Saturday 1 November 2014

வை.கோ.வின் புதுப்பாதை




                   "தி.மு..வுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் சந்தோஷம் "என்று வை.கோ. கூறியிருக்கிறார். இதன் மூலம் 2016 சட்டமன்றத் தேர்தலில். வை.கோ. கருணாநிதியோடு மீண்டும் கைகோர்க்கப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது. பொதுவாகப் பார்த்தால்,  பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொண்டுதானிருக்கின்றன. எனவே அந்த அடிப்படையில் வை.கோ.வை மட்டும் குறை கூறுவது நியாயமாயிருக்காது. 
       
         ஆனால், சில விஷயங்கள் வை.கோ.வின் இந்த கூட்டணி  முடிவை ஒரு பெரும் வரலாற்றுப் பிழையாக்கி அவரது கட்சியான மறுமலர்ச்சி தி.மு..விற்கு முடிவு கட்டி விடும் வாய்ப்புக்களே அதிகமாயிருக்கின்றன.
       
         தி.மு.. கருணாநிதியின் குடும்ப நலனுக்காக அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் கட்சி என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அக்குடும்பத்தினரின் நலன்களைக் காக்கும் வகையிலேயே அக்கட்சியின் கொள்கை முடிவுகள் மட்டுமல்லாது தினசரி நடவடிக்கைகளும் கூட அமைந்திருக்கின்றன. வை.கோ. ஒரு நல்ல பேச்சாளர்; கடுமையாக உழைக்கும் செயல் திறமையும் உடையவர்; ஸ்டாலினை விட வை.கோ. பல வகைகளிலும் மேம்பட்டவர்.தனது மகன் ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பதை தன் கண் குளிரக் காண வேண்டும் என்பதற்காகவே இந்த பழுத்த தள்ளாத வயதில் கூட யார் யாரிடமோ பணிந்தும் வணங்கியும் குனிந்தும் குழைந்தும் தாஜா செய்தும் பலவற்றை விட்டுக் கொடுத்தும் பணத்தை அள்ளி வீசியும் ஒரு மகா கூட்டணியை உருவாக்க கருணாநிதி கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். வை.கோ. தன் கூட்டணியில் இருந்தால் கடந்த முறை தான் முதல்வராயிருந்தபோது தனது மற்றும் தனது குடும்பத்தினரின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்ய்ப்படுவதற்கு தான் உடந்தையாக இருந்த அடாத செயலை மூடி மறைக்க உதவும் என்பற்காகவே அவரை இப்போது கருணாநிதி கட்டித் தழுவுகிறார். காரியம் முடிந்து விட்டால் , திறமைசாலியான வை.கோ. தனது மகனை மிஞ்சிவிடக் கூடாது என்பதற்காக கருவேப்பிலையாக தூக்கியெறியப்படுவார்; கடந்த முறை தி.மு., .தி.மு.. கூட்டணியின் போதும் கூட அப்படித்தான் நடந்தது.
        
         தி.மு.., .தி.மு..இன்னும் சில உதிரிக்கட்சிகள் இணைந்து கூட்டணியாக நின்றாலும் கூட 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது; சொல்லப்போனால் இக்கூட்டணி கடந்த பாரளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்தது போல பா... தலைமையிலான கூட்டணியை விட கீழான நிலையிலேயே இருக்கும். 

தமிழகத்தில் வை.கோ.விற்கு இருக்கும் மக்கள் ஆதரவு என்பது இலங்கைத் தமிழர் விஷயத்தில் அவரது உறுதியான நிலைப்பாட்டிற்கான ஆதரவே.இந்நிலையில் அவர் இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைக்கு காரணகர்த்தாக்களில் ஒருவரான கருணாநிதியோடு கூட்டணி காண்பது அவரது அரசியல் மற்றும் பொது வாழ்க்கைக்கு இறுதியாகிவிடும். தி.மு.. வுடன் கூட்டணி என்ற அவரது முடிவு ஒரு தற்கொலை முடிவாகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு கூட்டணியை அமைத்து பதவிகளையும் பணத்தையும் பெறுவதை விட அவர் அரசியலை விட்டே ஒதுங்கி விடலாம். இத்தனைக் காலம் ஈட்டிய நற்பெயரும் புகழுமாவது அவருக்கு இறுதி வரை மிஞ்சியிருக்கும். 

          தனது மகன் மு.. முத்துக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்தவர் கருணாநிதி; அடுத்த மகன் ஸ்டாலினுக்காக கொலைப் பழி சுமத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டவர் வை.கோ. உலக அரசியலிலேயே மிகப்பெரும் ஊழலான  2ஜி, தி.மு.. வை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கசாப்புக் கடைக்காரனை தேடிச் செல்லும் ஆடாக, வை.கோ. தன் அரசியல் பயணத்தை தொடர முயலுகிறார்.
வை.கோ தமிழர்களின் நலனுக்காக கடுமையாக பாடுப்பட்டவர் மற்றும் ஒரு தூய்மையான அரசியல்வாதி என்ற காரணத்திற்காக அவர் தனது இந்த தி.மு..வுடனான கூட்டணி முற்சியைக் கைவிட வேண்டும்.

          இதுதான் உலகத் தமிழர்களின் விருப்பமாகவும் இருக்கும். 

1 comment:

  1. vaiko knows karuna well so he will not join in dmk alliance sure.

    ReplyDelete