Saturday 4 October 2014

சொத்துக் குவிப்பு தீர்ப்பும் சில வரலாற்று நிகழ்வுகளும்



1972ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் .தி.மு..வை ஆரம்பித்ததிலிருந்தே தி.மு..வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது .எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும் வரை தி.மு..வால் தலை தூக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் .தி.மு.. இரண்டாக பிளவுபட்ட நிலையில் 1989ல் தி.மு.. மீண்டும் ஆட்சிக்கு வர கருணாநிதி மீண்டும் முதல்வரானர். 1991 வரை அவரது ஆட்சி நீடித்தது. இக்காலகட்டத்தில்தான் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்திலேயே தி.மு..சட்டமன்ற உறுப்பினர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதன் பின் நிகழ்ந்த தொடர் நிகழ்ச்சிகளால் ஜெயலலிதா தலைமையில் .தி.மு..மீண்டும் ஒன்றுபட்டு காங்கிரஸ் கூட்டணியோடு 1996ல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க அக்கூட்டணி அபார வெற்றி பெற்றது. 
1991-96 காலகட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சி பல்வேறு காரணங்களால் மக்களின் கடும் அதிருப்திக்காளானது. வளர்ப்பு மகன் திருமணம், அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் கையாண்ட விதம், அப்போது செல்வாக்குடனிருந்த ரஜினிகாந்த் அவர்களின் தி.மு..ஆதரவு நிலைப்பாடு போன்றவை இதன் பிரதான காரணங்களாகும். 1996 பொதுத் தேர்தலில் .தி.மு..படுதோல்வி அடைந்தது; ஜெயலலிதாவே தான் போட்டியிட்ட பருகூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.ஆட்சிக்கு வந்த கருணாநிதி, .தி.மு..வை அழிப்பதில் முழு மூக்சுடன் இறங்கினார். .தி.மு..வின் அழிவில்தான் தி.மு..வின் வாழ்வு இருக்கிறது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் அரசியலை விட்டு அகற்றுவதன் மூலம் .தி.மு..வை அழித்து விடலாம் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. 
ஜெயலலிதா மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டு போயஸ் கார்டனில் இருக்கும் அவரது வீட்டில் சோதனைகள் நடந்தன. சினிமாத் துறையில் இருக்கும்போது அவர் வாங்கிக் குவித்த நகைகள், புடவைகள் ( செருப்புகள் உட்பட )போன்றவற்றை அவரது குடும்பத் தொலைக்காட்சியான 'சன் டி.வி'யில் தினசரி காண்பித்து அவருக்கெதிரான மனநிலையை மக்கள் மத்தியில் நிலை நிறுத்த முயற்சிகள் நடந்தன.
ஜெயலலிதாவிற்கெதிராக கருணாநிதி அரசு தொடுத்த வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதி மன்றங்கள் நிறுவப்பட்டன. இப்படி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து .தி.மு..வை அழிக்க பல புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஜெயலலிதாவின் எதிரணியில் தீவிரமாக செயல்பட்டு வந்த பரபரப்பு அரசியல்வாதியான சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு எதிராக தொடுத்த சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவைப் பழிவாங்க கருணாநிதிக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது.மேலும் 2005லிருந்து 2011 வரை மத்திய காங்கிரஸ் அரசில் கூட்டணியிலிருந்த கருணாநிதி மத்திய அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜெயலலிதாவிற்கு எதிராக பல்வேறு அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதை  யாரும் மறந்து விடமுடியாது; மறுத்து விடவும் முடியாது.   அதனால்தான், இந்த வழக்கின் முடிவு பலரைச் சந்தேகப்பட வைக்கிறது.
1977ல் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது, தன் மீதிருந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை அடிப்படையிலான ஊழல் வழக்கை வாபஸ் பெற கருணாநிதி பிரதமர் மொரார்ஜி தேசாயை வலியுறுத்தினார்; மொரார்ஜி மறுக்கவே ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டு,ஆட்சிக்கு வந்தால் தன் மீதிருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்திரா காந்திக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார். இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் கருணாநிதி மீதான வழக்கை வாபஸ் வாங்கினார்.
2ஜி ஊழல் விவகாரத்திலும் அப்படித்தான். தன் மகளைக் காப்பாற்றுவதற்காக காங்கிரசின் பாதங்களில் வீழ்ந்து கிடந்தார்; இப்போது கூட அதற்காகத்தான் பிரதமர் மோடி அவர்களை சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாராட்டுகிறார்; ஆதரிக்கிறார்.
ஆனால், தன் மீது கடுமையான வழக்கு இருந்தும் கூட ஜெயலலிதா அதற்காக ஒருமுறை கூட மத்திய காங்கிரஸ் அரசிடம் பேரம் பேசியதில்லை; மாறாக,தமிழக உரிமைகளுக்காகவும்,மக்களின் பிரச்னைகளுக்காவும் காங்கிரசின் ஊழல்களுக்கெதிராகவும் கடுமையாக போராடியிருக்கிறார். தனக்கெதிரான வழக்கு பெங்களுரில் நடைபெற்று வந்த சூழ்நிலையிலும் கூட, காவிரிப் பிரச்னையில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் விடாப்பிடியாக காவிரியில் தமிழகத்தின் பங்கை நிலைநாட்டப் போராடி அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். தன் வழக்கில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்காக கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் இரகசிய உடன்படிக்கைகளைச் செய்து கொண்டு விட்டுக் கொடுத்து விடவில்லை. காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசு ஜெயலலிதாவை 'ஒரு பெரும் தொல்லை' என்றே கருதியது. அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தது. 
இத்தகைய பின்புலங்களில்தான் இந்த வழக்கின் முடிவு கவனிக்கப்படுகிறது. இந்த வழக்கின் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர பல சக்திகள் இணைந்து செயல்பட்டிருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள்.