Friday 3 August 2018

மதம் மாற்றம் வேண்டாம்.



இந்தியாவில் ஹிந்து மதத்திலிருந்து கிறித்தவ மற்றும் முஸ்லீம் மதங்களுக்கு மாறுபவர்கள் எவருமில்லை; மாற்றப்படுபவர்கள்தான் உண்டு. பொய்யான செய்திகள் மற்றும் வாக்குறுதிகளின் பேரிலும் ஏமாற்றியும் மதம் மாற்றப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்தியா முஸ்லீம் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, கத்தி முனையின் கீழ் இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டனர். அதன்பின் பிரிட்டிஷார், போர்த்துகீஷியர்கள்,டச்சுக்காரர்கள் போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்கள் வியாபாரம் செய்வது என்ற பேரில்  இந்தியாவிற்கு வந்து, அப்போது நாட்டை ஆண்டு கொண்டிருந்த ஹிந்து மன்னர்களிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி சிறிது சிறிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிய பின்  மக்களிடையே கிறித்துவ மதம் திணிக்கப்பட்டது.

ஏழைகளுக்கு மருத்துவ உதவி,கல்வியளித்தல்,  வேலைவாய்ப்பு போன்ற சில சேவைகள் அளிக்கப்பட்டு அதற்கு விலையாக அப்பாவி மக்கள் கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்டனர். உண்மையில் சொல்லப்போனால், மதம் மாற்றுவதற்காகவே அந்த சேவைகள் அளிக்கப்பட்டன . இப்போதும்கூட அதே நிலைதான் நீடிக்கின்றன.  சேவைகள் என்ற முகமூடியை அணிந்து கொண்டு மதம் மாற்றும் வேலைகள் மிக மிக அதிக அளவில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன..

ஹிந்துக்களிடையே இருக்கின்ற அறியாமை ஒற்றுமையின்மை மற்றும் அளவுக்கு மிஞ்சிய பரந்த மனப்பான்மை போன்றவற்றை மதம் மாற்றம் செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு  மதம் மாற்றும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
"ஆயிரம் உண்டிங்கு சாதி.. எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி " என்று சுதந்திரப் போராட்டத்தின்போது கேட்டார் விடுதலைக் கவி பாரதியார். “ஆயிரம் உண்டிங்கு ஜாதி  எனில் வேற்று மதங்களுக்கு மாறுவது என்ன நியாயம்.” .என்று கேட்க வேண்டிய நிலை இப்போதிருக்கிறது.

ஹிந்து மதம்  நமது மதம்.
ஹிந்துக்கள் ஹிந்து மதத்தைப் பற்றி சொல்லப்படும் பொய்யான விஷயங்களையும் கட்டுக்கதைகளையும் புறக்கணித்து தம் மதத்தின் பெருமைகளை உணர வேண்டும். உலகின் சிறந்த மதம் ஹிந்து மதம் என்று சொன்னால் அது வீண் பெருமையல்ல. நாம் ஹிந்துக்களாகப் பிறந்தது நமக்கு பெருமைதரும் விஷயம் என்று சொன்னால், அதில் எந்த மிகைபடுத்துதலும் இல்லை.

