Saturday 16 February 2019

இரத்தத்தால் அஞ்சலி செய்வோம்.


காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட CRPF ஜவான்கள் வீர மரணமடைந்திருக்கின்றனர் . இந்நிகழ்வு மிகவும் கடுமையான கன்டனத்திற்குரியது.

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இத்தாக்குதல் ஒட்டுமொத்த தேசத்துக்கும் மக்களுக்கும் எதிரானது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. பாகிஸ்தான் பின்னணியிலிருந்து இயக்கப்படும் இதுபோன்ற கொடும் செயல்களால், காஷ்மீரை இந்தியாவிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.
மதவெறியர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களுக்கெதிராக அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும். இப்படுபாதகச் செயல்களிள் ஈடுபட்டவர்கள் அதன் பின்னணியில் இருந்தவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இவ்வுலகில் வாழும்  உரிமை துளியும் கிடையாது.

பயங்கரவாதம் பயங்கரவாதத்தாலேயே அழிக்கப்பட வேண்டும்; அவர்களை அழிப்பதில் சட்டதிட்டங்கள், மனித உரிமை சம்பிரதாயங்கள், நீதி நெறி முறைகள் எதையும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.
மதவெறியின் பேரால், தங்களுக்குத் தாங்களே கற்பனையாக  சில கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக மக்களைக் கொன்று குவிக்கிற இந்த மிருக ஜென்மங்களை அழிக்க மனிதர்களுக்கான  சட்டதிட்டங்கள் தேவையில்லை. விலங்களைக் கொல்லக் கூட சில விதிமுறைகள் கட்டுப்பாடுகள் உண்டு. இந்த மனித மிருகங்களை  இரக்கமேயில்லாமல், எவ்வித விதிமுறைகளுக்கும் உட்படாது  அழித்தொழிப்பதே நியாயமாக இருக்கும். 

இந்திய அரசுக்கு, தனது ஆதிபத்யத்தை பாதுகாத்துக் கொள்ளவும் அதற்கு எதிராக செயல்படுபவர்களையும்  ஒழித்துக் கட்ட பூரண சுதந்திரம் உண்டு. நாட்டின் தன்னாட்சி உரிமைக்கு மத வெறியர்கள் சவால் விடும்போது அவர்கள் உலகின் எந்த மூலையில் சென்று பதுங்கிக் கொண்டாலும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டதற்காக தங்கள் இன்னுயிர்களை இழந்த அந்த 42 பேர்களுக்காக நம் கண்கள் கண்ணீர் சிந்துகின்றன.
கோடானுகோடி நெஞ்சங்கள் அஞ்சலி செலுத்துகின்றன.
ஆனால், கண்ணீர் அஞ்சலி அவர்களுக்கு அளிக்கப்படும் தகுந்த மரியாதை ஆகாது.

நூறு ஆயிரம் என பயங்கரவாதிகளை கொன்று குவித்து, அவர்களது இரத்தத்தால், உயிரிழந்த வீரர்களுக்கு செலுத்தப்படும் அஞ்சலியே உண்மையான அஞ்சலி ஆகும். அதுவே அந்த மாவீரர்களுக்கான கௌரவம் ஆகும்.

தக்க சமயத்தில், அரசும் இராணுவமும் அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

  "மிகப்பெரும் தவறு செய்துவிட்டார்கள்; கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வன்மையாக கண்டித்திருக்கிறார்.
"மறக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்என்று சி.ஆர். பி.எஃப். எச்சரித்திருக்கிறது.
பயங்கரவாதம் இனி தலைதூக்க முடியாத அளவுக்கு பயங்கரவாதிகள் நசுக்கப்பட வேண்டும்.

நாடு முழுக்க தன்னெழுச்சியுடன் மக்கள் திரண்டெழுந்து.பாகிஸ்தானுக்கு எதிராகவும் பயங்கரவாதிகளைக் கண்டித்தும்  போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் எதிராக தேசம் முழுக்க பொங்கியெழுந்திருக்கும் மக்களின் இந்த உணர்ச்சி தீ பெருக வேண்டும் ; எங்கும் பரவ வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாது, அந்த பயங்கரவாதிகளுக்கு பின்புலத்தில் ஆதரவு சக்திகளாக விளங்கிக் கொண்டிருக்கிற அரசியல் சக்திகளுக்கு எதிராகவும்  மக்கள் திரண்டெழ வேண்டும்.அப்போதுதான் பயங்கரவாதத்தை முழுமையாக களையெடுக்க முடியும்.

இன்று புல்வாமாவில் நிகழ்ந்தது நாளை நமது வீடுகளுக்கருகில் நிகழாமலிருக்க வேண்டுமானால், மக்கள் தீய சக்திகளுக்கெதிராக தமது கரங்களை உயர்த்த வேண்டும். நமது எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான இந்தியாவை விட்டுசெல்ல, இத்தகைய தீய சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனுமிருக்க வேண்டியது தலையாய அவசியம். .