Wednesday 7 December 2016

ஜெயலலிதா எனும் ஒரு சகாப்தம்.

ஜெயலலிதா.... இப்பெயரை தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே யாராலும் மறக்க முடியாது. இவர் அரசியலில் கரைகண்ட பெரும் மாமேதை இல்லை. எனினும் இவர் தனது மக்கள் ஆதரவு செயல்பாடுகளினால், தனது அரசியல் எதிரிகளை , மக்கள் விரோதிகளை கடைசி வரை தலை தூக்கவிடாமல் செய்தார். இவர் இராஜதந்திர நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றவில்லை; உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் கலைகள் அறிந்திருக்கவில்லை; குடும்பத்தாரையும் நெருங்கியவர்களையும் பதவிகளில் அமரவைத்து ஜனநாயகப் பண்புகளை சீர்குலைக்கவில்லை. ஆனால், இவர் தன் ஆட்சிக் காலத்தில் செய்த பல்வேறு சாதனைகளால், அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றவர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்தியவர். 


ஜெயலலிதா அவர்களைச் சுற்றி எந்த சொந்தமும் உறவும் இல்லை; ஆனால், 'அம்மா' என்றழைக்கும் கோடிக்கணக்கான மக்களை உறவாகக் கொண்டவர். இவரது அரசியல் எதிரிகளால் இவருக்கு எதிராக புனையப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றி வாகை சூடியவர். இவர் மாநில, மொழி, இன வெறியை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைய முயலாதவர்.தேசப்பற்று மிக்கவர்; தேசிய சிந்தனையும் தேச நலனில் அக்கறையும் கொண்டவர். 'திராவிட' என்ற பெயரில் கட்சி கண்டவர்கள் ஹிந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதையும் வசை பாடுவதையும் மட்டுமே மதச்சார்பற்ற தன்மை மற்றும் பகுத்தறிவுக்கு இலக்கணமாக வகுத்து ஹிந்து விரோதிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவற்றை நிராகரித்து இவரது அரசியல் குரு எம்.ஜி.ஆரின் அடியொற்றி அனைத்து மதத்தினரையும் சமமாக பாவிக்கும் உண்மையான மதச்சார்பின்மை கொள்கையை நிலைநிறுத்தியவர்.
 
ஜெயலலிதா அவர்கள் பல்வேறு இலவசத் திட்டங்களை கொண்டுவந்து தமிழகத்தின் ஏழை மக்கள் 'ஏழ்மை'யை உணராதிருக்கும் நிலையை உண்டாக்கி அவர்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்தியவர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர். தமிழகம் சுனாமி, வரலாறு காணா பெருமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட காலங்களில் தன்னுடைய நிர்வாகத் திறமையினாலும் தீவிரமான செயல்பாடுகளினாலும் அரசு இயந்திரத்தை விரைந்து சுழலச் செய்து மக்களை பாதிப்புகளிலிருந்து விரைந்து மீட்டுவரச் செய்தவர்.
ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், அராஜகம், ஊழல்கள், கொள்ளைகள், நிலப்பறிப்புகள் மற்றும் ரௌடித்தனங்களுக்கு முடிவுகட்டி தமிழகத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தது இவரது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

ஜெயலலிதா அவர்கள் சாதாரண கட்சித் தொண்டர்களுக்கு உயர்ந்த பதவிகள் வழங்கி அவர்களை அரசியல் அரங்கின் முன்னரங்கிற்கு கொண்டுவந்தவர். அதே சமயம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஆனாலும் செல்வாக்கு படைத்தவர்கள் ஆனாலும் அவர்களிடம் தவறு காணும் பட்சத்தில் எவ்வித தயக்கமுமின்றி அவர்களை கட்சி மற்றும் அரசுப் பதவிகளிலிருந்து அப்புறப்படுத்திய துணிச்சல் மிக்கவர். 


பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எல்லாம் மத்திய அரசில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு கூட்டணி மாறி மாறி ஆதரவு அளித்து தமிழக மக்களின் நலன்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் மீதிருக்கும் ஊழல் வழக்குகளை வாபஸ் பெறச் செய்தும் நீர்த்துப் போகச் செய்தும் குற்றமற்றவர்கள் போல மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கையில் ஜெயலலிதா அவர்கள் தன் மீதிருந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திந்தே நிரபராதியாக வெளிவந்திருக்கிறார். தன் மீது வழக்கிருக்கிறது என்பதற்காக தமிழகத்தின் மக்கள் பிரச்னைகளில் எவ்வித சமரசமும் செய்து கொண்டதில்லை. இதற்காக மத்தியில் ஆளும் கட்சிகளுடன் எவ்வித மறைமுக உடன்பாடுகளிலும் ஈடுபடாமல் சிங்கம் போல் நிமிர்ந்து நின்றவர். 
ஜெயலலிதா அவர்கள் காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என தமிழக மக்களின் பிரச்னை எதுவானாலும் பதவிகளுக்காகவோ பணத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ அரசியல் கூட்டணிக்காகவோ விட்டுக் கொடுக்காமல் உறுதியுடன் போராடியவர். நீதிமன்ற நடவடிக்கைகள் உட்பட எவ்வகையில் முடியுமோ அவ்வகையைக் கடைப்பிடித்து பல முக்கியப் பிரச்னைகளில் தமிழகத்தின் நலன்களைப் பாதுகாத்தவர்.





ஜெயலலிதா அவர்களின் பெருமைகள் சாதனைகள் என இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். திரு எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட இவர் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியிருந்தும் பல்வேறு எதிர்ப்புகளையும் அவமானங்களையும் துரோகங்களையும் சந்தித்து அவற்றை முறியடித்து வெற்றிவாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடித்தவர். இவர் அரசியல் களத்திலிருந்த சுமார் 35 ஆண்டு காலகட்டத்தில் தமிழக அரசியலின் நிகழ்வுகள் பெரும்பாலும் இவரை மையமாகக் கொண்டே நிகழ்ந்தன. இந்திய அரசியல் களம் இவரை கருத்தில் கொண்டே இயங்கியது. இவரில்லாத நிலையில் பெரும் வெற்றிடம் உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம். எனினும் இத்தனைக் காலம் இவரைச் சுற்றிவந்த நிகழ்வுகள் இனி இவர் பெயரைச் சுற்றி நிகழும் நிலை உருவாகும். ஏனெனில் ஜெயலலிதா ஒரு முடிவில்லா சகாப்தம்.  

Tuesday 15 November 2016

தேசம் முன்னேற ஒன்றுபடுவோம்.

பெரும் பணமுதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை  வெளியில் கொண்டுவருவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் இந்தியாவிற்குள் புழக்கத்தில் விட்டிருக்கும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக, பயங்கரவாதிகள் வசமிருக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை செல்லாததாக்க இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக 500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இத்திட்டம் சிறப்பானது; பாராட்டுக்குரியது; புரட்சிகரமானது; சாதாரண மக்களின் நலனையும் ஊழலை ஒழிப்பதையும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலுமானது..
பிரதமர் மோடியின் இந்த திட்டம் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. இதுபற்றி சமீபத்தில் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 82% மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இத்திட்டத்தை செயல் படுத்தும்போது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் முழுமையாக புழக்கத்தில் வருவதற்கான கால இடைவெளியிலான சில நாட்கள் சாதாரண மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது நிச்சயமான உண்மை. ஆனால், இத்திட்டத்தைனால்,பெரும் இழப்பிற்காளாகப்போவது, பெரும் கருப்பு பண முதலைகளும் கள்ள நோட்டுப் பேர்வழிகளும் பயங்கரவாத இயக்கங்களும்தான்..
இத்திட்டம் பெரிதும் வரவேற்கத்தக்கதாயிருந்த போதிலும் சாமானிய மக்களின் தற்காலிக சிரமத்தை சுட்டிக்காட்டி சிலர் இதை எதிர்க்கின்றனர்.

1) ஹவாலா, கள்ளக்கடத்தல் மோசடிகளில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு துணையாயிருப்போர்.
8)உள்நாட்டு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவைகளுக்கு பண அளவிலும் மன அளவிலும் ஆதரவாயிருப்பவர்கள்.
3)மதவெறியின் அடிப்படையில் மோடியை விரும்பாதவர்கள்
4) தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடையாயிருப்பவர்கள்.
5)பெரும் ஊழல் சக்திகள்.
6)பெரும் கருப்பு பண புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள்.
7)இந்தியா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வளர்ச்சி பெற்று பெரும் வல்லரசாவதை விரும்பாத சீனாவின் ஆதரவு இயக்கங்கள்
8)மதத்தின்  அடிப்படையில் பாகிஸ்தானின் ஆதரவாளர்களாயிருப்பவர்கள்.
9) கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பாளர்கள்.

இத்தகையோர்கள்தான் பல்வேறு பொய்களைக் கூறி இத்திட்டத்தை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இத்தகைய பொய்ப்ப் பிரச்சாரங்களை புறக்கணியுங்கள்;தற்காலிக சிரமங்களைப் பொருட்படுத்தாது தேசம் முன்னேற ஒத்துழையுங்கள்;

தேசத்தின் முன்னேற்றம் நமது முன்னேற்றம்.