நாம் வாழும் பகுதிகளில் பார்த்திருப்போம். கிறித்துவ மதத்தைச் சார்ந்த ஆண்களும் இளம்பெண்களுமாய்  பலர் நகரின் முக்கிய பகுதிகளில் நின்று கொண்டும் கிராமம் கிராமமாய்ச் சென்றும்  கிறித்துவர்களாக மாற வலியுறுத்தும் பொய்யான தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து வருகின்றனர். கிறித்துவ அமைப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்களில்  பயிலும் ஹிந்து மாணவ மாணவிகளை சிறிது சிறிதாக மூளைச் சலவை செய்து மதம் மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. கிறித்துவ மெஷினரிகள் நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகளும் கூட இதேபோன்று மதம் மாற்றுவதை நோக்கமாக கொண்டே செயல்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல், கிறித்துவ பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அக்கூட்டங்களில்  கிறித்தவத்துக்கு மாறினால் நோய்கள் குணமாகின்றன; குருடர்கள் பார்க்கின்றனர்; செவிடர்கள் கேட்கிறார்கள்; முடவர்கள் நடக்கின்றனர் என்றெல்லாம் கற்பனையில் மட்டுமே நடக்கக் கூடிய கட்டுக்கதைகளையெல்லாம் சொல்லி கிறித்துவத்திற்கு மாற மக்கள் தூண்டப்படுகின்றனர். இவைகள் எல்லாம் உண்மைகள் என்றால், கிறித்துவத்தை  பின்பற்றும் மக்கள் எல்லாம் நோய்நொடிகள் இல்லாமல் சுபிட்சமாகவும் செழிப்புடன் அல்லவா வாழ வேண்டும். ஆனால், உண்மையில் அப்படியில்லையே.

இப்படி பலவகைகளிலும் பல்லாயிரக்கணக்கான கோடிகள்  செலவளித்து ஹிந்துக்களை கிறித்தவர்களாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன.
இப்படி அப்பட்டமான பொய்களைச் சொல்லியும், பல்லாயிரக்கணக்கான கோடிகளைச் செலவளித்தும் ஹிந்துக்களை மதம் மாற்ற வேண்டிய அவசியமென்ன..?

காதலும் மதம் மாற்றமும்
காதலின் பேராலும் கிறித்துவராகவும் முஸ்லீமாகவும் மதம் மாற்றும் செயல்கள் நடைபெறுகின்றன. காதலுக்காக மதம் மாறுபவர்கள் சிந்திக்க வேண்டும். பரஸ்பர அன்பும் நேசமுமே காதல் எனப்படுகிறது. அந்தக் காதல் திருமணமாக முடிய மதம் மாற்றம் தேவைப்படுகிறது எனில் அந்தக் காதல் அன்பின் அடிப்படையிலானது இல்லை என்பதுதானே நிதர்சனம்.. திருமணத்துக்காக ஹிந்து மதத்திலிருந்து மதம் மாற நிர்ப்பந்திக்கப்படும் ஆணோ பெண்ணோ, அதே திருமணத்திற்காக தன்னைக் காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏன் ஹிந்துவாக மதம் மாறக் கூடாது என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டால் நிலைமை மாறி விடும்.காதலுக்காக மதம் மாற்றம் விலையாக வைக்கப்படும்போது, அங்கே  காதல் என்பது பொய்யானது என்பதை உண்ர வேண்டாமா..?
காதலுக்காக கிறித்தவராக முஸ்லீமாக மதம் மாறுவதை விட காதலை நிராகரிப்பதே உத்தமம். இது மதவெறியின் அடிப்படையிலான சிந்தனை அல்ல. காதலை விட தங்கள் மதமே பெரிது என காதலர்களில் ஒருவர் வலியுறுத்த முற்படும்போது, அது உண்மையான காதல் அல்ல என்பது தெளிவாகிறது. இந்நிலையில் அக்காதல் வலையிலிருந்து விலகிக் கொள்வது அல்லது மற்றவரும் அதே நிலையை வலியுறுத்த முற்படுவதில் என்ன தவறிருக்க முடியும்..? இதில் என்ன மதவெறி இருக்கிறது..?

