Friday 4 October 2013

காட்சிகள் பிரமாதம்; வேஷம் எடுபடவில்லை.



இறுதியில், குற்ற வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி( எம்.பி, எம்.எல். மற்றும் எம்.எல்.சி.)களின் பதவிகளைப் பறிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கும் வகையில் மத்திய .மு.கூ. அரசால் கொண்டுவரப்பட்ட மசோதா மற்றும் அவசரச் சட்டம் இரண்டும் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இந்த சுபமான கிளைமாக்ஸில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பங்கு மகத்தானது.

      அமெரிக்கா சென்று திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் பேசும்போது, "அவசரச் சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக சோனியா காந்தி உட்பட காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவில் 2 முறை விவாதிக்கப்பட்டே முடிவெடுக்கப்பட்டது; அதே போல கேபினட் அமைச்சர்கள் நிலையிலும் அனைவரிடமும் விவாதிக்கப்பட்டே அவசரச் சட்டம் கொண்டுவரப் பட்டது" என்று கூறியிருக்கிறார். எனவே ஊழல் உட்பட கிரிமினல் குற்றம் புரிந்த எம்.எல்.. எம்.பி.க்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் காங்கிரசின் ஒட்டு மொத்த முடிவேயாகும்; இது ராகுல் காந்திக்கு தெரியாது என்று கூற எவ்வித முகாந்திரமுமில்லை.

     ஏனெனில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிகளுக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால்,( அப்பீலுக்காக காத்திராமல்) உடனடியாக அவர்களது எம்.பி, எம்.எல்.. பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் ஜூலை மாதம் 10ஆம் தேதி. இந்தத் தீர்ப்பு வந்த உடனேயே தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி .மு.கூ. அரசு உச்ச நீமன்றத்தில் Revision Petition மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அப்போதெல்லாம் ராகுல் அமைதியாகத்தான் இருந்தார்.  
Revision Petition மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

      பிறகு .மு.கூ.அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்க மக்கள் பிரதிநிதித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ராஜ்யசபாவில் மசோதா கொண்டு வந்தது; அப்போதும் ராகுல் அமைதியாகத்தான் இருந்தார்.அந்த மசோதா சட்டமாக காலதாமதமாகும் என்பதால், மருத்துவக் கல்லூரி சீட்கள் ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்த ரசீத் மசூத் என்ற தனது காங்கிரஸ் கட்சி எம்.பி.மற்றும் 900 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி தண்டனையை எதிர்பார்துக் கொண்டிருந்த .மு.கூட்டணித் தலைவர்களில் ஒருவரான லாலு பிரசாத் யாதவையும் காப்பாற்றுவதற்காக ஒரு அவசரச் சட்டமும் .மு.கூ. அரசால் பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் ராகுல் அமைதியாகத்தான் இருந்தார்.

    
ஆனால், ஊழல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸால் கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திடக் கூடாது திரு. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி போன்ற பா... தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து முறையிட ஜனாதிபதியும் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்தார். ஊழல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கொண்டு வந்த இந்த அவசரச் சட்டம் இப்படி பா... தலைவர்களின் முயற்சியாலும் ஜனாதிபதி கையெழுத்திட மறுத்ததாலும் முடங்கிப் போனது.
      
     இத்தனைக் காலம் அமைதியாய் இருந்த ராகுல் திடிரென்று இதில் முக்கை நுழைத்தார்.  " அவசரச் சட்டம் ஒரு அறிவு கெட்டத் தனமான முயற்சி; அது கிழித்தெறியப்பட வேண்டிய ஒன்று" என்று வீராவேசமாய் முழங்கினார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ரூ1,76,000 கோடி 2ஜி ஊழல், 1,80,000 கோடி நிலக்கரி ஊழல் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உலக மகா ஊழல்கள் நாட்டை அதிர வைத்த போதெல்லாம் வாயையே திறக்காதிருந்த ராகுல் திடீரென்று ஊழல் எதிர்ப்பு வேசம் கட்ட ஆரம்பித்தார்.

      என்ன செய்வது..? பாராளுமன்றத் தேர்தல் அருகில் வந்து விட்டதே.அதோடு, காங்கிரஸ் தனது குடும்பத்திற்கு உரிமையான ஒரு நிறுவனம் என்பதையும் தனது நாடகத்தின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால், இந்த நாடகம் மக்களிடம் எடுபடாமல் போவிட்டது என்பது வேறு விஷயம்.

     பா... தலைவர்களின் முயற்சியாலும் மேதகு ஜனாதிபதியின் விழிப்பான நடவடிக்கையாலும் ஊழல் மற்றும் கிரிமினல் அரசியல்வாதிகளைக் காப்பாற்ற காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன்..

No comments:

Post a Comment