Monday 13 April 2015

பயங்கரவாதிகளை அழித்தொழியுங்கள்

             166 பேர் கொல்லப்பட்ட  மும்பை பயங்கரவாத தாக்குதலின் ( 26 நவம்பர் 2008 )முக்கிய காரணகர்த்தாவான பாகிஸ்தானைச் சார்ந்த லக்வி என்ற பயங்கரவாதி, பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான். பாகிஸ்தான் அரசு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி நீதிமன்றம் இவனை விடுவித்திருக்கிறது. பாகிஸ்தானின் இச்செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.


      இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் என்றுமே ஒரு பாதுகாப்பான புகலிடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பாகிஸ்தானின் இச்செயலில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏற்கனவே 1993 மார்ச்சில் மும்பையில் நிகழ்ந்த தொடர் கொண்டுவெடிப்பின் காரணகர்த்தாவான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கிறான்.
இவர்களுக்கெதிராக இந்தியா எத்தனை ஆதாரங்களை கொடுத்தாலும் பாகிஸ்தான் இவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது. இவர்கள் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போரின் கருவிகள்.

இவர்களை ஒடுக்க பாகிஸ்தானின் உதவியைக் கேட்பதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை.இவர்களை ஒழிக்க இந்தியாவே மறைமுக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தாவூத் இப்ராஹிம், நக்வி மற்றும் மௌலானா மசூத் அஷார் போன்ற கொடிய பயங்கரவாதிகளை ரகசிய நடவடிக்கைகளின் மூலம் இந்தியா தீர்த்துக்கட்ட வேண்டும்.





 இந்தியாவிற்கெதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள், இந்தியர்களைக் கொன்றவர்கள் உலகின் எந்த மூலையிலும் பத்திரமாக இருக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment