Sunday 19 April 2015

காரணமில்லாமல் காரியமில்லை

1)அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டும்; அவர் விலைபோய்விட்டார்.
2)கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை ஒடிஸாவுக்கு மாற்றியது தவறு; இது மத்திய அரசு ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செய்கிற சதிவேலை.
3)உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது தவறு.
4) பவானிசிங்கை மாற்றக் கோரி கருணாநிதி ( அன்பழகன் )தொடுத்திருக்கும் வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உடனடியாக அமைத்தது தவறு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதாவிற்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்.
5) ஜெயலலிதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்தது தவறு
 தவறு..தவறு.. தவறு.. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் கருணாதிக்கு இப்படி எல்லாமே தவறாகப்படுகிறது.
 நீதிமன்றம் இப்படிச் செய்யலாமே..
ஸ்டாலின் சொல்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்து விடலாம்;
கனிமொழி சொல்பவரை வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமித்து விடலாம்;
கருணாநிதி சொல்பவரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துவிடலாம்.
ஜெயலலிதாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து விடலாம்;தனிமை சிறையில் அடைத்துவிடலாம்;
அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிடலாம்.

இப்படியெல்லாம் நிகழ்ந்தால் கருணாநிதிக்கு சந்தோஷமாயிருக்கும்; 'நீதி வென்றது' என்று மகிழ்ச்சியோடு அறிக்கை விடுவார்.
ஆனால், கருணாநிதியின் ஆசைப்படியே எல்லாம் நடக்காதே.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ( கீழ்கோர்ட்டில் )சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது,வழக்கை விரைந்து முடிக்க விடாமல் ஜெயலலிதா வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருப்பதாக கருணாநிதி குற்றம்சாட்டினார்.
ஆனால், இப்போது மேல்முறையீட்டு விசாரணையில் ( APPEAL ) வழக்கை விரைந்து முடிக்க அரசு வழக்கறிஞரிலிருந்து உச்சநீதிமன்றம் மத்திய அரசு அனைத்தும் இணைந்து சதி செய்வதாகப் பதறுகிறார்; குற்றம்சாட்டுகிறார். வழக்கை தாமதப்படுத்த என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் பிறரைத் தூண்டிவிட்டு பின்னணியிலிருந்து செய்து கொண்டுவருகிறார்
கீழ்கோர்ட் விசாரணையின்போது  தி.மு.. கூட்டணி .மு.கூ.அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. அந்த அரசின் மூலம் ஜெயலலிதா இனி அரசியலிலே இருக்க முடியாத அளவிற்கு ஒரு தீர்ப்பைப் பெற கருணாநிதி தனது செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்;அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இப்போதிருக்கும் மத்திய அரசு நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் செய்வதில்லை. எனவே, நேர்மையான முறையில் விசாரணை நடந்தால் ஜெயலலிதா விடுதலையாகிவிடுவார் என்று கருணாநிதி அஞ்சுகிறார். அதனால்தான், 3 மாதங்களில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எப்படி உத்தரவிடலாம் என்று கோபப்படுகிறார்.  
2016 சட்டமன்றத் தேர்தல் முடியும்வரை வழக்கு முடிந்துவிடக் கூடாது; ஜெயலலிதா குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகிவிடக் கூடாது என்று கருதுகிறார். தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுவிட்டால், தேர்தலில் தி.மு.. மிக மோசமான படுதோல்வியைச் சந்திக்கும். ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புடைய 2ஜி ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய கருணாநிதியின் குடும்பத்தினர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்தி.மு.. தனது இறுதி நிலையை எட்டிவிடும் அதனால்  எப்படியாவது வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்அதனால், நீதிமன்றத்தை அவமதிக்கிறார்; அரசு வழக்கறிஞரிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், ஜனாதிபதி என அனைவர் மேலும் சேற்றை வாரி இறைக்கிறார்.

ஆனால் மனிதன் ஆசைப்படுவது எல்லாம் நிறைவேறுவதில்லை

No comments:

Post a Comment