Tuesday 8 April 2014

இது ஒரு அச்ச உணர்வின் வெளிப்பாடு



.

         நரேந்திர மோடி இங்கே ( தமிழகத்திற்குள் )நுழையக் கூடாது; மோடிக்கு இங்கே இடமில்லை என்று கோவையில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியிருக்கிறார்.

         மோடியை ஒரு வகுப்புவாதியாகவோ மதவாதியாகவோ கருணாநிதி என்றுமே எண்ணியதில்லை. ஏனெனில், மத்திய பா... அரசில் கருணாநிதியின் 'மனசாட்சி' முரசொலி மாறன் உட்பட பல தி.மு..வினர் அமைச்சர்களாய் இருந்தபோதுதான் குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் எரிப்பும் அதன் தொடர்ச்சியாக பெரும் கலவரங்களும் நிகழ்ந்தன. அப்போதெல்லாம் கருணாநிதியோ அவரது மனசாட்சி மாறனோ இக்கலவரங்களுக்காக மோடியை குற்றம் சாட்டியதேயில்லை. அதற்காக மத்திய பா... அரசிலிருந்தோ பா... கூட்டணியிலிருந்தோ விலகியதுமில்லை. அக்கலவரங்களுக்கு மோடிதான் காரணம் என்றால் மதச்சார்பற்ற கொள்கையில் என்றும் உறுதி(?)யோடிருக்கும் கருணாநிதி பா... கூட்டணிக்கு தனது ஆதரவை வாபஸ் பெற்றிருக்க மாட்டார..? குஜராத் கலவரங்கள் நிகழ்ந்தது 2002ல்; ஆனால், கருணாநிதி 2004 வரை பா... கூட்டணியில் தொடரத்தானே செய்தார். எனவே மோடியை ஒரு வகுப்புவாதியாகவோ முஸ்லீம்களுக்கு விரோதியாகவோ கருணாநிதி கருதவில்லை என்பது நிச்சயமான உண்மை.

         அதோடு இந்த மக்களவைத் தேர்தலில் பாஜ..வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்பும் பா...வோடு கூட்டணி வைப்பதற்காக கருணாநிதி பல வகைகளிலும் முயற்சித்தது அனைவரும் அறிந்த ஒன்று.சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூட 'மோடி ஒரு சிறந்த நிர்வாகி.. அதனால்தான் குஜராத் மக்கள் தொடர்ந்து 3 முறையாக அவரை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் ' என்று அவர் மோடியைப் பாராட்டியிருந்ததையும் யாரும் மறக்க முடியாது.


         அப்படியிருக்க திடீரென்று கருணாநிதி மோடி பிரதமராவதற்கும், தமிழகத்தில் நுழைவதற்கும் ஏன் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருக்கிருக்கும் அச்சம்தான்.

         சிறந்த நிர்வாகத் திறமையும் ஊழல் கறை படியாதவருமான மோடி பிரதமராகி விட்டால், 2ஜி மெகா ஊழலில் அடித்த ஆயிரக்கணக்கான கோடிகள் விவகாரமும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் முழு விவரங்களும் வெளிவந்து விடும் என்ற அச்சம் கருணாநிதிக்கு வந்திருக்கிறது. அதோடு,.மு.கூ. ஆட்சியின்போது சம்பாதித்தது போல இனி கோடி கோடியாய் மக்கள் பணத்தைச் சுருட்ட முடியாது என்ற கவலையும் அவருக்கிருக்கிறது.

         இந்த அச்சம் மற்றும் கவலையின் காரணமாகவே கருணாநிதி திடீரென்று இப்படி மோடி தமிழகத்திற்குள்ளேயே நுழையக்கூடாது என்று ஆவேசப்பட்டிருக்கிறார். ஆனால், மோடி பிரதமராவதும் உறுதி; பிரதமராக தமிழகத்திற்கு வருவதும் உறுதி.

No comments:

Post a Comment