Thursday 3 April 2014

ஏமாற்று வேலை - ஒரு தொடர்கதை




வரும் மக்களவைத் தேர்தலுக்காக கருணாநிதி வெளியிட்ட தி.மு..வின் தேர்தல் அறிக்கையில், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயம் சென்னையில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி தேர்தலுக்குப் பின் தி.மு.., காங்கிரசை ஆதரிக்கும் என்று அறிவித்திருக்கிறார். 

காங்கிரஸ் ஆட்சியில்தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு வகை செய்யும் மசோதா சட்டமாக்கப்பட்டது. அதிலும் தி.மு.. அம்மசோதாவை ஆதரித்ததாலேயே அம்மசோதா சட்டமானது. இந்நிலையில் தேர்தலுக்குப் பின் மீண்டும் காங்கிரசை ஆதரிக்கப்போவதாகக் கூறும் கருணாநிதி எப்படி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தடுக்க முடியும்..?

மேலும், 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும், கருணாநிதி தான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 'நடுத்தர குடும்பத்தினர்களின் சுய வேலைவாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம்' என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி 2006ல் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு காங்கிரசோடு சேர்ந்து மக்களவையில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை சட்டமாக்கிய கருணாநிதி 2014லும் அதே போல ஒரு வாக்குறுதியை தேர்தல் அறிக்கையின் மூலம் கொடுத்து அதே மூச்சில் தேர்தலுக்குப் பின் காங்கிரசை ஆதரிப்போம் என்று கூறுகிறார் என்றால் இந்த வாக்குறுதியின் மூலம் அவர் கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகளை எப்படி ஏமாற்றுகிறார் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  

அதே போல , தனியார் தொழில் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டிற்கு தி.மு.. பாடுபடும் என்று தேர்தல் அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாக கணக்கற்ற தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இத்தொழில் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா..? இல்லையே.

மொத்தத்தில் தி.மு..வின் அரசியலில் ஏமாற்று என்பது எப்போதும் ஒரு தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே தி.மு.. வை இம்முறையும் மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேன்ன்டும். அதுதான் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்லது.

No comments:

Post a Comment