Thursday 14 August 2014

இந்தியா


ஊழலில்லாத இந்தியா;
மக்கள் பணம் ஆட்சியாளர்களால்
சுரண்டப்படாத இந்தியா;
எங்கும் எதிலும் இலஞ்சம்
என்ற நிலை காணாத இந்தியா;
சாதிப் பற்றாளர்களும்
மத வெறியர்களும்
மக்களிடம் செல்வாக்கிழந்து,
சுயநலம் இல்லாதவர்களும்
பொது நலம், தேசநலம்
இவற்றில் அக்கறை கொண்டோர்
மக்கள் தலைவர்களாய் விளங்கி,
உழைப்பதில் விருப்பம் கொண்ட
மக்களால் நிறைந்த இந்தியா;



வலிமை கொண்ட இந்தியா;
பெருமை கொண்ட இந்தியா;
செழுமை கொண்ட இந்தியா;
ஒற்றுமை கொண்ட இந்தியா;
தீயவர்களும் பகைவர்களும்
தீண்ட அஞ்சும் இந்தியா
எங்கள் இந்திய தேசம்
என்பதில் பெருமை கொள்வோம்;
அத்தகைய இந்தியனாய்
வாழ்வதில் பெருமை கொள்வோம்;
அதற்கான இந்தியாவை
உருவாக்க உறுதி கொள்வோம்.

இந்தியா இந்தியர்களுக்கானது;
இந்தியர்கள் என்றும் அதைப் பாதுகாப்போம்.



 உலகெங்கும் நிறைந்து வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் 68 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment