Friday 7 November 2014

மீனவர்கள் பிரச்னையும் மத்திய அரசும்



மிழக மீனவர்கள் 5 பேருக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கில் இலங்கையிலுள்ள கொழும்பு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. இது ஒரு நியாயமற்ற நடவடிக்கை என்பது அனைவருமே அறிவர்.

இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு மீனவர்களை மீட்க நீதிமன்ற நடவடிக்கைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இலங்கையிலிருக்கும் இந்தியத் தூதர் சிறையிலிருக்கும் மீனவர்களைச் சென்று பார்த்திருக்கிறார்; தீர்ப்பிற்கு எதிரான மேல் முறையீட்டிற்கான தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகின்றது; மத்திய அமைச்சர்களும் மீனவர்கள் மீட்கப்படுவர் என்று உறுதியளித்திருக்கின்றனர்.

இந்நிலையில் தேவையற்ற சிலர் தேவையற்ற முறையில் விமர்சனங்களையும் தூஷணைகளையும் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட உடந்தையாயிருந்தவர்களும் நூற்றுக்கணக்கில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கூட இப்பிரச்னையைத் திசை திருப்பி அதில் அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கின்றனர். இவர்களால் மீனவ சமுதாயத்தினருக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது; மாறாக தீமையே உண்டாகும். இவர்களது ஏமற்று வேலைகளுக்கு பலியாகி விடாமல் இவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். இவர்களது நோக்கம் இச்சம்பவத்திற்கு தீர்வு காணப்படாமல் போக வேண்டும்..அதை வைத்து தாம் அரசியலில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என்பதே.


மீனவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பது தமிழக மீனவர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பம் மட்டுமல்ல..மத்திய அரசும் அதைத்தான் விரும்புகிறது; அதற்காகத்தான் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் வருகிறது.


து 2009ம் அல்ல; மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்வது முன்பிருந்த அரசுகளும் அல்ல; எனவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்; மீனவர்கள் மீட்கப்படுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

No comments:

Post a Comment