Saturday 4 April 2015

குடத்துப் பாலில் துளி விஷம்

            ஏப்ரல் 14 அன்று தாலி அறுக்கும் நிகழ்ச்சி ஒன்றை .வெ.ரா. திடலில் நடத்தவிருப்பதாக தி.. அறிவித்திருக்கிறது. திருமணம் என்பது இரு உள்ளங்களை இணைக்கும் புனிதமான சடங்கு; அந்த இணைப்பு நிரந்தரமாக இருக்கும் என்பதன் அடையாளமாக ஆண் பெண்ணுக்கு தாலி அணிவிக்கிறான். திருமண உறவை புனிதமாகக் கருதும் பெண்களும் கணவன் அணிவித்த தாலியை தங்கள் உயிராகவே கருதிப் போற்றுகின்றனர். தனக்கு தாலி அணிவித்தவன் மரணமடைந்த பிறகே அந்த தாலி அவளது கழுத்திலிருந்து அகற்றப்படுகிறது
           தாலி பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்ற ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது.அது முற்றிலும் தவறானது. தாலி பெண்களை புனிதப்படுத்துகிறது; பெருமைப்படுத்துகிறது; பாதுகாப்பும் அளிக்கிறது.தாலி கட்டிக் கொள்வதால் பெண் தனக்கிருக்கும் எந்த உரிமையையும் இழந்து விடுவதில்லை; தாலி கட்டாமலிருப்பதால் கூடுதலாக எந்த உரிமையும் பெண்ணுக்கு கிடைத்துவிடுவதுமில்லை
           விருப்பட்ட எந்த ஆணுடனும் கூடும் உரிமைதான் பெண்ணுரிமையின் இலக்கணம் என்ற கருத்துடையவர்க ள் வேண்டுமானால் தாலியை அடிமைச் சின்னமாக கருதலாம் மற்றபடி தாலி பெண்ணின் பெருமையைப் போற்றும் புனித அணிகலனே. தாலி அணிதல் என்னும் பழக்கம் பன்னெடுங்காலமாக நம் சமுதாயத்தில் நிலவி வருகிறது. அது மதச்சம்பிரதாயமா அல்லது தமிழ்ச் சமுதாயச் சம்பிரதாயமா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லாதது. என்னவாக இருந்தாலும் அது ஒரு புனிதமான பண்பாட்டின் வெளிப்பாடான சடங்கு. நமது பண்பாடும் கலாச்சாரமும் , நமக்கே என்றிருக்கின்ற சிறப்பான குடும்ப அமைப்பும் நிலை குலைந்தால் அவை வாழ்வின் பல துறைகளிலும் பெரும் சீரழிவை உண்டாக்கி மனித வாழ்வின் நிம்மதியையும் அமைதியையும் அழித்துவிடும்.
          இக்காலத்தில் பலர் தாலி அணிந்து திருமணம் செய்து கொள்கின்றனர்; மற்றும் சிலர் மாலை மாற்றிக் கொண்டும் மோதிரம் அணிந்தும் பதிவுத் திருமணமும் செய்து கொள்கின்றனர்.இதை யாரும் தடுப்பதில்லை. ஆனால், தாலி கட்டுவதை பெண்ணடிமைத்தனம் என்று பிரச்சாரம் செய்து தாலி அறுப்பதை ஒரு பொது நிகழ்ச்சியாக நடத்த முற்படுவது பெரும் சமூகக் கேட்டை உண்டாக்கும். இவர்கள் உண்மையிலேயே பெண் சுதந்திரத்திற்காகத்தான் இந்நிகழ்ச்சியை நடத்த விழைகிறார்கள் என்றால் இவர்கள் ஏன் பர்தா அணியும் பெண்களின் பர்தாக்களை அகற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை..? (இங்கு ஒரு சம்பவத்தை கூற வேண்டியிருக்கிறது.. .வெ.ரா. தனது 75 வயதில் தனது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக தான் மகள் போல் வளர்த்து வந்த 18 வயதுப் பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இது பெண்ணுரிமையைக் காக்கும் செயலின் வெளிப்பாடா..? )

          சிலர் சமுதாயத்தில் இருக்கும் தீய பழக்கவழக்கங்களை எதித்துப் போராடுவார்கள்; அவர்கள்  சீர்திருத்தவாதிகளாகப் போற்றப்படுகின்றனர். ஆனால், தி.. போன்ற அமைப்புகளின் வக்கிர புத்தி படைத்தவர்கள் சமுதாயத்தில் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களையெல்லாம் அழிக்க முற்படுகின்றனர். இவர்கள் மக்கள் சமுதாயத்தின் விரோதிகள் ஆவர். இவர்கள் குடம் பாலில் துளி விஷம் போன்றவர்கள். இவர்கள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள்.

No comments:

Post a Comment