Saturday 31 December 2011

2012




புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அல்லவை அழிய, நல்லவை பெருக இனிய வாழ்த்துக்கள்.
இந்தியா ஊழலற்ற தேசமாகி, வளர்ச்சி பெருகி, ஏழ்மையற்ற நிலை உருவாகி எங்கும் ஒளிமயமாக 
இனிய வாழ்த்துக்கள்.
இந்தியா வல்லரசு நாடு. ஆனால், பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் சாதி மத வெறியாட்டமும் எங்கும் மேலோங்கி நிற்கிறது. காஷ்மீரில் பிரச்னை பிரச்னையாகவே வருடந்தோறும் தொடர்கிறது.இவற்றிற்கு முடிவு காண உறுதியான தலைமை வேண்டும்; இந்தியா இந்தியராலேயே ஆளப்பட வேண்டும். மனிதரிலேயே உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம் பேசும் குறுமதியோர் இல்லாதொழிந்து எல்லா மக்களும் சமமாய் ஒன்றிணைந்து இந்தியாவின் வெற்றிக்காக பாடுபடும் இனிய நல்லாண்டாக அமையட்டும். 
இனிய நல்வாழ்த்துக்கள். 

Wednesday 28 December 2011

சிறப்பானது; பாராட்டுக்குரியது.


   சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்கள் 3 பேருக்கு தலா 2 இலட்சம் பரிசு வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகவும் பயன் தருவதாகும். அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினால் அது சாதாரண மக்களுக்கு கிடைத்த பெரும் வரமாக மாறும். இந்நிலையில் முதல்வரின் அறிவிப்பு அரசு ஊழியர்கள் நன்றாகப் பணியாற்ற பெரும் தூண்டுகோலாக அமையும். அதே சமயம் 3 ஊழயர்களுக்கு 2 இலட்சம் என்பதில் சிறிது மாற்றம் செய்து, தொகையை குறைத்து, பரிசு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் , மாவட்ட வாரியாக சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து விருது வழங்கினால் முதல்வர் அறிவித்திருக்கும் திட்டத்தின் பலன் மேலும் கூடுதலாயிருக்கும்

Wednesday 7 December 2011

கருணாநிதியின் தமிழர் பாசம்



முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கேரளா அரசிற்கு கன்டனம் தெரிவித்திருப்பதோடு தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்காததற்காக மத்திய அரசையும் கண்டித்திருக்கிறார். இந்நிலை தொடர்ந்தால், தி.மு.. செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இலங்கையில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு மறைமுக காரணகர்த்தாவாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து சிறு மூச்சு கூட விட்டதில்லை கருணாநிதி. அதற்காக எந்தக் குழுவையும் கூட்டி முடிவெடுக்கப் போவதாக அறிவிக்கவுமில்லை. ஏனெனில், அப்போது கருணாநிதி பதவியிலிருந்தார்.
இப்போது கேரளாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்திருக்கிற ஒரு சில தகாத சம்பவங்களுக்காக மத்திய அரசை சாடியிருக்கிறார்; செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார். ஏனெனில், இப்போது கருணாநிதி பதவியில் இல்லை.
இதிலிருந்து ஒரு விஷயம் நமக்கு தெளிவாகிறது. கருணாநிதி பதவியிலிருந்தால் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தமாட்டார்; தன் குடும்ப உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதில்தான் முழு கவனமும் செலுத்துவார்.ஆனால், அவர் எதிர்க்கட்சியில் இருந்தால் தமிழர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பார்.
புராணத்தில் ஒரு கதை உண்டு. ஒரு சமயம் சீதேவி ( sri devi ) க்கும் மூதேவிக்கும் யார் அதிக அழகு என்பதில் போட்டி வந்தது. இருவரும் திருமாலிடம் கென்று நியாயம் கேட்டார்கள். திருமால் அவர்களை சிறிது தூரம் நடந்து சென்று விட்டு மீண்டும் தன்னை நோக்கி வரச்சொன்னார். இருவரும் அப்படி வந்தவுடன் அவர்களைப் பார்த்து, "நீங்கள் இருவருமே அழகுதான்; மூதேவி போகும்போது அழகு; சீதேவி ( sri devi ) வரும்போது அழகு" என்றார் 
அது போல கருணாநிதி எதிர்க்கட்சியாயிருக்கும் போதுதான் அழகு; அதாவது அப்போதுதான் தமிழர்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பார். என்வே, தமிழர்களாகிய நாம்  எப்போதும் கருணாநிதி எதிர்க்கட்சியிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.