Friday 14 June 2019

சரித்திரம் உறுதி செய்யும்


ஒரு சமுதாயத்தின் பெருமை என்பது அச்சமுதாயத்தின் கடந்த காலப் பெருமை, வீரம் செறிந்த வரலாறு, கலாச்சாரப் பண்பாட்டு சிறப்புகள் இவற்றின் அடிப்படையிலேயே பேசப்படுகிறது.

தமிழ் சமுதாயத்தின் பெருமை

தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாறு, தமிழ் இலக்கண இலக்கியங்களின் சிறப்பு, புகழுக்குரிய பண்பாடு கலாச்சாரம் கலாச்சாரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே பார் போற்றும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது.

கன்னடன் .வெ.ரா. தமிழ்  காட்டுமிராண்டிகளின் மொழி என்று விமர்சித்திருந்தார். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களையும் அவர் கடுமையாக வசை பாடியிருந்தார்.

இப்போது, ராஜ ராஜ சோழன் போன்ற  உலகப் புகழ் பெற்ற தமிழ் மன்னர்களையும்  சாதி மத நோக்கில் விமர்சித்து  இழிவுபடுத்தும் போக்கு ஆரம்பித்திருக்கிறது. ரஞ்சித் என்ற மார்க்கெட் இழந்த ஒரு சினிமா இயக்குநர் இந்த வேலையை ஆரம்பித்திருக்கிறான். கிறித்துவராக மதம் மாறிய இந்த இயக்குநர், மத வெறியால் தூண்டப்பட்டு மகா மன்னன் ராஜ ராஜ சோழன் பற்றிய இழிவான கருத்துக்களை முன்வைத்திருக்கிறான்.

தமிழ்..தமிழ் ..என்று மூச்சுக்கு முன்னூறு முறை முணுமுணுக்கிற ஸ்டாலின், வை.கோ, சைமன் போன்ற தமிழ் வியாபாரிகள், சிறப்பு வாய்ந்த தமிழ் மன்னனை இழிவுபடுத்திய  மத வெறியனின்  செயலை கண்டிக்க முன்வரவில்லை.
இவர்களின் தமிழ் பற்று வேஷம் என்பது நிருபணமான ஒன்று. இப்போது மீண்டும் ஒரு முறை இவர்களது பொய்வேஷம் கலைந்திருக்கிறது.

சேர சோழ பாண்டிய  மற்றும் பல்லவ மன்னர்கள் தமிழ் சமுதாயத்தின் பெருமையின் சின்னமாக விளங்குபவர்கள். உலகின் மிகப்பெரும் வீரர்களாக அறியப்பட்டவர்கள். உலகளாவிய அளவில் பெரும் வெற்றிகளை குவித்து தமிழனின் பெருமைகளை பாரறியச் செய்தவர்கள். 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் பண்பாட்டு கலாச்சாரப் பெருமைகளை பறை சாற்றியவர்கள்.

இவர்களை ஒன்றுமே அறியாத சில தற்குறிகள் மதவெறியால் இழிவுபடுத்த துடிக்கிறார்கள். இத்தகையோர் தமிழ் சமுதாயத்தால் கழிவறையில் இடம் மாற்றப்படுவார்கள்.
இதை வருங்கால சரித்திரம் நிருபிக்கும்.