மதமும் தவறான நம்பிக்கைகளும்
மதத்தின் பேராலான சில மூட நம்பிக்கைகள், தவறான நடைமுறைகள் வழிகாட்டுதல்கள் ஹிந்து மதத்தில் மட்டுமல்ல. அனைத்து மதங்களிலிலுமே இருக்கின்றன. இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களிலிருக்கும் மூட நம்பிக்கைகளை பட்டியலிடத் துவங்கினால் ஒரு பெரும் புத்தகமே எழுத வேண்டியிருக்கும். இயேசு மீண்டும் வருவார் என்பதே கடந்த 2000 வருடங்களுக்கும் மேலாக சொல்லப்பட்டுவரும் பெரும் மூட நம்பிக்கையாகத்தானே இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால், ஹிந்து மதம் மட்டுமே இத்தகைய தவறான விஷயங்களை  மாற்றிக் கொள்ளவும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும் செய்கிறது. பல நூற்றாண்டுகளாக இதுபோன்ற மாற்றங்களை ஏற்றுக் கொண்டு மக்களின் முன்னேற்றத்திற்கான மதமாக ஹிந்து மதம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஜாதியின் பேரால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று ஹிந்து மதம் வரையறுப்பதாக கூறப்படுவதும் அப்பட்டமான பொய்யே. ஒவ்வொருவர் செய்யும் தொழிலின் அடிப்படியில்  பிரிவுகள் உருவாக்கப்பட்டனவே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல. அப்படியிருந்தால், வியாசரும் வால்மீகியும் எப்படி எக்காலத்திலும்  அழியாத காவியங்களை உலகுக்கு தந்திருக்க முடியும்..?

இஸ்லாம்,கிறித்துவத்தில் காணப்படும் மதப் பிரிவுகள் கணக்கற்றவை. இஸ்லாமிய நாடுகளில் இத்தகைய மதப் பிரிவுகளால் ஏற்படும் மோதல்களில் இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறனர். இன்றும் டஜன் கணக்கில், நூற்றுக் கணக்கில் இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களே கொன்று குவிப்பதை தினசரி செய்திகளாக பார்க்கவும் கேட்கவும் செய்து கொண்டுதானே இருக்கிறோம். 

ஒவ்வொருவரும் தாங்கள் ஹிந்துவாக பிறந்தததில், ஹிந்துவாக வாழ்வதற்காகப் பெருமைப்படவேண்டும். உற்சாகம் கொள்ள வேண்டும்.
ஹிந்துக்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று ஏதும் இல்லை. அனைவரும் சமமானவர்களே. தீண்டாமைக் கொடுமை சமுதாயத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், அது சமுதாயத்தில் நிலவுகிறதே தவிர அவை ஹிந்து மதத்தின் கொள்கைகள் இல்லை. வேதங்களிலோ மற்ற ஹிந்துமதப் புத்தகங்களிலோ தீண்டாமை கூறப்படவும் இல்லை.. இவன் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவன்..இவன் தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவன் ..இவன் தீண்டத்தகாதவன் என்பதெல்லாம் சுயநலமிக்க சில மனித சக்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு விஷயமே தவிர,  ஹிந்து மதத்தால் கற்பிக்கப்பட்ட கருத்து அல்ல.

தீண்டாமை என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடூர விஷயம். அது ஒழிக்கப்பட போராட்டங்களும் தேவைதான். ஆனால், இந்தப் போராட்டங்கள் இத்தகைய கருத்துக்களை மக்களிடையே திணிக்க முயலும் சுயநல சக்திகளுக்கு எதிராக இருக்க வேண்டுமே தவிர ஹிந்து மதத்திற்கு எதிராக இருக்கக் கூடாது. அதற்காக மதம் மாற்றப்படும் முயற்சிகளுக்கு பலியாவது மிகப்பெரும் தவறே. அது சரியான தீர்வும் அல்ல.  பகவான் கிருஷ்ணர் " தத்வம் அஸி"  இறைவன் நீயே என்கிறார். ஹிந்து மதத்தில் ஒவ்வொருவரும் இறைவனின் வடிவமே.

