Thursday 3 April 2014

பரிணாம வளர்ச்சி.



வாரணாசி தொகுதியில் மோடியைத் தோற்கடிப்பதே தனது இலட்சியம் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி வாராணாசியில் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவது நிச்சயமான ஒன்று. அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால், கெஜ்ரிவாலின் 'பரிணாம வளர்ச்சி'தான் பரிதாபத்திற்குரியதாயிருக்கிறது.

'ஊழலுக்கெதிரான இந்தியா' என்ற அமைப்பின் மூலம் பிரபலமான கெஜ்ரிவால், ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டுவர வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அன்னா ஹஸாரே மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் கலந்து கொண்டு ஊழலுக்கெதிரான போராளியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு அதன் காரணமாக டில்லியில் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களை வெல்லுமளவிற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த கெஜ்ரிவால்,

இப்போது ஊழலுக்கெதிரான இயக்கத்தையெல்லாம் மூட்டை கட்டி மூலையில் போட்டுவிட்டு,

ஊழல் ஆட்சியை அப்புறப்படுத்த மக்களின் பேராதரவுடன் போராடும்  நரேந்திர மோடியை தோற்கடிப்பதே தனது இலட்சியம் என்று அறிவிக்குமளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டிருப்பது பரிதாபத்திற்குரிய விஷயம்.
அவரது வேஷம் கலைந்து நிஜ உருவம் இப்போது முழுமையாக அம்பலத்திற்கு விட்டது.

ஊழலை ஒழிக்க புறப்பட்டு விட்டதாக ஆர்ப்பாட்டம் காட்டியவர் இப்போது ஊழலை ஒளித்து வைப்பதற்கு  முழுமூச்சுடன் களத்தில் இறங்கிவிட்டார்.

மக்கள் அவரது சின்னத்தின் மூலம் அவரையும் அவரது இயக்கத்தையும் ஒதுக்கித் தள்ளத் தயாராகி விட்டார்கள்.

No comments:

Post a Comment