Friday 17 August 2012


பற்றி எரியும் அஸ்ஸாம்.

அஸ்ஸாமிலுள்ள பழங்குடியின மக்களுக்கும் அண்டை நாடான வங்காள தேசத்திலிருந்து சட்ட விரோதமாக அம்மாநிலத்தில் ஊடுருவி குடியேறியிருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு நிறுவியிருக்கும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். கலவரம் இன்னமும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

கலவரத்திற்கான அடிப்படைக் காரணம்சட்ட விரோதமாக ஊடுருவியிருப்பவர்களே என்று கூறப்படுகிறது.அஸ்ஸாமில் கடந்த பல வருடங்களாகவே பங்களாதேஷிலிருந்து ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் அஸ்ஸாமியர்களை விட ஊடுருவியவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.கீழே காணும் புள்ளிவிவரங்களும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன.  
அஸ்ஸாமில் பங்களாதேஷை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களில் 1991-2001 வரையிலான பத்தாண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி பற்றிய அதிகாரபூர்வமான செய்தி கீழே தரப்பட்டிருக்கிறது.

பொங்கைகய்காவ்ன் மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 17.3%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 28.3%; முஸ்லீம்கள் அல்லாதோர் 12.5%
பார்பீடா மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 18.3%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 24.8%; முஸ்லீம்கள் அல்லாதோர் 14%.
தார்ரங் மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 17.8%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 26.4%; முஸ்லீம்கள் அல்லாதோர் 13.1%
நூகோன் மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 20.1%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 28.7%; முஸ்லீம்கள் அல்லாதோர் 10.3%
துப்ரி மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 22.9; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 29.5%; முஸ்லீம்கள் அல்லாதோர் 7.1%
கோல்பரா மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 23%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 31.7%; முஸ்லீம்கள் அல்லாதோர் 14.7%
சசார் மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 18.9%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 24.6%; முஸ்லீம்கள் அல்லாதோர் 16%
ஹைலா கண்டி மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 20.9%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 27.2%; முஸ்லீம்கள் அல்லாதோர் 13.3%
தேமாஜி மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 18.9%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 27.3%; முஸ்லீம்கள் அல்லாதோர் 14.4%
மோரிகோன் மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 21.7%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 30.4%; முஸ்லீம்கள் அல்லாதோர் 13.2%
கரீம்கஞ்ச் மாவட்டம்;
1991-2001 காலத்திய மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 21.9%; இதில் முஸ்லீம்கள் வளர்ச்சி 29.4%; முஸ்லீம்கள் அல்லாதோர் 14.5%
1998ல் அஸ்ஸாம் ஆளுநராயிருந்த லெப்டினண்ட் ஜெனரல் ( ஓய்வு )எல்.கேசின்ஹா என்பவர் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்நாராயணனுக்கு அளித்த அறிக்கையில் பங்களாதேஷிலிருந்து நடக்கும் ஊடுருவல்கள் பற்றியும் அதனால் நாட்டிற்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றியும் விரிவாக எச்சரித்திருந்தார்ஆனால்காங்கிரஸ் அரசு அவரது அறிக்கையை நிராகரித்ததோடு,  மதக்கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக அவர் மீதே குற்றம் சுமத்தவும் செய்தது.

இப்படி சட்ட்விரோதமாக ஊடுருவியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக 1979-85 காலகட்டத்தில் அஸ்ஸாம் மாணவர்கள் இயக்கம் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தியது. ஆனால், காங்கிரஸ் அரசு மதச்சார்பின்மை என்ற பெயரில் இப்படி கள்ளத்தனமாக ஊடுருவி குடியேறிய அந்நிய நாட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும் ரேஷன் கார்டுகளையும் வழங்கி அவர்களை இந்தியக் குடிமக்களாக்கி இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவல்களை நியாயப்படுத்தியதோடு அதை ஊக்குவிக்கவும் செய்தது.
இந்நிலை தொடர்வதால் அஸ்ஸாம் இன்னொரு பாகிஸ்தானாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
2011ல் அஸ்ஸாமின் மொத்தமுள்ள 1.85 கோடி வாக்காளர்களில் 55 இலட்சம் பேர் பங்களாதேஷ் முஸ்லீம்களாவர்
இது போன்றதொரு நிலை வேறு எந்த நாட்டிலாவது காண முடியுமா .. ? 
இந்த அவல நிலை மத்தியிலும் மாநிலத்திலுமிருந்த காங்கிரஸ் அரசுகள் நாட்டுக்கு தந்த நன்கொடையாகும்..
இதன் விளைவுதான் அஸ்ஸாமில் ஏற்பட்டிருக்கும் கலவரங்கள். பங்களாதேஷ் முஸ்லீம்கள் மண்ணின் மைந்தர்களான போடோ பழங்குடியின மக்கள் மீது நடத்திய தாக்குதலும் தங்களைக் காத்துக் கொள்ள போடோக்கள் நடத்திய பதிலடித் தாக்குதல்களும்தான் இப்போது நடந்து வருகிற வன்முறைக் கலவரங்களின் பின்னணியாக இருக்கின்றன..