மதமாற்றம் தனிநபர் பிரச்னை அல்ல.
மதமாற்றம் தனிநபர் பிரச்னை மட்டுமல்ல..சமூகப் பிரச்னையும் கூட. மதம் மாறுவதால் சமூகச் சூழல் மாறுகிறது. குடும்பத்தின் மற்றும் நாம் வாழும் சமுதாயத்தின் பண்பாடு, வாழ்க்கை முறை, கலாச்சாரம் அனைத்தும் மாறுகின்றன.

நேற்று வரை நம்மோடு கண்ணனாக, இராமனாக, பார்த்திபனாக வைதேகியாக, ஈஸ்வரியாக வாழ்ந்தவர்கள் ஆல்பர்ட்டாக, சூசன்னாவாக, முபரக்காக, மாலிக்காக மாறும்போது, அவர்களது செயல்பாடுகள் அனைத்துமே மாறிவிடுகின்றன. அவர்கள் தேசத்தின் பெருமைக்குரிய விஷயங்களையெல்லாம் தேசத்துக்கே அடையாளமாக இருக்கின்ற தன்மைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தனது சொந்த நாட்டுக்கே  ஒரு அந்நியன் போல எண்ணிக் கொள்ளும் வகையில் சிந்திக்கவும் செயல்படவும் ஆன நிலைக்கு மாற்றப்படுகிறார்கள்.

இதனால்தான் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து பிற மதத்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பகுதிகள் பிரச்னை மிகுந்த பகுதிகளாக மாறிவிடுகின்றன.அப்பகுதிகளில்   தேசத்துக்கு எதிரான பிரிவினை கோஷங்கள் ஒலிக்க ஆரம்பித்துவிடுகின்றன. நாடு சுதந்திரமடைந்தபோது, பாகிஸ்தானும் இப்போதைய பங்களாதேசும்   நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடாக மாறியதற்கு காரணம் அப்பகுதிகளில் ஹிந்துக்களைவிட மதம் மாற்றப்பட்ட  இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததுதான் காரணம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பாகிஸ்தான் பங்களாதேஷ் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம்கள் அரேபியாவிலிருந்தோ வேறு இஸ்லாமிய நாடுகளிலிருந்தோ இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்கள் அல்லர். நம் சகோதரர்களாயிருந்த ஹிந்து மக்கள்தான். பல்வேறு காரணங்களுக்காக மதம் மாறியவர்கள் ஹிந்துக்களோடு தாம் இணைந்து வாழ முடியாது தாங்கள் தனி இனம் என்று கூறி தனி நாட்டினராக பிரிந்துபோன நிலையை நாம் மறந்துவிட முடியாது.
இப்போதும் கூட இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவாகவும் பிற மதத்தினர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும் பகுதிகளில் பிரச்னைகள் நிறைந்ததாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது இதில் ஜம்முவில் ஹிந்துக்கள் அதிகமாகவும், லடாக் பகுதியில் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவினரான புத்த மதத்தினர் அதிகமாகவும் காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகமாகவும் வாழ்கின்றனர்.

இதில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காஷ்மீரில் மட்டுமே வன்முறைகளும் பயங்கரவாதக் கலவரங்களும் மிகுந்து காணப்படுகின்றன.. ஜம்மு லடாக் பகுதிகளில் பொதுவாக அமைதியான சூழலே காணப்படுகின்றன.. அதேபோன்று பழைய ஹைதரபாத் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாட்டின் பிறபகுதிகளும் கிறித்துவர்கள் மிகுந்து காணப்படும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளும்  பிரச்னைக்குரிய தாகவும்  தேசத்திற்கு எதிரான கருத்துகள் விதைக்கப்படும் பகுதிகளாகவுமே விளங்கிவருகின்றன.

