத் தொகுதிகளையும் கைப்பற்ற காங்கிரசிக்கு 0 தான் கிடைத்தது.

மேலும் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சியே இடைத் தேர்தல்களில் பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன. இதுவும் பலமுறை நிருபிக்கப்பட்ட விசயம். 2006ல் தமிழகத்தில் தி.மு.. ஆட்சிக்கு வந்த பின்பு நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தல்களிலும் அக்கட்சி அபார வெற்றிகளை ஈட்ட .தி.மு.. டெபாசிட் கூட இழந்திருக்கிறது.ஆனால், 2011ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.. படுதோல்வியைச் சந்திக்க .தி.மு.. பெருவெற்றி பெற்றது. 

                எனவே மோடியின் செல்வாக்கு மங்கிவிட்டது என்று நினைப்பதும் பீஹாரில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொது தேர்தலில் லாலு,நிதிஷ்,காங்கிரஸ் (அடுத்த வருடம் வரை இக்கட்சிகளின் ஒற்றுமை நீடிக்குமா என்பதே ஐயத்திற்குரிய விஷயம் )கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது என்றும் யாராவது முடிவுக்கு வந்தால் அது கற்பனையில் கோட்டை கட்டிய விஷயமாகலாம்.

                எனவே ஒரு சில சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மூலம் மோடிக்குப் பின்னடைவு என்பது பரபரப்புச் செய்தியாக இருக்க முடியுமே தவிர உண்மையாகாது. மோடியின் 3 மாத கால ஆட்சி 'விளையும் பயிர் முளையிலே'தெரிவது போல சிறப்பாக இருக்கிறது;இனிவரும் காலங்களிலும் அது மேலும் சிறப்பாக இருந்து மக்களுக்கு நல்ல விளைச்சலைத் தரும். 

          

பின்குறிப்பு;1) மோடியின் 2 மாத கால ஆட்சி பற்றி நாட்டின் பிரபலமான பல மொழிகளிலும் வெளிவருகிற 'இந்தியா டுடே' வார இதழ் நாடு முழுக்க நடத்திய கருத்துக் கணிப்பு மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைக் காட்டிலும் மோடிக்கு மக்களின் ஆதரவு கூடியிருப்பதும் காங்கிரசின் ஆதரவு மேலும் சரிந்திருப்பதும் எடுத்துக்காட்டியிருக்கிறது.கருத்துக்கணிப்புகள் எப்படி நிஜமாகும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது எனினும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தரும் அடிப்படைச் செய்தி உண்மையாகவே இருக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட அனைத்துக் கருத்து கணிப்புகளும் மோடியே பிரதமர் என்றன; இறுதியில் அதுதான் நிகழ்ந்தது.
2) இப்படிப்பட்ட தோல்விகள் கூட மோடியின் மக்கள் நலத் திட்டங்களுக்கும் அவர் சாதிக்க நினைக்கிற ஊழலற்ற இந்தியா என்ற அற்புதத்திற்கும் சிறு தடங்கலாக அமையக் கூடும் என்பதை மக்களாகிய நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


பின்குறிப்பு;1) மோடியின் 2 மாத கால ஆட்சி பற்றி நாட்டின் பிரபலமான பல