Friday 30 September 2016

சம்மட்டி அடி.

நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவிற்குள் ஊடுருவ, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் முகாமிட்டிருந்த  பாகிஸ்தானின் கைக்கூலிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது இந்திய இராணுவத்தினர் எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தி, 7 பயங்கரவாத முகாம்களை அழித்திருப்பதோடு, பயங்கரவாதிகள் பலரையும் கொன்று குவித்திருக்கின்றனர். பிரதமர் திரு மோடி அவர்களின் உறுதியான இந்த நடவடிக்கையினால், பயங்கரவாதிகளை அழிப்பதில் புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பயங்கரவாதிகளுக்கு 'சம்மட்டி அடி' கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ‘அடி’ இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும். இந்த அபார தீரச்செயலில் ஈடுப்பட்ட நமது பாதுகாப்பு படைவீரர்களின் பெருமை பாராட்டுக்குரியது. “நமது நாட்டை சீர்குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும்  மதவெறி பிடித்த பயங்கரவாதிகளையும் கருணையேயில்லாமல் வேட்டையாட " நமது பாதுகாப்பு படையினர்களுக்கு சுதந்திரமளித்த பிரதமர் மோடி பெரும்பாராட்டுக்குரியவர். 


அடுத்து, பாகிஸ்தானில் இருந்து கொண்டு, பாகிஸ்தான் உளவு ஸ்தாபானமான ஐ.எஸ்.ஐ. துணையுடன் இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை ஏவி விட்டுக்கொண்டிருக்கிற ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹிம் மற்றும் இதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களைச் சார்ந்தவர்களும் இரகசிய நடவடிக்கைகளின் மூலம் கொல்லப்பட வேண்டும். இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட நினைப்பர்களும் அதற்கு துணையாயிருப்பவர்களும் சவக்குழிகளில்தான் நித்திரை கொள்ள வேண்டும்.


இந்நிலையில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும். கடுமையாக 'அடி' வாங்கியிருக்கும் பயங்கரவாதிகள், உள்நாட்டிலிருக்கும் மூளைச்சலவை செய்யப்பட்ட மதவெறியர்களின் துணையுடன் மக்கள் நடமாடும் பகுதிகளிலும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடக்கூடும். மத்திய மாநில அரசுகள் மட்டுமல்ல.. பொதுமக்களும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

Friday 2 September 2016

தலித்துகள்....