மதம் மாற்றம் தனி நபர் பிரச்னை அல்ல.. தேசத்தையே பாதிக்கிற பிரச்னை என்பதற்கு இவையெல்லாம்கண்கண்ட சாட்சியங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

சிந்தித்து பகுத்தறிவது அவசியம்
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இங்கு  ஹிந்து மதத்திலிருந்து கிறித்தவர்களாக முஸ்லீம்களாக மதம் மாறியவர்களுக்கு விசேஷமான கூடுதல் நன்மைகள் கிடைக்குமென்றால், நோய் நொடிகள் நீங்குமென்றால் உங்கள் பக்கத்து வீடுகளில் பக்கத்து தெருக்களில் பக்கத்து கிராமங்களில் நகரங்களில், பக்கத்து நாடுகளில் வசிக்கும் மதம் மாறியவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள். அந்தச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள் முற்றிலும் பொய் என்பதை நீங்களே உணர்ந்துகொள்ள முடியும். மதம் மாறியதால் யாரும் பெரிதாக எதுவும் பெற்றுவிடப் போவதில்லை; ஹிந்துவாக இருப்பதால் நீங்கள் எதையும் இழந்துவிடவுமில்லை. மாறாக, ஹிந்துவாக இருபத்தால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ள பல விஷயங்கள் உண்டு.

மதம் மாற வேண்டாம்.ஹிந்து மதம்  தமிழர்களின் மதம்;இந்த தேசத்தின் மதம்; உங்கள் முன்னோர்களின் மதம்;  பணத்துக்காகவோ காதலுக்காகவோ, நோய் நொடிகள் குணமாகும் போன்ற பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்தோ, சமுதாயத்தின் சுயநலவாதிகள் சிலரது ஜாதியின் பேராலான ஒதுக்கி வைப்பு முயற்சிகளுக்கு பணிந்தோ பயந்தோ அல்லது பதிலடியாகவோ இதுபோன்ற வேறு எவ்வித கரணங்களுக்காகவோ மதம் மாற வேண்டாம். இதுபோன்ற எண்ணங்களையே முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். இந்தக் காரணங்களின் அடிப்படியில் மதம் மாற்ற தூண்டுபவர்களின் சதிவேலைகளுக்கும்  பலியாகாதீர்கள். ஹிந்து மதம் நம் மதம். குறிப்பிட்ட பிரிவினர்க்கோ ஜாதியினர்க்கோ உரியதல்ல; நம் அனைவருக்கும் சொந்தமான மதம். நமது சமுதாயத்தின் மதம்.

முன்பே சொன்னதுபோல ஹிந்து மதத்தைவிட கிறித்துவ முஸ்லீம் மதங்களில் உயர்ந்த  ஆன்மீக கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன..இறைவனை அடையும் வழிமுறைகள் நிறைந்திருக்கின்றன ..மக்களை துன்பங்களிலிருந்து விடுதலை அடையச் செய்யும் வழிமுறைகள் மிகுந்திருக்கின்றன என்ற காரணங்களினால் மதம் மாறியவர்கள் யாரும் கிடையாது. ஏமாற்றும் பிரச்சாரங்களுக்கும் அறியாமைக்கும் பலியாகி மதம் மாறியவர்களே உண்டு.
இப்படி ஏமாற்றப்படுபவர்களாக நாம் இருக்கக் கூடாது. இந்நிலை மாற வேண்டும் ; மாற்றப்பட வேண்டும். ஹிந்துக்களாயிருக்கும் வரைதான் நாம் தமிழர்களாயிருக்க முடியும் . இந்தியர்களாயிருக்க முடியும். எந்த ஜாதியினரையும் தாழ்ந்த ஜாதி என்று கூறி புறக்கணிக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு உட்படுத்தும் கொடும்பழக்கத்தை தவிர்ப்போம்.

நாம் அனைவருமே ஹிந்துக்கள். மதம் மாற்றப்படும் முயற்சிகளுக்கு நாம் பலியாகாமல் இருப்பதோடு மற்றவர்களும் பலியாகாமல் பாதுகாப்போம். நாம் இணைந்திருப்போம். என்றும் ஹிந்துவாகவே இருப்போம்.  


No comments:

Post a Comment