தலித்துகள் ஹிந்துக்கள். பிற மக்களைப் போலவே அவர்களும் ஹிந்து மதத்தின் ஒரு அங்கம்; தலித்துகளை விட ஹிந்து மதத்தின் பிற ஜாதி மக்கள் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்லர்; பிற ஜாதி மக்களை விட தலித்துகள் எவ்வகையிலும் தாழ்ந்தவரும் அல்லர்.
தலித்துகளை தீண்டத்தகாதவர்களாகக் கருதுபவர்கள் ஹிந்து மதத்திற்கு மட்டுமல்ல..தேசத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கிறார்கள் என்பது உறுதியான விஷயம். நாட்டின் கிராமங்களில் சில பகுதிகளில் தலித்துகள் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கும், பிற மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கும் , பள்ளிகளில் தலித் மாணவர்கள் பிற மாணவர்களோடு இணைந்து கல்வி கற்பதற்கும் இன்னும் பல வகைகளிலும் தலித்துகள் மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிந்து சமுதாயத்தின் ஒரு பிரிவு மக்கள் எதற்காக இத்தகைய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்..?இந்நிலை மாற வேண்டும்; இத்தகைய தீண்டாமைக்கு காரணமானவர்கள் மாறியாக வேண்டும்; அல்லது மாற்றப்பட்டாக வேண்டும். கடவுள் வழிபாட்டிலும் தலித்துகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்; கோயிலில் பிற மக்களோடு இணைந்து கடவுளை தரிசிக்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுவது மிகவும் தவறான விஷயம். ஹிந்து மக்களில் ஒரு பிரிவினரை இப்படி தீண்டத் தகாதவர்கள் என்ற நிலைக்குத் தள்ளுவதன் மூலம், அவர்களுக்கு அத்தகைய நிலையை உண்டாக்குபவர்கள்  தங்களை மனிதர்கள் என்ற நிலையிலிருந்தே தங்களை தரம் தாழ்த்திக் கொள்கின்றனர்.
தீண்டாமை என்பது ஹிந்து மதம் உருவாக்கியதல்ல; தலித்துகளை புறக்கணிக்கச் சொல்லி வேதங்கள் உட்பட எந்த ஹிந்து மத நூலும் வலியுறுத்தவில்லை. ஜாதியின் பெயரில் வழிதவறிச் செல்லும் சிலராலேயே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. மத மாற்றம் இதற்கு தீர்வல்ல. ஹிந்து மதம் தலித்துகளுக்கும் சொந்தமானது.
ஹிந்துக் கடவுள்களை வழிபட தலித்துகளுக்கு உரிமையில்லை என்று அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், அவர்கள் பிற மதத்திற்கு மாற ஜாதியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பேசுபவர்கள் வலியுறுத்துகிறார்களா..? பணம் கொடுத்தும் ஏமாற்றியும், இன்னும் பல முறைகேடான வழிகளிலும் தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிற மதத்தினர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகையில், தம் மதத்தைச் சார்ந்தவர்களையே, நாம் வணங்கும்கடவுளையே பக்தியுடன் கும்பிடுபவர்களையே பிற மதத்திற்கு மாறத் தூண்டி, ஹிந்து மதத்தை பலவீனப்படுத்த முயலும்,  உயர்ந்த ஜாதி என்று கற்பனையில் தங்களைத்  தாங்களே உயர்வாக எண்ணிக் கொண்டு மனிதத் தன்மையற்ற முறையில் நடக்க முற்படும் ஹிந்துக்களை என்ன பெயரிட்டு அழைப்பது..?
மதமாற்றத்திற்கு தீண்டாமை ஒரு பிரதான காரணமாயிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.தலித்துகளை ஒதுக்கி வைத்து ஹிந்து மதம் நலிந்து போக ஹிந்துக்களே காரணமாயிருக்கலாமா..?ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து ஹிந்து மதம் பலவீனமடையவே இது வழி செய்யும். ஹிந்து மதம் பலவீனப்பட்டு பிற மத ஆதிக்கம் ஏற்படுமேயாயின் தம்மை உயர்ந்த ஜாதி (?) என்று எண்ணிக் கொள்ளும் ஹிந்துக்கள் வழிபட கோயில்களே இல்லாத நிலை ஏற்படுவதோடு அவர்கள் ஹிந்துக்களாக வழவே முடியாத நிலையும் ஏற்படும். ( ஹிந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்து போனதால் நாட்டின் சில பகுதிகளில் இது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது அனைவரும் அறிந்த உண்மை.) ஒன்றுபட்ட சமுதாயமே நிலைத்து நிற்க முடியும்.
ஆன்மீகம் மற்றும் சமுதாயத்தின் பிற துறைகளிலும் தலித்துகளுக்கு எதிராக சிலர் கடைப்பிடிக்கும் தீண்டாமை, வெறுப்பு மற்றும் தீண்டாமை போன்ற இவற்றை தங்கள் கருவியாகப் பயன்படுத்தியே ஹிந்து சமுதாயத்தையும் நாட்டையும் வீழ்த்த பல் தீய சக்திகள் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இந்த தீய சக்திகள் வீழ்த்தப்படுவதில்தான் நமது மட்டுமல்லநம் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வும் அடங்கியிருக்கின்றது. அனைத்து மக்களும் கடவுளின் படைப்பு. கடவுள் தன் படைப்பில் உயர்வு தாழ்வு பேதம் படைப்பதில்லை. அனைவரையும் சமமாகத்தான் படைக்கிறார்.
போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் எந்த விஷயமானாலும் 'தலித் மற்றும் சிறுபான்மையினர்கள் ஒற்றுமை வேண்டும்' என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தலித் மக்களை ஹிந்து சமுதாயத்திலிருந்து பிரித்து பலவீனப்படுத்த நினைக்கிறார்கள். இவர்களது முயற்சி வெற்றி பெற அனுமதித்துவிடக் கூடாது.தீண்டாமை பேசி இத்தகைய தீய சக்திகளின் கரங்களை பலப்படுத்த ஹிந்துக்களே காரணமாய் இருந்துவிடக் கூடாது.

தலித்துகள் ஹிந்துக்கள்; அவர்கள் ஹிந்துக்களாகவே என்றும் வாழ வேண்டும். அவர்கள் தீண்டத் தகாதவர்கள் அல்லர்; கோயில்களில் அனைவரும் இணைந்து திருவிழாக்கள் எடுப்போம்; கிராமங்களில் நகரங்களைப் போலவே அனைவரும் இணைந்திருப்போம். ஹிந்து சமுதாயத்தைப் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவோம்.